புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்து நின்று போன ப்ராஜக்ட்டுகள் ஒன்றிரண்டுதான். அவர் பாதிரியார் கெட்டப்பில் தோன்றும் இந்த ஸ்டில்லும் இதற்கான செய்தியும் உங்களுக்குப் புதிதாக இருக்கும் என நினைக்கிறேன். (Control மற்றும் + கீயை அழுத்தி பெரிதுபடுத்திப் பார்த்துக் கொள்ளவும்.)
நான் ரசித்துச் சிரித்த இந்த ஜோக்குகள் உங்களைச் சிரிக்க வைக்காம போயிடுமா என்ன...?
‘சிவாஜி’ நாடகத்துக்கான போஸ்டர்! இதோட ஆண்டைப் பாக்கறப்ப நிறையப் பேர் பார்த்திருக்க வாய்ப்பில்லைன்னு தோணிச்சு.
கொறிக்க... இன்னும் கொஞ்சம் ஜோக்ஸ்:
நகைச்சுவை துணுக்குகள் அனைத்தும் அருமை. கூடவே தந்திருக்கும் தெரியாத விஷயங்களும் அருமை. “சிவாஜி” நாடகத்திற்கு கட்டணம் என 5-8-0, 2-4-0, என்றெல்லாம் போட்டிருக்கிறதே, அது என்ன கணக்கு, அரையணா, காலணா மாதிரி எப்படி சொல்லணும்?
ReplyDeleteமுதல் இரண்டும் பட ஜோக்குகள் [புலி, தவளை] - சிரித்து மாளலை போங்க!
சிவாஜி போஸ்டர்ல அக்கால வார்த்தைகளை ரசிச்சேன். அவ்வளவே. இந்த கட்டண விஷயம் எனக்கும் புரியலை வெங்கட். நண்பர்கள் யாராவது விளக்குவாஙகளான்னு பாப்போம். ஜோக்குகளை ரசிச்சுச் சிரிச்ச உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி!
DeleteThis comment has been removed by the author.
Deleteஇந்த பகுதி மிகவும் ஜாலியாக இருக்கிறது.தொடருங்கள்.
Delete1957 ஆம் ஆண்டு வரை நாம் ரூபா, அணா, பைசா, தம்பிடி என்ற அலகுகளை பயன்படுத்தி வந்தோம்.
ஒரு ரூபா= 16 அணா
ஒரு அணா= 6 பைசா
ஒரு பைசா= 2 தம்பிடி.
எனவே ஒரு பொருளின் விலை ரூபா-அணா-பைசா என்ற முறையில் குறிக்கப்படும்.
5-8-0 5 ரூபா,8 அணா என்பதாகும்.
1-11-1957 முதல் நாம் அணா,தம்பிடியை விலக்கிவிட்டு,மெட்ரிக் முறைக்கு மாறினோம்.
இதில் ஒரு ரூபா=100 பைசா என்று இருந்தது.
ஏற்கனவே இருந்த பைசாவிடம் இருந்து இதை பிரித்து சொல்வதற்காக இது "நயா பைசா" என அழைக்கப்பட்டது.(ஹிந்தியில் "நயா" என்றால் "புதிய" எனப்பொருள்.)சில வருடங்களுக்குப்பிறகு இந்த நயா என்ற அடைமொழி நிறுத்தப்பட்டது.
இன்னொரு சுவையான விஷயம்.1945 ஆம் ஆண்டு தங்கத்தின் விலை ஒரு கிராம் ஆறு ரூபா.
அதாவது இந்த கட்டணம் (5-8-0)சுமார் ஒரு கிராம் தங்கத்தின் விலை.தற்போதைய மதிப்பு சுமார் 3000 ரூபா.
Ganpat Sir! இந்த படத்தைத்தான் சேகரித்தேனேயன்றி இத்தனை தகவல்களை அல்ல. மிகத் தெளிவான விளக்கம் தந்த உங்களுக்கு என் உளம்நிறைந்த நன்றி!
Deleteதெரியாத தகவல்.... 5-8-2 என்றால், 5 ரூபா, 8 அணா, 2 தம்படி.... நல்ல விளக்கம் நண்பர் கண்பத்...... மிக்க நன்றி....
Deleteஅன்றைய தினங்களை இன்று
ReplyDeleteஎம் முன் மலர வைத்த நண்பரே..
நண்பர் வெங்கட் நாகராஜ் சொன்னது போல
இங்கே பழையவைகள் நிறைய நினைவு படுத்துகின்றன...
எழுத்து மாற்றம் அதில் முக்கியமான ஒன்று..
"ணா" என்ற எழுத்து மாற்றத்தை இயைபாக காணலாம்..
தொடரட்டும் உங்கள் கத்தரிப்புகள்
அழகாய் யாம் படிக்க சித்தரிப்புகள்..
மிகச் சரி. அண்ணாதுரை என்ற எழுத்தின் அக்கால வடிவத்தை நான் மிக ரசித்தேன். நீங்கள் ரசிக்க கத்தரிப்புகள் தொடரும் மகேன். மிக்க நன்றி.
Deleteகடம் தவளை ஜோக் அருமையிலும் அருமை, என்ன ஒரு கற்பனைத் திறன்
ReplyDeleteஅந்தக் கால ஜோக்குகளைப் போல் ரசித்து சிரிக்கும் அளவிற்கு சித்திரம் இன்று யாரும் வரைவதில்லை. என்ன தான் கணினியில் படகலவை விளையாட்டு விளையாண்டலும் இவற்றின் மூலம் நாம் பெறும் ரசனையை படக் களவியல் தர முடியாது என்பது என் தாழ்மையான கருத்து
அக்கால ஜோக்குகளின் கற்பனைத் திறனைக் கண்டு வியந்து சிரித்த உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி.
Deleteநகைச்சுவை அனைத்தும் அருமை
ReplyDeleteநகைச்சுவைகளை ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
DeleteAndha munivar pada joke super
ReplyDeleteஜோககை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteதவளை காத மூடிட்டு ஓடுறது பயங்கர சிரிப்பு ...
ReplyDeleteரசிச்சுச் சிரிச்சீங்களா தென்றல்! ரொம்ப சந்தோஷம் எனக்கு. உங்களுக்கு என் இதய நன்றி.
Deleteதல வடிவமைப்பே அருமையாய் இருக்கிறது. :)
ReplyDeleteஎழுத்தாளர் ஏகாம்பரம் வெடிச்சிரிப்பை வரவழைக்கிறார்.!
தள வடிவமைப்பு அழகாய் இருக்கிறதென்றால் அதன் முழுப் பெருமையும் ‘ப்ளாக்கர் நண்பன்‘ அப்துல் பாஷித் அவர்களையே சேரும். அவரின் உதவியுடன் தான் இது சாததியமானது. அவருக்கு என் இதயம் நிறைந்த உங்கள் மூலம் நன்றி தெரிவிக்கிறேன். ஜோக்கை ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி.
Deleteமேய்ச்சல் நிலத்தில் தவளைப் பாய்ச்சல் என்னை மிகவும்
ReplyDeleteகவர்ந்த நகைச்சுவை!
சா இராமாநுசம்
ஆம்... வருகை தந்த அனைவருமே அந்தத் தவளை கார்ட்டூனை ரசிப்பது மகிழ்வான விஷயம். இனியும் தொடர முயல்கிறேன். த்ங்களுக்கு என் இதய நன்றி ஐயா.
Deleteஎல்லா நகைச்சுவை துணுக்குகளும் நன்றாயிருந்தாலும் அந்த ‘தேவி பேரடைஸ்’ நகைச்சுவை துணுக்குதான் ‘.சூப்பர்’
ReplyDeleteஆஹா... உங்களை அந்த ஜோக் மிக ரசிக்க வைத்தது என்பதில் மகிழ்ச்சி நண்பரே. தங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteதேடினும் கிடைக்காத அற்புதமான கத்தரிப்புகள்
ReplyDeleteஅந்த சிவாஜி விளம்பரம் கண்டு மெய் சிலிர்த்தேன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
பழமையின் சிறப்பை உணர்ந்து ரசித்து மகிழ்ந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஸார்.
Deleteசமீபத்தில் பொம்மை சாரதி அவர்கள் எழுதிய 'வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்.ஜி.ஆர்' என்னும் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் இயேசுநாதர் மற்றும் பரமபிதா ஆகிய இரு படங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். செய்தி அறிந்ததாய் இருந்தாலும் காட்சி புதியது. பகிர்வுக்கு நன்றி கணேஷ்.
ReplyDeleteசிவாஜி நாடக விளம்பரத்தின் தேதியில் என் அப்பா கூட பிறந்திருக்கவில்லை. பழைய சுவாரசியமிக்க அச்சுத்தாள் விவரங்களை, இன்றைய தலைமுறையினரும் அறிந்து ரசிக்கும் விதமாய், அழகாய் கத்தரித்து வெளியிடும் தங்கள் முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கது.
நகைச்சுவைகள் அனைத்தும் பிரமாதம். மீண்டும் நன்றியும் பாராட்டும் உங்களுக்கு.
‘வாழ்ந்து காட்டிய வள்ளல்’ புத்தகமா? தேடிப் பார்த்து வாங்கி விடுகிறேன் நானும் ரசிக்க. புத்தகம் பற்றிக் குறிப்பிட்டதற்கும், கத்தரித்து வெளியிடும் என் முயற்சிக்கு நீங்கள் தரும் ஊக்கத்துக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள் தோழி!
DeleteOLD IS REALLY REALLY GOLD - WHETHER IT IS CARICATURE JOKES OR DIALOGUE JOKES - REALLY SUPERB AND QUITE HILARIOUS.
ReplyDeleteபழமையை ரசித்து மகிழ்ந்து பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteகடம் வித்துவான் வாசிக்க தவளை போகும் வேகம் ரசித்தேன் அருமையான பழைய விடயத்தை மீட்டிப்பார்க்க வைத்த பதிவு!
ReplyDeleteநகைச்சுவையை ரசித்துச் சிரித்த நண்பன் நேசனுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteபுதையல் தான் போங்க!
ReplyDeleteபுதையலை ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.
Deleteம்ம்ம்
ReplyDeleteஇன்னைக்குதான் பார்க்கிறேன் இந்த தளத்தை
உங்கள் மேய்ச்சலை வாசிக்க
இனி அடிக்கடி வருகிறேன் சார்
மைதானத்துக்கு வந்திருக்கும தங்களுக்கு நல்வரவு. தொடரட்டும் உங்கள் வரவு. என் இதயம் நிறை நன்றி.
Deleteசார் ! இது உங்க மைதானம் தானா ? முதல் முறையாக வருகிறேன். நகைச்சுவையை ரசித்தேன். கட்டணம் எல்லாம் பைசா .. அனா கணக்கு !
ReplyDeleteமுதல் வருகையாக வந்துள்ள உங்களுக்கு நல்வரவு நண்பர் தனபாலன். நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteகணேஷ் சார்,
ReplyDeleteபழைய விஷயங்களை தொகுத்து அருமையாக வழங்கி இருக்கீங்க. இது எல்லாம் எங்கே இருந்து கிடைக்குது.
முன்னர் எங்க வீட்டில பழைய விகடன்,கல்கி ல வந்த தொடர்கள் எல்லாம் கட் செய்து பைண்ட் செய்த புத்தகம் இருந்தது அதில் நடுவில் இது போல ஜோக்குகள், விளம்பரங்கள் எல்லாம் தற்போது படிக்கும் போது வேடிக்கையாக இருக்கும்.
பழைய கல்கி, விகடன் தீபாவளி மலர்களும் திரும்ப எடுத்து படித்து இருக்கேன். பல வீடு மாறியதில் எல்லாம் போயிடுச்சு.
சிவாஜி நாடக விளம்பரத்தில் பார்த்தால் அண்ணாவின் முக்கியத்துவம் , அன்பழகன், நெடுஞ்செழியன் ,சம்பத் ,அழகிரிசாமிக்கு அப்புறமாக வருவதையும் காணலாம், ஆனால் அண்ணா பின்னாளில் முன்னால் வந்திட்டார் போல :-))
கருணாநிதியின் பெயரைக் காணோம் பார்த்தீர்களா? அவரை விட அன்பழகன் ஒரு வயதுதான் மூத்தவர்.
Delete