கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Saturday, January 25, 2014

மைதானம் நிறைய புற்கள் இருந்தாலும் மேய்வதற்கு குதிரைக்கு நேரமில்லாமல்தான் போய்விட்டது. பாருங்களேன்... ‘சித்திர மேகலை’ககுப் பின் எதுவும் மேயாமலேயே ஆறு மாதங்கள் ஓடிவிட்டன...! (எலேய்... ஆறு மாசமா நல்லாக் கொறட்டை விட்டுட்டு, இப்ப ஆச்சரியமா படறே?ன்னு நீங்க பல்லை நறநறப்பது கேட்கிறது!) போகட்டும்... இந்த சித்தித் தொடருடன் சித்திர மேகலையும் இணைந்தே இனி தொடர்ந்து வரும்! (அட... நம்புங்கப்பா...!)

இந்த சித்திரக் கதை பழைய குமுதம் இதழ்களிலிருந்து (ஆண்டு தெரியவில்லை) தொகுத்து வழங்கப்படுகிறது. நன்றி குமுதம்!

 


22 comments:

  1. பிரெய்லின் வாழ்க்கை இதுவரை அறியாத ஒன்று. வாசிக்கும்போதே மனம் பதைக்கிறது. படங்களுடன் பார்க்கும்போது நேரிலேயே பார்க்கும் உணர்வு. பகிர்வுக்கு நன்றி கணேஷ். குமுதத்தின் அன்றைய தரத்துக்கும் இன்றைய தரத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்பதற்கு இந்த ஒரு பதிவே சாட்சி.

    வெகுநாட்களுக்குப் பின்னர் மேய்ச்சல் களத்தைத் திறந்துவிட்டமைக்கு நன்றி கணேஷ். தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
    Replies
    1. நிஜந்தான் கீதா...! அன்றைய குமுதத்திற்கும் இன்றைய குமுதத்திற்கும் எத்தனை ஏணிகள் வைத்தாலும் எட்டாது. உங்களைப் போன்றவர்கள் தரும் உற்சாகமே இந்தக் குதிரையை நிறைய மேயச் செய்கிறது. அதற்கு என் ஸ்பெஷல் தாங்க்ஸ்!

      Delete
  2. மேச்சலுக்கு வந்துக்கினேம்பா... சூப்பருபா...!

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    ReplyDelete
    Replies
    1. மேய்ச்சலையும் ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  3. பிரெய்லின் வரலாறு படங்களுடன் அறிய ஆவலாய் உள்ளேன்...

    இப்போது மைதானம் அழகாக உள்ளது... ஆனால்...

    தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்...

    தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் டி.டி. புதிய டெம்ப்ளேட் மாற்றியதால் இந்த சிக்கல் ஏற்பட்டது. இப்போது டாட்காம் ஆக மாற்றி, ஓட்டுப் பட்டையையும் சரிசெய்து விட்டேன். தளத்தை ரசித்துக் கருத்திட்டமைக்கும், அக்கறை+அன்புடன் தளத்திற்காய் ஆலோசனை தந்ததற்கும் என் இதயம் நிறை நன்றி. எப்போது எந்த உதவி தேவைப்படினும் தயங்காமல் தொடர்பு கொள்கிறேன் நண்பரே... மீண்டும் மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
    2. இப்போது வேலை செய்கிறது...

      +1

      Delete
  4. சித்திரமான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. சித்திரக் கதையை ரசித்த தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி!

      Delete
  5. வாழ்க்கை வரலாற்று தொடரா!? ரைட்டு

    ReplyDelete
    Replies
    1. மகத்தான அந்த மனிதரின் வாழ்க்கையைத் தொடர்ந்து படிக்கப் போகும் தங்கைக்கு உற்சாகமுடன் என் நன்றி!

      Delete
  6. #அட... நம்புங்கப்பா...!)#
    உங்களை நம்புகிறோம் பாலகணேஷ்...கண்ணை திறந்திட்டீங்க !

    ReplyDelete
    Replies
    1. நம்பிய நண்பருக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  7. மேய்ச்சல் மைதானம் மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி....

    தொடரட்டும் பதிவுகள். கண் பார்வை இல்லாதவர்களுக்கு கண் அளித்தவர் பற்றிய தொடர் தொடர்ந்து படிக்க ஆவலுடன்.

    ReplyDelete
    Replies
    1. அதைப் படிக்கையில் என்னால் அவரை வியப்புடன் ரசிக்க முடிந்தது வெங்கட்! அதே ரசனை உங்களுக்கும் கிடைக்கும் என்பதில் உறுதியுடன் தொடர்கிறேன். உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  8. அச்சச்சோ, அப்புறம் என்ன ஆச்சு?

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் என்னவா... (இறைவனால்/இயற்கையால்) சோதிக்கப்பட்டவர் சாதித்தார். அதை அறிய தொடர்ந்து வருக! ஆவிக்கு அன்புடன் என் நன்றி!

      Delete
  9. வார/மாத இதழ்கள் ஒதுக்கி வைத்த அருமையான விஷயம் படக் கதைகள் ! உங்க மைதானத்தில் மேய முடிவது மகிழ்ச்சியே

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மகிழ்வினில் நானும் மகிழ்கிறேன் அண்ணா. மனம் நிறைந்த நன்றி!

      Delete
  10. ப்ரெய்லின் வாழ்க்கை வரலாற்றை படங்களுடன் படிக்கும் போதே மனம் பதைபதைத்தது...அடுத்து என்ன ஆனதோ.... தொடர்ந்து வருகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வரும் உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete