நான் ரசித்த சில ஓவியர்களின் ஓவியங்களைத் தொகுத்து ‘பேசும் ஓவியங்கள்’ என்ற தலைப்பில் முன்னர் வெளியிட்டிருந்தேன். நிறையப் பேர் ரசித்துப் பார்வையிட்டுப் பாராட்டினீர்கள். அந்த உற்சாகத்துடன் மேலும் சில ஓவியர்களின் ஓவியங்கள் இங்கு உங்கள் பார்வைக்கு பவனி வந்துள்ளன. பார்த்து விட்டு ரசித்ததை பகிருங்கள் நண்பர்களே...
 |
வியக்க வைக்கும் ‘வினு’வின் தூரிகை விளையாடல். |
 |
ரசிக்க வைக்கும் ‘ராமு’வின் கை வண்ணம்! |
 |
கண்களை சுண்டி இழுக்கும் ‘கல்பனா’வின் ஓவியம், |
 |
‘எஸ்.பாலு’ வரைந்த எழிலார்ந்த ஓவியம். |
 |
மனதை மயக்கும் ‘மாருதி’யின் ஓவிய மங்கை. |
 |
மதியை விட்டகலாதவை ‘ம.செ’ வரையும் ஓவியங்கள். |
 |
அசத்தலாய் ஓவியங்கள் வரையும் ‘அரஸ்’ கைவண்ணம் இது, |
அனைத்தும் அருமை...
ReplyDeleteநன்றி...
tm2
இங்கு இடம்பெற்றிருக்கும் படங்களை வரைந்த அனைத்து ஓவியர்களையுமே நான் ரசித்தவன் என்பதால், இவற்றில் காணப்படும் ஜீவனை மீண்டும் கண்டுணர்ந்து வியக்கிறேன். நன்றி கணேஷ்!
ReplyDeleteநான் மிகவும் ரசித்த மற்றும் நேசித்த ஓவியம் ஜெ... அவர்களின் ஓவியம்.
ReplyDeleteஅதன் பின் ம.செ., மாருதி.... ஓவியத்தை வைத்தே நாவல் தேர்வு செய்ததும் ஒரு காலம்.
மாருதி படங்களை என்னவோ என்னால் ரசிக்க முடிந்ததில்லை. வினு, ராமு, கல்பனா மறந்தே போனவர்கள். ஜெ எங்கே ஜீ?
ReplyDeleteலதா.
Delete///////
ReplyDeleteநிறையப் பேர் ரசித்துப் பார்வையிட்டுப் பாராட்டினீர்கள்
////////
யாருங்க அது...
சும்மா தலைவரே...
ReplyDeleteஅத்தனையும் படங்களிலும் அழகு மிளிர்கிறது...
Good
ReplyDeleteஉயிரோட்டமான ஓவியங்கள்...
ReplyDeleteஓவியங்களே கதைகளை உணர்த்தி விடுகின்றன...
பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே...
ஓவியங்கள் அனைத்தும் அருமை. சென்ற ஜூலையில் பேசும் ஓவியங்களின் முதல் தொகுப்பில் பின்னூட்டம் இடும்போது ‘ஓவியர் மணியம் மற்றும் ஓவியர் சில்பி அவர்களுடைய ஓவியங்களையும் பேசவிடுங்களேன்.’ எனக் கேட்டிருந்தேன், நீங்களும் ‘அடுத்து வரும் பகுதிகளில் உங்களின் விருப்பதையும் நிச்சயம் நிறைவேற்றுகிறேன்.’ என்று சொல்லியிருந்தீர்கள். நிச்சயம் அவர்களின் ஓவியங்களை அடுத்த தொகுப்பில் எதிர்பார்க்கலாமா?
ReplyDeleteபேசும் ஓவியங்கள் அருமை!அருமை! மிக்க நன்றி!
ReplyDeleteஓவியங்களுடன் அசத்தலாய் வரையும அரஸ், மனதை மயக்கும் மாருதி என்று எதுகையோடு கூடிய உங்களது விவரங்கள் அசத்தல்! நன்றி!
ReplyDeleteஓவியங்களுடன் அசத்தலாய் வரையும அரஸ், மனதை மயக்கும் மாருதி என்று எதுகையோடு கூடிய உங்களது விவரங்கள் அசத்தல்! நன்றி!
ReplyDeleteலதா படம் விட்டுப் போச்சுதான்! இன்னும் வர்ணம், செந்தில் பெயரெல்லாம் கூட நினைவுக்கு வருகிறது. மாருதி வரையும் முகங்களில் அவர் பிம்பச் சாயல் தெரிகிறதோ என்று தோன்றும்! ராமு ஓவியங்களை அவ்வளவாக ரசிக்க முடிவதில்லை. லக்ஷ்மி கதைகளுக்கு இவர்தான் ஆஸ்தான ஓவியர்! சாண்டில்யனுக்கு லதா படம் போட்டால்தான் பொருத்தம். சில எழுத்தாளர்களுக்கு நாம் நினைப்பவர் தவிர வேறு ஒருத்தர் ஓவியம் வரைந்தால் கூட சிலசமயம் ரசிக்க முடியாமல் போகும்!
ReplyDeleteபால கணேஷ் ஐயா !! தெரியாமத் தான் கேக்கறேன்.
ReplyDeleteஇந்த ராமுவின் கை வண்ணம் அப்படின்னு ஒரு ஷோக்கா ஒரு படம் போட்டு
அதை நான் அப்பதான் பாக்க ஆரம்பிச்சிருப்பேன்...... என்னா ஒரு அழகு....
என்ன ஒரு பார்வை ? என்ன ஒரு மதப்பு ? அந்த பார்வையே ஆயிரம் வார்த்தை பேசுதே ....
அப்படின்னு நினச்சிக்கிட்டு இருந்த போது......
எங்கிருந்தோ இந்த வூட்டுக் கிழவி வந்து.....
என்னா அப்படி, கிழத்துக்கு இந்த வயசுல்லே இதெல்லாம் !
பேரப்புள்ளைங்களுக்கு கல்யாணம் ஆற வயசாச்சு,
உங்களுக்கு புத்தி திரும்பலையே ?
அப்படின்னு அங்கலாய்க்கிறாளே !
வடிவேலு உதை பட்ட கேஸு ஆயிடும்போல இருக்கே.....
எதுனாச்சும் பரிஹாரம் இருக்கா ? ஓரமா ஒரு சாமி படம் போட்டு இருந்தா அத சட்டுனு மாத்தி இருப்பேன்
இல்லயா.....
அய்யா சுப்பு தாத்தா நல்லவரு பாட்டி ....அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லிப்போங்க..
சுப்பு தாத்தா.
சிறப்பான ஓவியங்கள்... தொடரட்டும்...
ReplyDelete
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
அருமையான பதிவு. இதுப் போல் இன்னும் நிறைய ஓவியங்களை காண கண்கள் விழைகிறது.
ReplyDeleteநான் ம.செ. மற்றும் அர்சின் ஒவியங்களை மிகவும் ரசிப்பேன்....நல்ல பதிவு
ReplyDeleteசிறப்பான ஓவியங்கள்... தொடரட்டும்...
ReplyDelete