கண்ணே காஞ்சனா - 3
அசோக், கல்பனா இறந்தபின் சென்னையில் வாழப் பிடிக்காமல் எங்காவது சென்றுவிடலாம் என்று சென்ட்ரல் வருகிறான். அங்கே மீசை, தாடியுடன் தளர்ந்து போனவனாய் காட்சிதரும் அவனைப் பார்க்கும் காஞ்சனா, அவன் கண்ணில் படாமலிருக்க வேண்டி கிளம்பிக் கொண்டிருந்த ரயிலில் ஏறிவிடுகிறாள். அது பம்பாய் செல்லும் ரயில். அசோக்கும் அதற்குத்தான் டிக்கெட் எடுத்திருந்ததால் வேறு பெட்டியில் இருக்கிறான். ரயிலில் காஞ்சனாவின் அருகில் அமர்ந்திருக்கும் அம்மாள் தன் பெயர் சாரதா என்றும், பம்பாயில் சமூக சேவகி என்றும் அறிமுகமாகிறார். அவளுக்கு பம்பாயில் வேலைக்கு ஏற்பாடு செய்வதாக ஆறுதலளிக்கிறார்.
பம்பாய் ரயி்ல் நிலையத்தில் அசோக், காஞ்சனாவைப் பார்த்துவிட்டுக் கூவியழைக்க, காதிலேயே விழாதவள் மாதிரி சாரதா அம்மாளுடன் போய்விடுகிறாள் அவள். பம்பாயிலேயே தங்கி அவளைத் தேடத் தீர்மானிக்கும் அசோக், லாட்ஜ் ஒன்றில் தங்கி, அங்கேயே ஒரு வேலையையும் பார்த்துக் கொள்கிறான். காஞ்சனாவை அன்பாக பார்த்துக் கொள்ளும் சாரதாம்மாள், அவள் கருவைக் கலைக்கும்படி யோசனை கூற, காஞ்சனா அதை ஏற்க மறுக்கிறாள்.
அதன்பின் ஏழு மாதங்கள் ஓடிவிட, ஒருநாள் காலை சாரதாம்மாளின் அறையில் ஒரு ஆல்பத்தைப் பார்க்கிறாள். பல அழகிய பெண்களின் நிர்வாணப் படங்கள் ஒட்டப்பட்டு, அதன் கீழ் தொகையும் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்க்கிறாள். அந்த ஆல்பத்தில் தன்னுடைய நிர்வாணப் படத்தையும் கண்டு திடுக்கிடுகிறாள். தலை மட்டுமே தன்னுடையது என்பதை அறிய முடிகிற காஞ்சனாவுக்கு, சாரதாம்மாள் உண்மையில் சமூக சேவகி இல்லை என்பதும், அந்தப் போர்வையில் வேறு தொழில் செய்வதும் அப்போதுதான் தெரிய வருகிறது. சாரதாம்மாவும், மற்றொருவரும் பேசுவதை ஒட்டுக் கேட்டு இதை உறுதி செய்து கொள்கிறாள். தலைசுற்ற, மாடிப்படியிறங்கி தன் அறையினுள் நுழைபவளை மயக்கம் ஆட்கொள்ள, கீழே சரிகிறாள். இடுப்பு வலி ஏற்படுகிறது.
அரவிந்த் வீட்டுக்கு வந்து உடை மாற்றும் நேரத்தில் ஆஸ்பத்திரியிலிருந்து எட்டுமாத கர்ப்பிணி ஒரு்த்திக்கு ஆபரேஷன் செய்ய வரும்படி அவசர அழைப்பு வருகிறது. அங்கே காஞ்சனாவைக் காணும் அவன் பேரதிர்ச்சி அடைகிறான். ஆனாலும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தியபடி ஆபரேஷன் செய்கிறான். குழந்தை இறந்தே பிறக்கிறது. அன்று மாலை மயக்கத்திலிருந்து கண் விழிக்கும் காஞ்சனாவின் விழிகள் ஒளியிழந்து விட்டிருக்கின்றன. தன்னால் பார்க்க இயலவில்லையே என்று அவள் கதறி அழுவது எதிரிலிருக்கும் அரவிந்தின் மனதைப் பிசைகிறது.
கர்ப்பம் கலைந்து கண்களை இழந்த காஞ்சனாவை தான் சொல்லும் தொழில் செய்து பிழைக்கும்படி சாரதாம்மாள் வற்புறுத்துகிறாள். காஞ்சனா அவளிடம் அன்பாகப் பழகும் ‘டாக்டரிடம்’ தன்னை சாரதாம்மாளிடமிருந்து காப்பாற்றும்படி வேண்டுகிறாள். டாக்டரிடம் தன் வாழ்க்கைக் கதையை ஒளிவுமறைவின்றிக் கூறுகிறாள். நடந்தவற்றை அப்போதுதான் அறியும் அரவிந்த் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, அவளை தவறாக நினைத்ததற்காய் மன்னிப்புக் கேட்கிறான்.

காஞ்சனாவை இனி தான் பார்த்துக் கொள்வதாகவும், அனுப்ப முடியாதென்றும் சாரதாம்மாளை மிரட்டி அனுப்பி விடுகிறான். தான் அசோக்கைத் தேடி்க் கண்டுபிடித்து காஞ்சனாவை அவரிடம் ஒப்படைத்தாக காஞ்சனாவிடம் சொல்கிறான். ஒருநாள் நிகழ்ந்த தவறுக்காக அவருடன் வாழ்நாள் முழுதும் வாழ வேண்டுமா என காஞ்சனா எண்ணினாலும், கறைபட்ட தன்னை அரவிந்துக்குத் தருவதா என்ற தயக்கத்தில் சம்மதிக்கிறாள்.
கடும் மழை பொழியும் நேரத்தில் ஒரு மரத்தடியில் மழைக்காக ஒதுங்கும் அசோக், குளிரில் தவிக்கும் ஒரு பிச்சைக்காரனுக்கு தன் கோட்டைப் போர்த்திவிட்டுப் போகிறான். மறுதினம் காலையில் செய்தித் தாள்களில் இடிவிழுந்து அசோக் என்ற வாலிபர் பலி என்றும், கோட்டிலிருந்த டைரி அடையாளம் காண உதவியது என்றும் செய்தி வந்திருப்பதைப் பார்க்கிறான் அசோக். தான் இறக்கவில்லை என்று ஸ்தாபித்து யாருக்கு என்ன பிரயோஜனம்? இறந்தவனாகவே இருந்துவிடலாம் என்றெண்ணி பேசாமலிருந்து விடுகிறான்.
அந்தச் செய்தியைப் படிக்கும் அரவிந்த், போலீஸ் ஸ்டேஷன் சென்று டைரியைப் பார்த்து இறந்தது அசோக்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறான். காஞ்சனாவிடம் அதைச் சொல்ல, அவள் கதறி அழுகிறாள். அதன்பின் அரவிந்த், அவள் மனதைத் தேற்றி மணந்து கொள்கிறான். அதன்பின் ஒரு மாதம் கழித்து, ஆபரேஷன் செய்து காஞ்சனாவுக்கு பார்வை வரவழைப்பதற்கு அமெரிக்க டாக்டர் ஒருவரைச் சந்திக்க காரில் இருவரும் செல்கையில் பார்த்துவிடும் அசோக் குறுக்கே வர, கார் சக்கரம் அவன் காலில் ஏறி விடுகிறது. நினைவிழக்கும் அவனை தன் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சையளித்து விட்டு அமெரிக்க டாக்டரை அரவிந்த் சந்திக்க, அவர் ஒரு வாரத்திற்குள் யாராவது கண்தானம் செய்தால் அவளுக்கு ஆபரேஷன் செய்வதாகவும், அதற்குமேல் இந்தியாவில் தங்க முடியாது என்றும் சொல்கிறார்.
ஆஸ்பத்திரியில் கண் விழிக்கும் அசோக்கை சந்திக்க டாக்டர் அரவிந்த் வர, அவனிடம் தன் பெயர் கண்ணன் என்று சொல்லி, பேச்சுக் கொடுத்து நடந்த எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்கிறான் அசோக். அன்றிரவு ஆஸ்பத்திரியிலிருந்து கண்ணன் என்ற அந்த பேஷண்ட் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாக போன் வருகிறது.

அரவிந்துக்கு கடிதம் எழுதி வைத்திருக்கும் அசோக், அதில் தான் கல்பனாவிடம் காஞ்சனாவுக்கு வாழ்வு தருவதாக வாக்களித்ததையும், இப்போது வாழ்வு கிடைத்துவிட்ட நிலையில் கல்பனாவிடமே செல்வதாகவும், தன் கண்களை காஞ்சனாவுக்கு தருவதில் மனப்பூர்வ சம்மதம் என்றும் எழுதி கையெழுத்திட்டிருக்கிறான்.
பிறகென்ன...? காஞ்சனா கண்ணொளி பெறுகிறாள். அரவிந்த் அவளிடம் உனக்கு கண்ணொளி தந்து வாழ்வளித்தவர் என்று அசோக்கின் சட்டமிடப்பட்டு, மாலையிடப்பட்ட படத்தைக் காட்டுகிறான். அவள் கதறி அழ, புகைப்படத்தில் அசோக் சிரித்துக் கொண்டிருக்கிறான்.
ஹை..நானே பர்ஸ்டு
ReplyDeleteஎன்னைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தறதுலயும் நீங்கதான் தங்கச்சி எப்பவும் ஃபர்ஸ்ட்.
Deleteசுருக்கமாக சுவாரஸ்யமாக உள்ளது.பக்கம் பக்கமாக நாவல்கள் படித்த எனக்கு இப்போதெல்லாம் படிக்கவே முடிவதில்லை.என்னைப்போல் உள்ளோருக்கு இது வரபிரசாதம்.நன்றி மிக நன்றி,
ReplyDeleteஇன்னும் பல நல்ல கதைகளை இதுபோல் சுருக்கித்தர உற்சாகம் தருகிறதும்மா உங்கள் கருத்து. என் மனம் நிறைந்த நன்றி.
Deleteஸாதிகா சொன்னதுதான் நானும் சொல்வது....இப்போதெல்லாம் பெரிய நாவல்களை படிக்க முடிவதில்லை...
Deleteவேறு மாதிரி நான் யூகம் செய்து வைத்திருந்தேன். பகிர்வுக்கு நன்றி சார் !
ReplyDeleteநன்றி.
(த.ம. 3)
ஊகத்தை மாற்றி விட்டதா கதை? படிக்கவும் விறுவிறுப்பாகவே இருந்தது தனபாலன். தங்கள் வருகைக்கும் வாக்குக்கும் என் இதயம் நிறைந்த நன்றி.
Deleteகதையின் முடிவை யூகிக்க முடியாத வகையில் பல திருப்பங்களுடன் முடித்திருக்கிறார் கதாசிரியர். அவருக்கு என் வாழ்த்துக்கள்!அந்த கதையை சிறப்பாக சுருக்கி தந்தமைக்கு உங்களுக்கு எனது பாராட்டுக்கள்!
ReplyDeleteகதையை ரசித்து கதாசிரியரை வாழ்த்தியும் என்னைப் பாராட்டியும் மகிழ்வளித்த தங்களுக்கு என் மனம் நிறைய நன்றி.
Deleteஉங்களின் பதிவுகள் பல பார்த்தபின்புதான்
ReplyDeleteநிறைய நாவல்கள் படிக்காமல் போய்விட்டோமோ
என்று தோன்றுகிறது..
சுருக்கித் தந்தமைக்கு நன்றிகள் பல..
இதுபோன்ற பல நல்ல பழைய நாவல்களை இனியும் தர முயல்கிறேன் நண்பரே. மிக்க நன்றி.
Deleteபகிர்வுக்கு நன்றி., பிரிதொரு சமயம் படித்துவிட்டு கருத்திடுகிறேன்!
ReplyDeleteசமயம் கிடைக்கும் போது அவசியம் படித்துக் கருத்திடுங்கள் தோழரே. மிக்க நன்றி.
Deleteஅழகாக சுருக்கி கொடுத்துவிட்டீர்கள்..
ReplyDeleteசுருக்கத்தை அழகென்று சொல்லி ரசித்த உங்களுக்கு என் உளம் நிறைந்த நன்றி கவிஞரே...
Deleteசிறப்பான நாவல் பகிர்வு! பலதிருப்பங்களை கொண்டு சிறப்பான முடிவு! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில் எக்ஸ்கியுஸ்மீ கொஞ்சம் பாராட்டுங்களேன் ப்ளீஸ்! http://thalirssb.blogspot.in
கதையின் விறுவிறுப்பை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி.
Deleteஇறைவனின் சித்தம் மனிதனின் வாழ்வு .எங்கோ தொடங்கி
ReplyDeleteஎங்கோ முடிந்த விதம் மனதை வருடியது .கதையை மிக
சிறப்பாக சுருக்கிக் கொடுத்த விதமும் அருமை!..தொடர வாழ்த்துக்கள் .
ரசித்துப் படித்து கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஎத்தனைத் திருப்பங்கள்? அம்மாடி!
ReplyDeleteபழைய நாவலை ரசித்துப் படித்து வியந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஸ்ரீராம்.
Deleteமூன்று பகுதிகளையும் படித்து ரசித்தேன். இப்படி ஒரு கதையைப் படித்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது கணேஷ். கதைச் சுருக்கத்திற்கு மிக்க நன்றி.
ReplyDeleteபாராட்டுகள்.
மூன்று பகுதிகளையு ஒருசேரப் படித்து ரசித்துக் கருத்திட்ட உங்களின் அன்பிற்கு மனமகிழ்வுடன் என் நன்றி.
Deleteவித்தியாசமாய் சென்ற நாவல் இறுதியில் நெஞ்சை கணக்க வைத்தது என்பது உண்மை... நாவலை சிறிதாகினாலும் அதன் சுவை குறையாமல் பார்த்துக் கொண்டது உங்களின் எழுத்துத் திறமை இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்
ReplyDeleteஆஹா... கதையை ரசித்ததுடன் என் எழுத்தையும் பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி சீனு.
Deleteஇவ்வளவு திருப்பங்கள் நான் எதிர்பார்கவே இல்லை... இருந்தாலும் நல்ல முடிவு தான்... தொடர் பதிவிற்கு நன்றி சார்....
ReplyDeleteதொடர்ந்து படித்து ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சமீரா.
Delete