கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Friday, July 27, 2012


கண்ணே காஞ்சனா-2
 
ந்த ஆண்டின் முடிவில் ஹவுஸ் சர்ஜன் பயிற்சி அரவிந்துக்கு முடிந்துவிட, ஓராண்டுக்குள் சென்னைக்கே வந்து, அவளைத் திருமணம் செய்து கொள்வதாக காஞ்சனாவிடம் கூறி விடைபெற்றுச் செல்கிறான். காஞ்சனா விடுமுறைக்கு ஊருக்குச் சென்றுவிட, உடல்நலம் குன்றும் அசோக்கிற்கு கல்பனா செய்யும் பணிவிடையில் அவன் நெகிழ்கிறான். காஞ்சனா-கல்பனா பிறந்தநாளின் போது நாடகத்துக்குச் செல்ல வேண்டுமென்று காஞ்சனாவும் கல்பனாவும் சொல்ல, நாடகம் என்றாலே பிடிக்காத அசோக் பீச் என்க, சீட்டெடுத்துப் பார்க்க முடிவாக, மூன்று சீட்டுகளிலும் பீச் என்று எழுதி ஏமாற்றி அவர்களை பீச்சுக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே வைத்துத்ன ட்ரிக்கை சொல்லி அவன் சிரிக்க, அவனை ஏமாற்ற முடிவு செய்யும் காஞ்சனா மறுதினம் கல்பனாவைப் போல் உடையணிந்து அவனுக்கு காப்பி எடுத்துச் செல்ல, முத்தம் கேட்டு அவள் கைபிடித்து இழுக்கிறான் அவன். உண்மையைச் சொல்லி அவன் ஏமாந்து விட்டதை ரசித்து கைகொட்டிச் சிரிக்கிறாள் காஞ்சனா. இதைவிடப் பெரிதாக வேறொரு நாள் அவன் ஏமாறுவான் என்று சவால் விடுகிறாள்.

ந்த விளையாட்டுகள் ஒருதினம் விபரீதமாகிறது. காஞ்சனாவுக்கு ஒருநாள் தாளமுடியாத தலைவலிவர, கல்லூரியிலிருந்து சீக்கிரமே வீடு வருகிறாள். கல்பனா கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட, முகம் கழுவி வரும் காஞ்சனா, தன் அறையில் வைத்திருக்கும் தூக்க மாத்திரை பாட்டிலில் இருந்து மாத்திரை எடுத்து விழுங்குகிறாள்.  தன் அறையில் துவைக்கப் போட்ட சேலைகள் வராததால், கல்பனாவின் அறைக்குப் போய் அவள் சேலை ஒன்றைக் கட்டிக் கொள்கிறாள். அப்போது மழை பலமாகப் பெய்ய, சாரல் அடிக்கிறது. ஜன்னல் கதவுகளை ஒவ்வொன்றாகச் சாத்திவிட்டு வரும் அவளை தூக்க மயக்கம் ஆட்கொள்ள, நடக்க முடியாமல் கட்டிலில் விழுந்து மயங்கி விடுகிறாள்.

தியத்திற்கு மேல் வேலை இல்லாததால் நண்பன் ஒருவன் அழைப்பின் பேரில் சூடான காட்சிகள் கொண்ட ஒரு இந்திப் படம் பார்த்து விட்டு நல்ல ‘மூடில்’ வீட்டுக்கு வருகிறான். கட்டிலில் கல்பனா படுத்திருக்கும் கோலம் காமத்தை விசிறிவிட, அவளை அணைக்கிறான். தூக்க மயக்கத்திலும் விழித்துப் பார்க்கும் காஞ்சனா, அசோக்கைப் பார்த்து உதற நினைத்தாலும், பேச நினைத்தாலும் மிக பலவீனமாக இருப்பதால் எடுபடவில்லை. அந்த நேரத்தில் மின்சாரமும் போய்விட, கூடல் நிகழ்ந்து விடுகிறது. மீண்டும் மின்சாரம் வந்தபோது கட்டிலில் படுத்திருக்கும் மனைவியின் ஆடையற்ற உடலை ரசிக்கிறான் அசோக்- அவள் அதுவரையில் வெளிச்சத்தில் பார்க்க அனுமதித்தில்லை ஆதலால். அப்போதுதான் அந்த மச்சங்கள் அவன் கண்ணில்பட, நடந்ததை அ‌வை விளக்க, இடிவிழுந்தது போல அதிர்ச்சிக்குள்ளாகிறான். இனனது செய்வதென்று அறியாமல் காரை எடுத்துக் கொண்டு இலக்கில்லாமல் ஓட்டிச் செல்கிறான்.

ல்பனா மழை ஓயும் வரை காத்திருந்து கோயிலிலிருந்து திரும்பிவர, வீட்டில் யாருமின்றி மயான அமைதியில் இருக்கிறது. தங்கள் அறை கட்டிலின் மீது மல்லிகைப் பூக்கள் கசங்கிக் கிடப்பதையும், ஒரு கடிதத்தையும் பார்க்கிறாள். தான் கறைபட்டு விட்டதாகவும், காரணமானவன் குற்றவாளி இல்லை என்றும் தான் இனி வரமாட்டேன் என்றும் காஞ்சனா எழுதிச் சென்றிருக்கிறாள். இரண்டையும் இரண்டையும் கூட்டிப் பார்க்கும் கல்பனாவால் அசோக்கை நினைத்தும் பார்க்க இயலாமல் வேரற்ற மரம் போல மயங்கிச் சரிகிறாள். ஊரெல்லாம் சுற்றியலைந்த அசோக் சற்று மனதை தேற்றிக் கொண்டு வீடு திரும்ப, கல்பனா கடிதத்துடன் மயங்கிக் கிடப்பதைப் பார்க்கிறான். அவள் மயக்கத்தை தெளிவிக்க, நடந்ததை சொல்லி அழுகிறாள். அநியாயத்துக்கு நல்லவனான அசோக்கும், நடந்த விஷயத்தை அவளிடம் சொல்லி, தானே குற்றவாளி என்பதையும் ஒப்புக் கொள்கிறான்.

காஞ்சனாவைத் தேடியலைந்தும் அசோக்கால் கண்டுபிடிக்க முடியவில்லை. கல்பனா அவனை மன்னித்து விட, குற்ற உணர்ச்சி கொள்கிறான் அவன். காஞ்சனா காணாமல் போய்விட்டாள், காதல் காரணமாக ஓடியிருப்பாள் என்று பெற்றோரிடம் (கணவனுக்காக பொய்) சொல்லி, பேப்பரில் ‘காணவில்லை’ விளம்பரம் தருகிறாள் கல்பனா. கிராமத்திலிருக்கும் அரவிந்த் அந்த விளம்பரத்தைக் கண்டு திடுககிடுகிறான். உடனே புறப்பட்டு விளம்பரத்திலுள்ள அசோ்க்கின் சென்னை முகவரிக்கு வந்து காஞ்சனாவின் கிளாஸ்மேட் என்று சொல்லி கல்பனாவிடம் பேச, அவள் காதலனுடன் ஓடியிருக்கிறாள் என்று கல்பனா சொல்வதைக் கேட்டதும் குழம்புகிறான். தன்னைத் தவிர வேறொரு காதலனா என்று அவன் மனம் தத்தளிக்க குழப்பத்துடன் திரும்புகிறான்.

காஞ்சனா ஒதுக்குப்புறமான கடற்கரையில் மனவேதனை தாளாமல் தண்ணீருக்குள் இறங்குகிறாள். கடல் அலை இழுத்துச் செல்ல நினைவிழக்கிறாள். மீண்டும் கண் விழித்தபோது தான் ஒரு மீனவர் குப்பத்தில் இருப்பதையும், தன்னை மீனவர்கள் காப்பாற்றியதையும் அறிகிறாள். அவர்கள் அங்கேயே தங்கும்படி அவளிடம் கேட்க, அவளும் அவர்கள் பாதுகாப்பில் வெளியே வராமல் அங்கேயே தங்கி விடுகிறாள். மூன்று மாதங்கள் சென்றுவிட, கல்பனா நாளுக்கு நாள் உடல் நலிந்து கடும் காய்ச்சலில் விழுகிறாள். டாக்டர் கை விரித்து விட, அசோக்கிடம் காஞ்சனாவைத் தேடிக் கண்டுபிடித்து கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சத்தியம் வாங்குகிறாள். அடுத்த கணம் அவள் உயிர்ப் பறவை பறந்து விடுகிறது.

ரவிந்த் காஞ்சனா செய்த துரோகத்தை நினைத்து மனம் குமுறிக் கொண்டிருக்கிறான். அச்சமயம் பம்பாயிலிருந்து (அப்போது மும்பை அல்ல) வந்த அவன் சித்தப்பா, தான் நடத்தி வரும் நர்சிங்ஹோமை அவனிடம் ஒப்படைப்பதாகக் கூறி அழைக்க, தனக்கும் மனமாற்றமாக இருக்கும் என்று பம்பாய் சென்று அதை ஏற்கிறான் அரவிந்த. சில நாட்களிலேயே புதிய இளம் டாக்டரின் கைராசி அங்கு பிரபலமாகி விடுகிறது.

ந்த மீனவர் குப்பத்துக்கு காஞ்சனா சென்று மேலும் ஒரு மாதம் ஓடி விட்டிருக்க, காஞ்சனா மயங்கி விழுந்ததன் காரணம் கர்ப்பம் என்று கூறிச் செல்கிறார் டாக்டர். அவளுக்கு ஆதரவுதந்து குடிசையில் வைத்திருந்த லட்சுமி என்பவள் தன் கண‌வனையும், காஞ்சனாவையும் இணைத்து சந்தேகப்பட, அவர்கள் அனைவருக்கும் நடந்தவற்றை மறைக்காமல் சொல்கிறாள் காஞ்சனா. இதற்கு மேலும் தான் அங்கிருந்தால் அவர்கள் நிம்மதி கெடும் என்று முடிவெடுத்து அன்றிரவே அங்கிருந்து கிளம்பி மீண்டும் சென்னை நோக்கிச் செல்லத் தொடங்குகிறாள் காஞ்சனா.

-திசைக்கொருவராய் பிரிந்திருக்கும் இந்த மூவரையும் சாமர்‌த்தியமாக கதை நகர்த்தி பம்பாக்கு கதாசிரியர் கொண்டு செல்லும் நேர்த்தியையும், இந்த உறவுச் சிக்கலின் முடிவையும் சொல்ல இன்னும் பல வரிகள் தேவைப்படுகின்றன. ஆகவே... (வேறு வழியின்றி) அடுத்த பதிவி்ல் (நிச்சயமாக) முடித்து விட்டு ‘கத்தரிக்க’ப் போய் விடுகிறேன். அதுவரை மன்னித்து உருள்வீர்... ஸாரி, மன்னித்து அருள்வீர் ஜகத்தீரே!

15 comments:

  1. சுவாரஸ்யமாக உள்ளது.... அடுத்தப் பதிவை படிக்க ஆவலாய் உள்ளேன். நன்றி..

    (த.ம. 2)

    ReplyDelete
    Replies
    1. சுவாரஸ்யம் என்று சொல்லி ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  2. ரொம்ப சிக்கலான கதை தான் சார் ... நீங்கள் கத்தரிக்கும் விதம் அருமை .....

    ReplyDelete
    Replies
    1. கத்தரிக்கும் விதமா, சித்தரிக்கும விதமா சீனு? ரசித்துப் படிக்கின்ற உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  3. சுருக்க சுருக்க பெருக்கிறதே.....! மறுபடியும் தொடரும்? கதைக்கு ஜெ... ஓவியம்தானே...? இது ஒரு டோஸ் கேப்ஸ்யூல் (நாவல்) இல்லை போலும். மூன்று டோஸ் கேப்ஸ்யூலோ ....!!

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஸ்ரீராம். ஜெயின் ஓவியங்கள்தான் கதையை அலங்கரித்தவை. இந்த முறை டோஸ் கூடித்தான் விட்டது. இனி வரும கதைகளில் வழக்கம் போல் சிறு கேப்ஸ்யூலாகவே தந்து விடலாம். மிக்க நன்றி.

      Delete
  4. உண்மையில் இது சிக்கலான கதைதான். முடிவை யூகிக்க முடியவில்லை. அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. காத்திருக்கும உஙகளுக்கு என் உளம் கனிந்த நன்றி. உடன் மீதிப் பகுதியுடன் வருகிறேன்.

      Delete
  5. குழம்ப வைக்கும் கதை! சிறப்பான பகிர்வு!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  6. பகிர்வுக்கு நன்றி (TM 5)

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  7. இரண்டு பகுதிகளையும் படித்தேன். மிகவும் சுவாரசியமான கதைதான். சந்தேகமே இல்லை. முடிவையும் யூகிக்க முடியவில்லை. பார்ப்போம். கதாசிரியரின் கற்பனைத் திறனை. பகிர்வுக்கு நன்றி கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. இரண்டு பகுதிகளையும் ஒருசேரப் படித்து முடிவுக்காய் காத்திருக்கும் என் தோழிக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  8. அடுத்த பகுதியையும் படித்து விடுகிறேன்...

    ReplyDelete