கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Friday, June 28, 2013

ஓ ஹென்றி எழுதுன கடைசி இலை கதையின் போன ரீல்ல என்ன நடந்துச்சுன்னு உங்களுக்குத் தெரியாது - நீங்க பாக்கலைன்னா... கொஞ்சம் சிரமம் பாக்காம இங்க போய் பாத்துட்டு வந்துடுங்களேன் ப்ளீஸ்...

 சூவின் முயற்சிக்கு பெர்மான் உதவினாரா இல்லையா? என்பதை அடுத்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம். கொஞ்சம் வெய்ட் ப்ளீஸ்...!

Wednesday, June 26, 2013

                                       2. மாதவி துறவு

ர் முழுவதும் திருவிழா ஆரவாரம். எங்கும் ஆடல் பாடல். எல்லோரும் இன்பக் கடலில் மிதக்கின்றனர். இவர்களில் சித்திராபதி ஒருத்திக்குத் தான் தணியாத வருத்தம் போலிருக்கிறது. அவள் மகள் மாதவி தன் ஆடலின் திறத்தையும், பாடலின் இனிமையையும், அழகின் வளத்தையும் வீணாக்கித் துறவுக் கோலத்தை மேற்கொண்டு விட்டாள். கோவலன் இறந்த செய்தியைக் கேட்ட அன்றே அவளுக்கு உலக இன்பத்தில் வெறுப்பு உண்டாகி விட்டது.

சித்திராபதிக்குச் சிறிதே ஆசை எழுகிறது. எல்லோரும் களித்திருக்கும் இந்த விழாக் காட்சியைக் கண்டாவது திருந்த மாட்டாளா என்ற ஆவல் அவளுக்குத் தோன்றுகிறது. மாதவியின் தோழி வசந்தமாலையை அழைத்தாள். ‘‘ஊரெல்லாம் மாதவி தான் செய்ய வேண்டிய கடமையை விட்டு வாளா இருப்பதைப் பற்றிக் குறை கூறுகிறது. நீ இதை அவளிடம் போய்ச் சொல்லி அவள் மனத்தை மாற்று’’ என்று கூறி விடுத்தாள்.

வசந்தமாலை, மாதவி தன் மகளாகிய மணிமேகலையுடன் பூத்தொடுக்கும் மண்டபத்தில் இருக்கிறாள் என்பதை அறிந்து அங்கே போனாள். மாதவியைக் கண்டாள். எப்படி மாறிவிட்டாள் அவள்? மேனி பொலிவிழந்து உடல் வாடி அலங்காரமின்றி இருந்தாள். அவளைக் கண்டவுடன் வசந்தமாலைக்குக் கண்ணில் நீர் முட்டியது.

‘‘என்ன காரியம் செய்தாய்? ஊரெல்லாம் ஒரே ஆரவாரம். உன்னைப் பற்றியே யாவரும் பேசுகிறார்கள். உன் காதில் விழவில்லையா?’’ என்று கேட்டாள்.

‘‘என்ன பேசுகிறார்கள்?’’

‘‘உன்னுடைய எழிலையும் கலையாற்றலையும் பற்றிப் பேசுகிறார்கள். பல வகையான நடனங்களில் வல்லவள் நீ. யாழ் வாசிப்பதில் பேராற்றல் உடையவள். எத்தனை மொழிகளில் உனக்குப் புலமை உண்டு! வாத்தியங்களை வாசிப்பாயே! பந்தாடுவாய்; சமையற்கலையில் தேர்ச்சி பெற்றவள்; சுண்ணம் அமைப்பாய்; பேச்சில் வல்லவள்; சித்திரம் எழுதுதல், மலர் தொடுத்தல் முதலிய கலைகளில் வல்லவள். இவ்வளவு இருந்தும் நீ தவக்கோலம் மேற்கொண்டது தகாது. நாணுவதற்குரியது என்று ஊரே பேசுகிறது’’ என்றாள்.

மாதவி புன்முறுவல் பூத்தாள். ‘‘அப்படியா? என்னுடைய காதலருக்கு வந்த கதியை உணர்ந்து நான் அன்றே உயிர் நீத்திருக்க வேண்டும். அல்லது ஏரியில் மூழ்கியிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் தவம் மேற்கொண்டேன். பத்தினித் தெய்வமாகிய கண்ணகியின் மகள் மணிமேகலை. இவள் தீய தொழிலிலேயே புக மாட்டாள். இவளும் நோன்பு நோற்பாள். நான் மாதவர் உறையும் இடம் புகுந்தேன். அறவணவடிகளாகிய ஆசானுடைய திருவடிகளில் வீழ்ந்தேன். என் காதலர் உற்ற கடுந்துயர் கூறி நைந்தேன். அப்பெருமான் எனக்கு உபதேசம் அளித்தார்.

‘பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும்பே ரின்பம்
பற்றின் வருவது முன்னது; பின்னது
அற்றோர் உறுவது: அறிக’

என்று அருளினார். யான் உய்யும் வகை இது என்று காட்டினார். அவர் வகுத்த நெறியிலே என் வாழ்நாளைப் போக்க முடிவு செய்து விட்டேன்’’ அவள் பேச்சில் அசையா உறுதி புலனாகியது.

வசந்த மாலை கண்ணீருடன் நின்றாள்.

‘‘ஆம்; இதைப் போய் என்னைப் பெற்றவளுக்குச் சொல். மற்றப் பெண்களுக்கும் சொல்...’’

வசந்தமாலை மயங்கினாள். கிடைத்த மாணிக்கத்தைக் கடலிலே கை தவற விட்டவரைப் போல வாட்டத்தோடு திரும்பினாள். ஆம்! மாதவி இப்போது ஞானப் பெருங்கடலில் புகுந்து விட்டாள்!

அப்புறம்...?

Monday, June 24, 2013

ஓ ஹென்றி எழுதிய இரண்டு சிறுகதைகளை படக் கதைகளாக முன்னர் கொடுத்த போது மிக ரசிக்கப்பட்டன. அதனால் இப்ப இன்னொரு மனம் நெகிழச் செய்யும் கதையைத் துவக்குகிறேன். இது நாலு பாகங்களாக வரும். சித்திர மேகலையும் இதுவும் இனி மாறி மாறித் தொடரும். ஆனா... அதிக இடைவெளியின்றி இரண்டு தினங்களுக்கொரு பதிவாக இனி தொடரும். தயாராக இருங்கள் நண்பர்களே...!

சூவினால் ஜான்ஸியின் மனதில் வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்த முடிந்ததா? இல்லையா என்பதனை அறிய... வெய்ட்டீஸ் ப்ளீஸ்!

Monday, June 10, 2013

திரு.கி.வா.ஜகந்நாதன் அவர்கள் ‘இலக்கியச் சித்திரம் - சித்திர மேகலை’ என்ற தலைப்பில் சித்ரலேகா என்கிற ஒவியர் வரைந்த அற்புதமான சித்திரங்களுடன் பழைய ஆனந்தவிகடன் 59-60 ஆண்டுகளில் எழுதியிருக்கிறார். வாராவாரம் ஒரு பக்கம் ஓவியமும், மறுபக்கம் கி.வா.ஜ. அவர்களின் அழகுத் தமிழுடனும் படிக்க ரசனையாக இருந்தது. அதை அவ்வப்போது தொடர்ந்து இங்கு வெளியிடலாம் என்று விருப்பம் எனக்கு.  உங்களுக்குப் பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க...

                                                                    1. இந்திர விழா

ணார்! டணார்! டணார்! டணார்!

முரசொலி முழங்கியது. காவிரிப்பூம்பட்டினத்து வீதிகளில் உலாவிய மக்கள் யாவரும் அந்த ஒலி வந்த பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். ‘‘என்ன ஒலி இது? அரண்மனையில் ‌ஏதேனும் திருமணமா? அல்லது வேறு புதிய நிகழ்ச்சி உண்டா?’’ என்று தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர்.

‘இந்திரன் கோவில் பக்கமிருந்தல்லவா வருகிறது?’’ என்று ஒருவர் இடைமறித்தார்.

வச்சிரக்கோட்டம் என்ற இந்திரன் கோயில் முரசுதான் அது. அதை யானையின் மேல் ஏற்றிச் செய்தி வள்ளுவன் என்ற அதிகாரி அதை அடிக்கிறான்.

இப்போது அவனுடைய குரல் கணீர் என்று கேட்கிறது. ‘‘புகார் நகரம் வாழ்க! மாதம் மும்மாரி பொழிக! ‌சோழ மன்னர்பிரான் செங்கோல் சிறந்து விளங்குக! அவன் வாழ்க!’’ என்று செய்தியைச் சொல்லத் தொடங்கி விட்டான். தெருவில் உள்ள மக்கள் அத்தனை பேரும் மூச்சை அடக்கிக் கொண்டு கேட்கிறார்கள்.

‘‘நகரத்தில் உள்ள மக்கள் யாவரும் இந்த ஆண்டு மிகச் சிறப்பாக இந்திர விழாவைக் கொண்டாட வேண்டும். இது அரசர் ஆணை!’’ என்று அவன் உரக்கச் சொல்லி முழங்குகிறான்.

இந்திர விழா என்பது காதில் விழுந்தவுடன் எல்லோருடைய முகத்திலும் ஒரு புதிய மலர்ச்சி புகுகிறது. பலகாலமாக நின்றுபோன விழா அல்லவா?

‘‘இந்திர விழா எப்படி உண்டாயிற்று தெரியுமா?’’ என்று ஒருவர் கேட்கிறார்.

‘‘தெரியுமே... பழங்காலத்தில் அகத்தியரே இந்த விழாவை நடத்த ஏற்பாடு செய்தாராம். தூங்கெயில் எறிந்த ‌தொடித்தோள் செம்பியன்தான் முதல் இந்திர விழாவை நடத்தினானாம். இந்திரனையே அந்தச் சோழ மன்னன் நேரே வேண்டிக் கொண்டதாகவும் அல்லவா கதை சொல்கிறார்கள்?’’

‘‘இந்திர விழா எத்தனை நாள் நடக்கும்?’’

‘‘சரியாக இருபத்தெட்டு நாள்...’’

முரசொலி நின்று மறுபடியும் செய்தியைச் சொல்கிறான் யானை மேல் இருப்பவன். ‘‘வீதியெல்லாம் தோரணம் நாட்டுங்கள். பூரண கும்பமும் பாலிகைகளும் வைத்து அலங்கரியுங்கள். பாவை விளக்குகளை வரிசையாக ஏற்றுங்கள். கமுகங் குலைகளையும், வாழைக் குலைகளையும், பூங்கொடிகளையும், கரும்புகளையும் கட்டுங்கள். திண்ணைகளை அலங்கரியுங்கள். முத்துமாலைகளைத் தொங்க விடுங்கள்...’’

மறுபடியும் முரசு முழங்குகிறது. மீட்டும் அவன் அறிவிக்கிறான். ‘‘மக்கள் கூடும் இடங்களிலும் வீதிகளிலும் பழைய மணலை மாற்றிவிட்டுப் புதுமணலைப் பரப்புங்கள். எல்லாக் கோயில்களிலும் அலங்காரஞ்‌ செய்து விழா நடத்துங்கள். அங்கங்கே நல்லுரை வழங்குவோர் வழங்கட்டும். பட்டிமண்டபத்தில் சமயப் புலவர்கள் கூடி ஆராய்ச்சியுரை நிகழ்த்தட்டும். சண்டையின்றிச் சச்சரவின்றி அமைதியாக நடந்து கொள்ளுங்கள்.’’

டண்டணார்! டண்டணார்! - முரசொலி இது.

இறுதியில் அவன் சொல்லி முடிக்கும் வாழ்த்தின் உயர்வை என்னவென்று சொல்வது! லட்சிய நாட்டின் வளவாழ்வுச் சூத்திரம் அது! பசியும் பிணியும் பகையும் போக, மக்களுக்குப் பொலிவும், நாட்டில் வளமும் சுரக்க வேண்டும் என்று வாழ்த்துகிறான்.

‘‘பசியும், பிணியும், பகையும் நீங்கி, வசியும் வளனும் சுரக்க...!’’ என்பது அவன் கூறும் வாழ்த்து. அதன் ஒலியோடு மக்கள் இதயங்கள் உவகை பொங்க, இன்பத் துள்ளல் துள்ளுகின்றன. எல்லோருடைய வாயிலும் ‘‘இந்திர விழா! இந்திர விழா!’’ என்ற வார்த்தைகள்தான் உரத்து ஒலிக்கின்றன!