கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Friday, July 6, 2012

ந்த முறை ஒரு மாறுதலுக்காக ஜோக்குகளைக் கத்தரித்துப் போடுவதற்குப் பதிலாக நான் ரசித்த ஓவியங்களைக் கத்தரித்து உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். பிடித்திருக்கிறதா என்பதைத் தெரிவியுங்கள். தொடரலாம்.

                             ‘லதா’ வரைந்த யவன ராணியும்... பூவழகியும்...!

            ‘சந்திரா’ வரைந்த (மாறுவேட) மகேந்திர பல்லவரும், பரஞ்ஜோதியும்...!

                       ஆ.வி,யில் ‘ராஜி‘ தொடருக்கு கோபுலுவின் கைவண்ணம்!

           ஜலதீபத்தில் இதயசந்திரனும் பானுதேவியும் வர்ணம் கைவண்ணத்தில்!

டபிள்யூஆர்ஸ்வர்ணலதாவின் ‘யார் அந்த அழகி’ தொடரில் மாயாவின் கைவணணம் இது,

                        ஜெயராஜின் கைவண்ணத்தில் அட்டைப்பட ஓவியம்!


36 comments:

 1. ஓவியத்திற்கு என்று தனி மரியாதையை இருந்து கொண்டுதான் உள்ளது. கோபுலுவின் ஓவியங்களும டூன்களும் மிகவும் பிடிக்கும். இப்போது வரைந்து வரும் இளையராஜாவின் ஓவியங்களில் இருக்கும் தத்ரூபம் பிரமாதம்

  த ம 2

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சீனு. இளையராஜா வரைந்து வரும் ஓவியங்கள் புகைப்படம் தானோ என்று பிரமையை ஒரு கணம் ஏற்படுத்தி விடுகின்றன. உங்களின் ரசிப்புத் தன்மைக்கு பாராட்டும் நன்றியும்.

   Delete
 2. அருமை..

  அதிலும் பூவழகி - பேரழகி !

  ReplyDelete
  Replies
  1. யவனராணி தொடர் முழுவதுமே ‘லதா’வின் தூரிகை புகுந்து விளையாடியிருக்கும. நீங்கள் ரசித்ததில் மகிழ்வு கொண்டு உங்களுக்கு என் இதயம் நிறை நன்றியைத் தெரிவிக்கிறேன்.

   Delete
 3. அனைத்து ஓவியங்களும் அருமை, கத்தரித்து எங்கள் கண்களுக்கு விருந்தளித்தமைக்கு நன்றி சார்!

  ReplyDelete
  Replies
  1. ஓவியங்களை ரசித்துப் பார்த்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பா.

   Delete
 4. தலைப்பு சொல்வதை போலவே நிச்சயம் இவை பேசும் ஓவியங்கள் தான். தொடர்ந்து பகிரலாமே....

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெங்கட். ஜோக்குகளைப் போல ஓவியங்கள் ரசிக்கப்படுமா என்று என் மனதில் ஒரு ஐயம் இருந்தது. வரவேற்றுள்ளதில் மிகமிக மகிழ்வு. உங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 5. வெங்கட் சொன்னதையே நானும் சொல்கிறேன்! அருமை பேசும் ஓவியமே!ஐயமில்லை!

  சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. பேசும் ஓவியங்கள் இனி அவ்வப்போது தொடரப்படும் ஐயா. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 6. கண்டிப்பாகத் தொடருங்கள். அனைத்து ஓவியங்களும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.. உயர்ந்த ரசனை உள்ளவரான நீங்களே சொல்லிவிட்ட பின் அப்பீலே கிடையாது நண்பரே... தொடர்கிறேன். எனக்கு உற்சாகம் தந்த உங்களுககு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 7. ஓவியங்கள் அனைத்தும் அருமை. ஓவியர் மணியம் மற்றும் ஓவியர் சில்பி அவர்களுடைய ஓவியங்களையும் பேசவிடுங்களேன்!!

  ReplyDelete
  Replies
  1. அடுத்து வரும் பகுதிகளில் உங்களின் விருப்பதையும் நிச்சயம் நிறைவேற்றுகிறேன். மிக்க நன்றி நண்பரே...

   Delete
 8. நான் பார்க்கத்தவறிவிட்டேன் என நினைத்தவைகள் இன்று இங்கே நீங்கள் பதிவிட்டதால் கண்டு மகிழ்ந்தேன்.மிக்க நன்றி

  ReplyDelete
  Replies
  1. ஓஓஓ... உங்களுக்கு இந்த ஓவியங்கள் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி செளம்யா. என் இதய நன்றி.

   Delete
 9. Replies
  1. சாண்டில்யனின் கதைகளுக்கு லதா வரைந்த ஓவியங்கள் பெரிய பலம். ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

   Delete
 10. கொள்ளை அழகு.கதைகளின் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த ஓவியர்களல்லவா?தில்லானா மோகனாம்பாளை மறக்க முடியுமா?

  ReplyDelete
  Replies
  1. உண்மை. மறக்க இயலாத ஓவியங்களல்லவா அவை. ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 11. Replies
  1. ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி அருணா மேடம்.

   Delete
 12. ஆஹா....பழைய படங்களை பகிர்ந்து மலரும் நினைவுகளுக்கு கொண்டு சென்று விட்டீர்கள்.இன்னும் பகிருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்குப் பிடித்திருக்கிறதென்றால் நிச்சயம் மகிழ்வுடன் தொடர்கிறேன் சிஸ்டர். மிக்க நன்றி.

   Delete
 13. ஒவ்வொரு ஓவியத்திலும் கதாபாத்திரங்கள் உயிருடனும் உணர்வுடனும் உலவுகின்றன. இன்றும் நம் நெஞ்சத்தில் இடம்பிடிக்கக்கூடிய அற்புத ஓவியங்களை வரைந்த மாபெரும் ஓவியர்களுக்கு என் வந்தனம். இன்னும் நிறைய இதுபோல் வெளியிட்டு எங்களை மகிழ்வியுங்கள் கணேஷ். உங்களைத் தவிர வேறு யாராலும் இப்படியொரு களத்தை உருவாக்கி அந்நாளைய அற்புதங்களை மேயத்தர இயலாது. பாராட்டுகள் கணேஷ்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... ஓவியங்களை இவ்வளவுக்கு நீங்கள் ரசித்ததில் எவ்வளவோ மகிழ்ச்சி எனக்கு. தொடர்கிறேன் கீதா. என்னை உற்சாகத்துடன் செயல்பட வைக்கும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 14. சாண்டில்யன் கதைக்கு லதாவின் ஒவியங்கள் மிக அழகு அதுமட்டுமல்லாமல் அது கதைக்கு ஏற்றாற் போல இருக்கும்.. அது போல ஜெயராஜ் அவர்களின் ஒவியங்கள் கவர்ச்சிக்கு பெயர் போனவை கோபுலு ஒவிய்ங்கள் நகைச்சுவை எழுத்துக்கு பொருந்தும்.ஒரு காலத்தில் இவர்கள் வரைந்த ஒவியங்கலை அப்படியே பார்த்து வரையும் பழக்கம் எனக்கு உண்டு....

  உங்கள் வலைத்தலத்திற்கு பொக்கிஷம் என்று பெயர் வைத்திருக்கலாம் கணேஷ்

  ReplyDelete
  Replies
  1. ஹா... ஹா... பொக்கிஷமா... மாற்றிவிட்டால் போச்சு நண்பா. ஓவியங்களை ரசித்ததுடன் உங்கள் பழைய நாட்களுக்கும் சென்று பார்த்து பகிர்ந்து கொண்டமைக்கு மிகமிகமிக நன்றி.

   Delete
 15. அழகிய ஓவியங்களின் அணிவகுப்பு அற்புதம்! சாண்டில்யன் கதைகளுக்கு லதாவின் ஓவியங்கள் பொருத்தமாக இருக்கும். அவரின் ரசிகன் நான்! யவனராணியை மீண்டும் ரசிக்கவைத்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நானும் சாண்டில்யன் - லதா கூட்டணிக்கு நானும் தீவிர ரசிகன். ரசித்துப் படித்துப் பாராட்டிய தங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 16. வீடு மாற்றும் போது நாங்கள் இழந்த பொக்கிஷங்கள் இவை...!உங்கள் சேகரிப்பு விலை மதிப்பில்லாதது!

  ReplyDelete
  Replies
  1. நானும் நிறைய பொக்கிஷங்களை இப்படி இழந்ததுண்டு சுரேஷ். அதில் நிறைய வருத்தம் எனக்கு- மிஞ்சியவற்றையே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 17. மிக அருமையாக இருக்கிறது. நீங்கள் தொகுத்த விதமும் சிறப்பு.

  ‘சிவகாமியின் சபதம்’ படத்தை வரைந்தவர் ‘வர்மா’ என்று தோன்றுகிறது?

  ReplyDelete
 18. அரிய ஓவியங்களின் பகிர்வுக்கு நன்றிகள். யவனராணியின் ஓவியங்கள் அனைத்தும் உள்ளதா நண்பரே..
  என்றும் அன்புடன்
  தமிழ்நேசன்

  ReplyDelete
 19. அருமையான ஓவியங்கள்!

  ReplyDelete
 20. அரிய ஓவியங்கள்...
  அழகு... அற்புதம்...

  ReplyDelete