கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Tuesday, December 12, 2017

நகைச்சுவைக் கதைகள், க்ரைம் கதைகள், பேய்க் கதைகள் என்று எந்தத் துறையைத் தொட்டு எழுதினாலும் தனித்தன்மையுடன் எழுதிக் கலக்கிய ஒரு எழுத்தாளர் மறைந்த ராஜேந்திரகுமார் அவர்கள். ‘ஙே’ என்ற ஓரெழுத்தைச் சொன்னாலே அவர் நினைவு வரும் அளவு அதைப் பிரபலமாக்கியவர். குமுதத்தில் அவர் எழுதிய ‘வால்கள்’ என்கிற தொடர் சிறுகதைகள்தான் எழுத்துலகில் அவருக்குப் பெரும் பெயரை வாங்கித் தந்து “யார் இந்த ராஜேந்திரகுமார்?’ என்று கவனிக்க வைத்தது. பெண்கள் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் செய்யும் வால்தனங்களும் அடிக்கிற லூட்டிகளும்தான் அந்தக் கதைகளின் கரு. ஒவ்வொன்றும் படிக்க அத்தனை ஜாலியாக இருக்கும். அதற்குப் பிறகு ‘எப்படியடி காதலிப்பது?’, ‘நீயா என் காதலி?’, ‘நான் ஒரு ஏ’ என்று தொடர்ந்து நிறைய்ய நாவல்கள் எழுதித் தள்ளி, நீண்ட காலம் தமிழ் எழுத்துலகில் கோலோச்சினார்.


அவரின் ‘வால்கள்’ தொடர் சிறுகதைகள் முதலில் அபிராமி பப்ளிகேஷன்ஸால் வெளியிடப்பட்டது. பின்னாளில் கிழக்குப் பதிப்பகம் அவற்றை மறுபதிப்புச் செய்தது. ஆனால் இரண்டிலுமே ஏழு சிறுகதைகள்தான் இடம் பெற்றிருந்தன. அவர் எழுதியது 14 சிறுகதைகள் உண்மையில். பாதியை வேண்டாமென்று அவர் நிராகரித்து விட்டாரா புத்தகமாக்குவதற்கு, இல்லை, குமுதத்தில் வந்ததில் பாதியைத்தான் அவர் சேகரித்து வைத்திருந்தாரா என்பது இப்போது வரை எனக்குப் புரியாத புதிர். இன்றைக்கு டிசம்பர் 12. அவரது நினைவுதினம். இன்று அவர் வெளியிடாத வால்களின் ஒரு சிறுகதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது பிடித்திருக்கிறது என்பீர்களேயானால் மற்ற ஆறும் வெளியிட உத்தேசம். ‘வால்கள் சோற்றுக்கு இது ஒரு பருக்கை உதாரணம்.











8 comments:

  1. இப்போது படித்தாலும் சுவை குன்றாமல் அதே விறு விறு..

    ReplyDelete
  2. எப்படியடி காதலிப்பது.. தொடரை பைண்ட் செய்து வைத்திருந்தவரைக் கெஞ்சி.. வாங்கிப் படித்த காலம்.
    அவர் தொப்பி எங்களுக்கு ஒரு அட்ராக்‌ஷன்

    ReplyDelete
    Replies
    1. இப்பவும் நான் வைச்சிருக்கேன் அண்ணா அதைப் பத்திரமாக. கோபுலுவின் படங்களுக்காகவும்.

      Delete
  3. வாவ்... செம வாத்யார்... அவரது பல நாவல்கள் இப்ப கிடைப்பதில்லை. வாங்கி படிக்கனும்...

    ReplyDelete
  4. சுவாரஸ்யமான சிறுகதை. பதிவிற்கு நன்றி. உங்களிடமுள்ள அவருடைய மற்ற தொகுக்கபடாத சிறுகதைகளையும் பகிர்ந்துகொண்டால் படித்து மகிழ்வோம்.

    மின்னல் வரிகள் தளத்திலும் உங்கள் பதிவுகளை தொடரவும்.

    ReplyDelete
  5. மற்றைய படைப்புக்களையும் பகிருங்கள் அண்ணாச்சி.

    ReplyDelete
  6. அருமையான சிறுகதை அண்ணா...
    பகிர்வுக்கு நன்றி.
    தொடரட்டும்.

    ReplyDelete
  7. ராஜேந்திர குமாரின் அனைத்து கதைகளையும் விரும்புகிறோம்.

    ReplyDelete