சமீபத்திய புத்தகக் கண்காட்சியின் போது யானை விலை, குதிரை விலை என்கிற ரேஞ்சுக்கு நெருக்கமாக புத்தகங்களின் விலையும் வந்துவிட்ட அதி்சயத்தை வியந்தவாறு சுற்றி வந்தபோது உண்மையிலேயே வேறொரு அதி்சயமும் கிடைத்தது எனக்கு. பாரதி பதிப்பக ஸ்டாலில் பழைய காலத்து புத்தகங்கள் சில பார்வைக்குக் கிடைத்தன. அதில் போட்டிருந்த ரூ.4.50, ரூ.8, ரூ.12.50 போன்ற அதே விலைக்கே தந்தார்கள். மகி்ழ்ச்சியுடன் கண்ணில் பட்டதையெல்லாம் அள்ளி வந்தேன். பின்னர் ஒவ்வொன்றாகப் படித்து வந்தபோது அவற்றில் சில நாவல்கள் முத்துப் போல நன்றாகவே இருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக இங்கே பகிர விரும்புகிறேன்.
‘கண்ணே காஞ்சனா’ என்று ஒரு நாவல். நாதன் என்கிற எழுத்தாளர் எழுதியிருக்கிறார். இந்த நாவல் படிக்கையில் ஜெமினிகணேசன் நடித்த அந்நாளையத் திரைப்படம் ஒன்றினைப் பார்க்கும் உணர்வு எனக்குள் எழுந்தது. கதையின் திருப்பங்களும், சொன்ன விதமும் அப்படி. ஆனால் படிக்கும் சுவாரஸ்யத்திற்கு குறைவின்றி விறுவிறுவென்று சென்றது. அசோக், காஞ்சனா, கல்பனா, அரவிந்த் ஆகிய நான்கு கதாபாத்திரங்களின் கோணத்தில் அவரவர்கள் சொல்வதாக மாறி மாறி கதை சொல்லப்படுகிறது. அதன் விரிவான சுருக்கம் இங்கே:
‘கண்ணே காஞ்சனா- 1’
அசோக் சென்னையில் வசிப்பவன். வசதி படைத்தவன். விளம்பரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் அவன் பெங்களூர் செல்வதற்காக ரயிலில் புறப்படுகிறான். ரயில் கிளம்பும் நேரம் ஒரு இளம்பெண் ஓட்டமாக ஓடிவந்து ஏற முயல்வதைப் பார்க்கும் அவன், கை கொடுத்து அவளை கம்பார்ட்மெண்டி்ல் மேலே தூக்கி விடுகிறான். அடுத்த ஸ்டேஷனில் அவள் தோழிகள் வந்து அழைக்க அவள் போய் விடுகிறாள். அந்தப் பெண்ணின் அழகு அவன் மனசில் ஒட்டிக கொள்கிறது.
அவள் காஞ்சனா. மருத்துவக் கல்லூரியில் படிப்பவள். அதே கல்லூரியில் படிக்கும் அரவிந்த் என்பவனைக் காதலிக்கிறாள். ஹவுஸ் சர்ஜனாக இருக்கும் அரவிந்த் படிப்பு முடிந்ததும் அடுத்த ஆண்டே அவள் வீட்டில் பேசி அவளைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் இருக்கிறான்.
அசோக் சென்னை திரும்பியதும் பல கல்லூரிகளில் ஏதோ ஒரு காரணம் சொல்லிச் சென்று தான் ரயிலில் பார்த்த அழகி தென்படுகிறாளா என்று தேடுகிறான். அனாவசியமாக அலைந்ததைத் தவிர வேறு பயன் கிட்டவில்லை. அவள் கிடைக்காத ஏமாற்றத்துடன் இருக்கும் அவனிடம், அப்பாவும் அம்மாவும் கல்யாணப் பேச்சை எடுக்க, தட்டிக் கழிக்கிறான். பின்னொரு நாளில் அப்பாவின் கோவை நண்பரொருவர் வந்து, கோவை மில் அதிபரின் பெண் என்றும் படித்தவள் என்றும் சொல்ல, அப்பா அசோக்கை சம்மதிக்கச் சொல்கிறார். தட்டிக் கழிக்கப் பார்க்கும் அவனிடம் கோபமாகப் பேசும் அப்பா, பெண்ணின் போட்டோவை முதலில் பார் என்று அவனிடம் தருகிறார். வேண்டாவெறுப்பாக புகைப்படத்தைப் பார்க்கும் அவன் உடலில் மின்சாரம் பாய்ந்த உணர்வு. படத்தில் சிரித்துக் கொண்டிருந்தது- அவன் ரயிலில் பார்த்து மனதைப் பறி கொடுத்தவள்.
காஞ்சனா அப்பாவிடமிருந்து வந்த மஞ்சள் தடவிய கடிதத்தை படித்துக் கொண்டிருக்க, அரவிந்த் வருகிறான். என்னவென்று கேட்கும் அவனிடம் தன் அப்பா மாப்பிள்ளை பார்த்து விட்டார் என்றும், அடுத்த வாரம் கல்யாணம் என்றும் அவள் சொல்ல கோபிக்கிறான் அரவிந்த். சற்று நேரம் சென்றபின் கல்யாணம் தன் அக்கா கல்பனாவுக்கு என்றும் தனக்கு இரண்டு நிமிடம் முன் பிறந்த இரட்டைச் சகோதரி அவள் என்றும் சொல்கிறாள் காஞ்சனா.
கல்யாண தினத்தன்று காஞ்சனா வந்த ரயில் ஈரோட்டில் கவிழ்ந்து விட, டாக்ஸி பிடித்து வந்தும், தாலி கட்டிய பின்னர்தான் வர முடிகிறது. தான் தாலி கட்டிய கல்பனா அருகில் அமர்ந்திருக்க, வாசலிலிருந்தும் அவளே வருவதைக் கண்டு திகைக்கும் அசோககிற்கு அவர்கள் இரட்டையர்கள் என்பதும் தான் விரும்பியது காஞ்சனாவை, ஆனால் மணந்தது கல்பனாவை என்பதும் தெரியவர, இடிந்து போகிறான். ஆனால் மனதைத் தேற்றிக் கொண்டு கல்பனாவுடன் வாழத் தொடங்குகிறான். பேச்சுவாக்கில் அவளிடம் இரட்டையரான அவர்களிடம் எப்படி வித்தியாசம் காண்பது? என்று அவன் கேட்க, அவள் மார்பிலும், இடுப்பிற்குக் கீழும் இரண்டு மச்சங்கள் கல்பனாவுக்கு உண்டு என்றும், தனக்குக் கிடையாது என்றும், அதை பார்த்தா கண்டுபிடிகக முடியும் உங்களால், பழக்கத்தில்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறாள்.
தேனிலவு முடிந்து வரும் கல்பனா-அசோக்கிடம் கல்பனாவின் அப்பா அவர்களுக்காக மாம்பலத்தில் ஒரு தனி பங்களா வாங்கியிருப்பதாகச் சொல்லி, ஒரு பியட் காரையும் பரிசளிக்கிறார். இத்தனை வசதி படைத்த அவர், ஹாஸ்டல் செலவுககு சிக்கனம் பார்த்துத் தொலைத்திருக்கக் கூடாதுதான்! ஹாஸ்டலில் படித்துக் கொண்டு இன்னொரு மகள் காஞ்சனா ஏன் ஹாஸ்டலில் இருக்க வேண்டும், அவளும் அவர்களுடன் அந்த பங்களாவிலேயே தங்கிக் கொள்ளட்டும் என்கிறார். தயங்கும் காஞ்சனாவை அசோக்கும், கல்பனாவும் வற்புறுத்த ஒப்புக் கொள்கிறாள். இந்த ஏற்பாட்டினால் ஏற்படப் போகும் விபரீத விளைவுகளை அவர்கள் யாருமே உணரவில்லை.
-‘நாங்கதான் நிறைய சினிமாக்களைப் பார்த்திருக்கோமே... இதுவரை வந்த கதைய வெச்சு இனிமே என்ன நடக்கும்னு யூகிக்கறது என்ன பிரமாதம்?’ என்று நினைக்கிறீர்கள் தானே...? ரைட், யூகித்து வையுங்கள். அடுத்த பதிவில் மீதிக் கதையைச் சொல்லி முடிக்கும் போது ஒப்பிட்டுப் பார்த்து, உங்கள் முதுகில் நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள்!
இந்த ஏற்பாட்டினால் ஏற்படப் போகும் விபரீத விளைவுகளை அவர்கள் யாருமே உணரவில்லை என்று சொல்லிவிட்ட பிறகு நடந்ததை கற்பனை செய்யவா முடியாது. இருந்தாலும் உங்களது அடுத்த பதிவைப் பார்த்து எனது கற்பனையை ஒப்பிட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteநாதன் அவர்களின் கதையை இரத்தின சுருக்கமாக அழகாக தந்தமைக்கு நன்றி.
உங்கள் கற்பனையுடன் ஒப்பீடு செய்ய விரைவிலேயே தொடர்கிறேன். நன்றி நண்பரே..
Deleteம் முடிவைப் பார்த்துவிட்டு சொல்கிறேன்.
ReplyDeleteவிரைவிலேயே பார்த்து விடலாம் சசி. மிக்க நன்றி.
Deleteஎன்ன சார் ! வெள்ளிக்கிழமை வீட்டிலே மெகா தொடர் பார்த்து விட்டு புலம்புவதைப் போலே, நீங்களும் 'தொடரும்' என்று போட்டு விட்டீர்களே... ஹா..ஹா..
ReplyDeleteநன்றி. யூகித்து வைத்துள்ளேன். பார்க்கலாம். (த.ம. 2)
மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?
அதற்குத்தான் தனபாலன் சார். ஊகத்தினைச் சரிபார்த்து சரியாக இருந்தால் மகிழ்ச்சி கிடைக்கும்தானே... தங்களுக்கு என் இதய நன்றி.
Deleteஇது ராணி முத்து மாத நாவலில் வெளி வந்தததாக ஞாபகம். நாதன் ,அமுதா கணேசன்,குரும்பூர் குப்பு சாமி,லக்ஷ்மி,தாமரை மணாளன், போன்ற எழுத்தாளர்கள் எழுதி வந்த பொழுது இவரும் ஒரு பிரபலம்
ReplyDeleteஉங்களின் நினைவு சக்திக்கு ஒரு ஜே! தினத்தந்தியில் தொடராக வெளிவந்த இதை ராணிமுத்து நாவலிலும் வெளியிட்டார்கள். மிக்க நன்றி சிஸ்டர்.
Deleteஇந்த நாவல் படித்ததில்லை நண்பரே..
ReplyDeleteஅடுத்த புத்தகத் தேடல்களின் போது
இதையும் மனதில் கொள்கிறேன்./
வாருங்கள் மகேன். உங்களின் புத்தகத் தேடலுக்கு நானும் உதவுகிறேன். உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
Deleteசிறப்பான நாவலை சிறப்பாக சுருக்கித்தந்தமைக்கு நன்றி! அடுத்தபகுதி எப்போது என கேட்க வைக்கிறது அருமையான பகிர்வு!
ReplyDeleteஉற்சாகம் தந்த உங்கள் வார்த்தைகளுக்கு என் இதயம் நிறை நன்றி சுரேஷ்.
Deleteவாய்ப்பிருக்கும் போது தேடிபிடித்து படித்து பார்க்கிறேன்!
ReplyDeleteஉற்சாகம் தந்த கருத்திற்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteநாதன் எழுதிய ஏதோ கதை ஒன்று நானும் படித்த நினைவு இருக்கிறது. சரியாக ஞாபகமில்லை. ஸ்ரீக்காந்த் - சினேகா நடித்த பார்த்திபன் கனவு படக்கதையில் இந்தக் கதையின் வாசனை அடிக்கிறதே....! ம்... இதிலும் தொடரா.... செய்யுங்க!
ReplyDeleteஹய்யய்யோ... இது தொடர்லாம் இல்லீங்க... குறுந்தொடர். அடுத்ததுல முடிச்சுரலாம்னு தான் இருக்கேன். மிக்க நன்றிங்கோ.
Deleteஇது ராணி முத்து மாத நாவலில் வெளி வந்தது என்பது நன்றாக ஞாபம் உள்ளது. நான் கல்லூரி படிக்கும் போது மிக அதைக அளவில் புத்தக கலக்ஷென் வைத்து இருந்தேன்/. நான் எப்போது சென்னைக்கு நகர்ந்தேனோ அப்போது இருந்து என் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக அதை எறிந்துவிட்டார்கள்...அதை இப்பொது நினைத்தாலும் வருத்தமாக இருக்கிறது.
ReplyDeleteநான் இந்தியாவிற்கு வந்தால் உங்கள் வீட்டில் கொள்ளை அடிப்பதற்கு அறிய பொக்கிஷம் இருப்பதை உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். நான் உங்கள் வீட்டிற்கு வந்தால் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவும்
நானும் இழந்தது அதிகம் நண்பா. அதுபோக எஞ்சியவைதான் இப்போதுள்ளவை. எப்போது வேண்டுமானாலும் என் இல்லம் வரலாம் நீங்கள். மகிழ்வுடன் இருப்பேனேயன்றி எச்சரிக்கையுடன் அல்ல. மிக்க நன்றி.
Deleteஅழகாகச் சுருக்கித் தந்திருக்கிறீர்கள்.முடிவு ?மச்சம்தான்....!
ReplyDeleteநீங்கள் வல்லவர்தான் பித்தரே... எதிர்பார்த்த திருப்பங்கள் ஆனாலும் ஏமாற்றாத நாவல் என்பதே என் முடிவு. மிக்க நன்றி.
Deleteஅழகான சுருக்கம்...
ReplyDeleteமுடிவு... சென்னை பித்தன் ஐயா சொன்னதே... காத்திருக்கிறேன்... அச்சத்தோடு!
மிச்சத்தை உடனே சொல்லிவிடுகிறேன். அச்சமின்றி மச்சத்தினால் ஏற்பட்ட விளைவு பாருங்கள் வெங்கட். மிக்க நன்றி.
Deleteவிக்ரமன் எடுத்த பிரியமான தோழி பாதி... கரு பழனியப்பன் எடுத்த பார்த்திபன் கனவும் பத்தியும் இதிலிருந்து சுட்டுள்ளார்கள் என்று தெரிகிறது மீதியச் சொல்லுங்கள் அது என்ன படம் என்று சொல்லத் தெரிகிறதா பார்கிறேன்
ReplyDeleteநாவல் சுருக்கம் அருமை சார்...
விக்ரமன் எடுத்த பிரியமான தோழி பாதி... கரு பழனியப்பன் எடுத்த பார்த்திபன் கனவும் பத்தியும் இதிலிருந்து சுட்டுள்ளார்கள் என்று தெரிகிறது மீதியச் சொல்லுங்கள் அது என்ன படம் என்று சொல்லத் தெரிகிறதா பார்கிறேன்
ReplyDeleteநாவல் சுருக்கம் அருமை சார்...
மீதியையும் பார்த்துவிட்டு என்ன தோன்றுகிறது என்பதை தொகுத்துச் சொல்லுங்கள் சீனு. மீ வெய்ட்டிங்...
Deleteபால கணேஷ் ஸார்,
ReplyDeleteவிக்ரமன் மேலும், கரு. பழனியப்பன் மேலும் உங்களுக்கு ஏன் இந்தக் கொலை வெறி ? அவர்கள் பிழைப்பில் மண்ணைப் போட்டு விடுவீர்கள் போல் இருக்கிறதே :-)
என்னுடைய ஒரே பயம் இந்த மச்சக் கதை எஸ்.ஜெ.சூர்யா கண்ணில் பட்டுத் தொலையாமலிருக்க வேண்டும் :-)
ஹா... ஹா... இரட்டைப் பெண்களாய் இருப்பதால் ஏற்படும் விபரீத சம்பவத்தை அவர் வர்ணிக்கும் காட்சியில் நீங்க சொன்ன மாதிரி எஸ்.ஜே.சூர்யா இருந்தார்னா... ஹய்யோ... நினைக்கவே முடியல... நன்றிங்க.
Deleteதொடரும் எதிர்பார்க்கல சார்... முடிவுக்கு காத்திருக்கிறேன்...
ReplyDeleteபல சினிமா படங்களில் இந்தமாதிரி குழப்பம் நேர்ந்ததை பார்த்துள்ளோம் ஆனா முடிவு எப்போதும் போல் இல்லாமல் இந்தக் கதையில் ஒரு திருப்பத்தை வைத்திருப்பார்களோ என எண்ணத் தோன்றுகிறது !..எனினும் தங்கள் அடுத்த தொடரைக் காண ஆவலுடன் செல்கிறேன் மிக்க நன்றி ஐயா மனத்தைக் கவர்ந்த
ReplyDeleteகதைப் பகிர்வுக்கு .
ஓரே நாவல் மட்டும் பகிர்ந்து உள்ளீர்கள்.மீதம்.....எங்கே
ReplyDelete