கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Tuesday, July 17, 2012

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பேரறிஞர் அண்ணா மீது எவ்வளவு மதிப்பு வைத்திருந்தார் என்பதற்குச் சான்றாக இந்தக் கடிதம் என் கண்ணில் பட்டது.


மனைவி கேட்ட கேள்விக்கு எவ்வளவு அப்பாவியா இவர் பதில் கொடுக்கறாரு பாருங்க நண்பர்களே...


 இங்க பாருங்க...  நிஜமாவே இன்னொரு அப்பாவி மனுஷன்...


நாம எல்லாருக்கும பொதுவா சினிமா தியேட்டர்ல தோணுற எண்ணம் இது. 1968லயே குமுதம் பத்திரிகைக்குத் தோணி. இந்தத் துணுக்கை போட்ருக்காங்க.



இன்னிக்குததான் இப்படின்னு இல்ல... சாவி ஸார் குங்குமத்துல ஆசிரியரா இருந்த நாள்லயே ஆட்டோக் காரங்க இப்படித்தான் இருந்திருக்காங்க... அய்யோ... அய்யோ...


ஆ.வியின் துணுக்குகள் சிரிப்புக்கு உத்தரவாதம்.. இவை சிரிப்பை உங்ககிட்டருந்து வரவழைக்காம போய்டுமா என்ன...


மீண்டும் அடுத்த சுற்றில் சந்திக்கலாம்...  இப்ப நீங்க என்ன நினைக்கறீங்கன்றதைச் சொல்லலாமுங்கோ...


33 comments:

  1. எம்.ஜி.ஆரின் கடித்தத்தைப் படித்துவிட்டு வெட்டி ஒட்டியவை கண்டு வாசித்து சிரித்து விட்டாயிற்று..

    ReplyDelete
    Replies
    1. வாய்விட்டுச் சிரித்து மகிழ்ந்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி கவிஞரே...

      Delete
  2. அந்த எழுத்துக்களோடு
    அந்தப் படங்களோடு படிக்கையில்
    மிக மிக அற்புதமாகத்தான் இருக்கிறது
    அதற்காக நீங்கள் ஏற்படுத்திக்
    கொள்ளும் சிரமம்தான்
    கொஞ்சம் சிரமப்படுத்துகிறது
    மனம் கவர்ந்த பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்களெல்லாம் ரசித்துப் படித்துக் கருத்திடுகையில் கிடைக்கும் மகிழ்வில் சிரமமே எனக்குத் தெரிவதில்லை. உங்களனைவரின் வாழ்த்தே மகிழ்வும் தெம்பும் தருகீறதே. என் இதயம் நிறை நன்றி நண்பரே...

      Delete
  3. தங்கள் மேய்ச்சல் மைதானத்தில் அப்படியே ஒரு ரவுண்டு வந்தேன். படிப்பவருக்கு நல்ல மேய்ச்சல் கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மைதானத்தை ரவுண்டு வந்து ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  4. நல்லதொரு தொகுப்பு. எம் ஜி ஆரின் பல நல்ல பண்புகளில் இதுவும் ஒன்று. துணுக்குகள் மீண்டும் மீண்டும் சிரிக்க வைத்தன!

    ReplyDelete
    Replies
    1. பத்திரிகையாளர்களை மதிப்பதில் சிறந்தவர் MGR என்று நான் கேள்விப்பட்டதுண்டு. இதுபோல் சில நிரூபணங்கள். துணுக்குகளை ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  5. கடிதத்தைப் படித்தேன்... துணுக்குகள் சிரிக்க வைத்தன...

    பகிர்வுக்கு நன்றி... தொடருங்கள்...
    வாழ்த்துக்கள்...(த.ம. 6)

    ReplyDelete
    Replies
    1. ரசித்துச் சிரித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  6. கத்தரித்தவைகளை நன்கு எங்கள் மனதில் பசைபோட்டு ஒட்டி விட்டீர்கள். பாராட்டுக்கள்.

    உங்களையும் அலாக்காகத் அப்படியே தூக்கி திருஷ்டி சுற்றணும் போல ஆசையாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... தூக்கி திருஷ்டி சுற்றினாலும் கீழே மட்டும் போட்றாதீங்க ஸார்... இந்த உடம்பு தாங்காது ஹி... ஹி... நகைச்சுவையை ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  7. கத்தரித்து ஒட்டப்பட்ட எல்லா நகைச்சுவை துணுக்குகளுமே அருமை. இவைகளைப் படிக்கும்போது Old is Gold என்று சொல்வது சரிதான் என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் பழமை என்றும் தங்கம்தான். அந்தத் தங்கத்தை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  8. எல்லாருக்குமே இது இருபதாவது செஞ்சுரி தானே.. வெடிச்சிரிப்பை வரவழைத்தது.!

    எம்.ஜி.ஆர்- கடிதம் கான கிடைக்காத ஒன்று.., மகிழ்ச்சி பார்த்ததில்.. பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி கணேஷ் சார்! (TM 7)

    ReplyDelete
    Replies
    1. ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  9. எம்.ஜி.ஆரின் நற்பண்பு இக்கடிதத்தில் புலப்படுகிறது.

    அத்தனை ஜோக்குகளையும் ரசித்தேன். அதிலும் அந்த கிரிக்கெட் ஜோக்ஸ் சிக்ஸர் அடித்து விட்டன....

    த.ம. 8.

    ReplyDelete
    Replies
    1. MGRஐயும் நகைச்சுவையையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  10. கத்தரித்து ஒட்டி
    எமக்காக வழங்கியமைகளை
    படித்து நன்கு அசைபோட்டேன் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. ரசனை மிகுந்த நண்பரின் கருத்து மகிழ்வு தந்தது. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  11. வழக்கம் போல அருமைங்கோ, அற்புதமான மேய்ச்சல். ஒரு தொண்டனின் கடிதம் அருமை

    ReplyDelete
    Replies
    1. தொண்டரின் கடிதத்தையும் மற்றவற்றையும் ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சீனு.

      Delete
  12. நல்லதொரு தொகுப்பு...தொடர்ந்து கத்தரியுங்கள்.....கத்திரிகோல் தேயும் வரை

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட்... என் கத்தரிக்கோல் தேயும் வரை என் கண்ணில் படும் நல்ல விஷயங்களைக் கத்தரித்து வழங்குவதே என் விருப்பமும். நன்றி நண்பா.

      Delete
  13. கத்தரித்தவை அனைத்தும் காகிதப்பூக்கள் அல்ல! கதம்பமலர்கள்! மணம் வீசிய படைப்புக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கதம்ப மலர்களை ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  14. அருமையான பதிவு... எனக்கு MGR -நா ரொம்ப பிடிக்கும்.,... அவரை பத்தின பதிவுகள் படிக்கும் போது நெகிழ்ச்சிய இருக்கு.. சில நேரம் கண்ணீர் துளிகள் இதோ இதோ-னு நிக்குது.... தொடர்ந்து நிறைய பதிவுகள் எதிர் பார்கிறேன் சார்....
    இந்த ஜோக்ஸ் சூப்பர்..... தொகுத்து கொடுத்த உங்களுக்கு ரொம்ப நன்றி சார்...

    ReplyDelete
    Replies
    1. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு தீவிர ரசிகனான எனக்கு மற்றொரு ரசிகரைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  15. கத்தரித்து ஒட்டப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள்
    சிரிப்பை மட்டும் அல்ல மிகவும் கரிசனையுடன்
    தேடிக் கண்டு பிடித்துக் கொடுத்த தங்களின் புதுவித
    முயற்சியை பாராட்டவும் செய்தன. வாழ்த்துக்கள் ஐயா
    மென்மேலும் தொடர .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. என் இந்த முயற்சியைப் பாராட்டி வாழ்த்திய உங்களின் அன்பிற்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  16. வித்தியாசமான முயற்சி.மிகவும் அருமை.இதுவும் ஒரு வகை ஆவணப்படுத்தகையே!வாழ்த்துக்கள் சொந்தமே!:)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... அதிசயாவின் வாழ்த்துக்கள் தந்தது ஆனந்தம். சொந்தமே என்று அழைத்த அன்பிற்கு என் இதயம் நிறைந்த நன்றி.

      Delete