வெரி ஸாரி... நாளாச்சுங்கறதால என்ன கதைன்னு கிட்டத்தட்ட மறந்தே போயிருக்கு்ம். இனி இடைவிடாம தொடர்ந்து வரும்கறதால சிரமம் பாராம இந்த முன்கதைச் சுருக்கத்தைப் படிச்சுட்டு தொடருங்க ப்ளீஸ்...!
அத்தியாயம் - 1
துப்பறியும் பரஞ்சோதிக்கு டெலிபோன் - பிரபல கோடீஸ்வரி தமயந்தியின் கணவன் கதறல் - ‘என்னை கடத்தப் போகிறார்கள்’ - குழப்ப ஒலிகள் - உதவியாளர் ராஜுவுடன் பரஞ்சோதி விரைதல் - ஒரு மனிதனின் பிணம் - ஒரு அழகி வருகை - இவன் சுந்தரல்ல, தமயந்தியின் மெய்க்காப்பாளன் மோகன் எனல் - அவள் தமயந்தியின் காரியதரிசி அகல்யா என்பதை அறிதல் - அவள் கிளம்ப, பரஞ்சோதி தடுக்க, துப்பாக்கி காட்டி மிரட்டுதல்.
அத்தியாயம் - 2
அவரை அறையில் தள்ளி பூட்டிச் செல்லல் - ராஜு விடுவித்தல் - அவள் உண்மையில் தமயந்தியின் காரியதரிசியா?-சந்தேகம் - போலீஸ் அகல்யா பற்றி விசாரித்தல் - அவள் இல்லை - மறுநாள் காலை லலிதா என்ற காணாமல் போன பெண்ணை கண்டறிய பரஞ்சோதி கிளம்பல் - பாஸ்கர் என்பவ்ன் கடத்தி வைத்திருத்தல் - சண்டை - எதிர் அறை குத்துச்சண்டை வீரன் சங்கர் பரஞ்சோதியை காப்பாற்றுதல் - லலிதாவைக் காப்பாற்றுகிறார் பரஞ்சோதி.
அத்தியாயம் - 3
தமயந்தியிடமிருந்து அழைப்பு - மூன்று லட்சம் தந்தால் கணவன் திரும்பக் கிடைப்பான் என போன் வந்ததை கூறுதல் - பணத்தை பரஞ்சோதி கொடுத்து கணவரை மீட்டுவர வேண்டுகோள் - ராஜுவிடம் தங்களை பின்தொடர்ந்து பணத்தை எடுப்பவரை கண்டறிய உத்தரவு - பணத்தை பாழடைந்த பங்களா கூரையில் வைத்தல் - தூண்டில் மூலம் அது எடுக்கப்படுதல் - ராஜு கொண்டு வருகிறான் ஏமாற்றத் தகவல்.
இனி...
துப்பறியும் பரஞ்சோதிக்கு டெலிபோன் - பிரபல கோடீஸ்வரி தமயந்தியின் கணவன் கதறல் - ‘என்னை கடத்தப் போகிறார்கள்’ - குழப்ப ஒலிகள் - உதவியாளர் ராஜுவுடன் பரஞ்சோதி விரைதல் - ஒரு மனிதனின் பிணம் - ஒரு அழகி வருகை - இவன் சுந்தரல்ல, தமயந்தியின் மெய்க்காப்பாளன் மோகன் எனல் - அவள் தமயந்தியின் காரியதரிசி அகல்யா என்பதை அறிதல் - அவள் கிளம்ப, பரஞ்சோதி தடுக்க, துப்பாக்கி காட்டி மிரட்டுதல்.
அத்தியாயம் - 2
அவரை அறையில் தள்ளி பூட்டிச் செல்லல் - ராஜு விடுவித்தல் - அவள் உண்மையில் தமயந்தியின் காரியதரிசியா?-சந்தேகம் - போலீஸ் அகல்யா பற்றி விசாரித்தல் - அவள் இல்லை - மறுநாள் காலை லலிதா என்ற காணாமல் போன பெண்ணை கண்டறிய பரஞ்சோதி கிளம்பல் - பாஸ்கர் என்பவ்ன் கடத்தி வைத்திருத்தல் - சண்டை - எதிர் அறை குத்துச்சண்டை வீரன் சங்கர் பரஞ்சோதியை காப்பாற்றுதல் - லலிதாவைக் காப்பாற்றுகிறார் பரஞ்சோதி.
அத்தியாயம் - 3
தமயந்தியிடமிருந்து அழைப்பு - மூன்று லட்சம் தந்தால் கணவன் திரும்பக் கிடைப்பான் என போன் வந்ததை கூறுதல் - பணத்தை பரஞ்சோதி கொடுத்து கணவரை மீட்டுவர வேண்டுகோள் - ராஜுவிடம் தங்களை பின்தொடர்ந்து பணத்தை எடுப்பவரை கண்டறிய உத்தரவு - பணத்தை பாழடைந்த பங்களா கூரையில் வைத்தல் - தூண்டில் மூலம் அது எடுக்கப்படுதல் - ராஜு கொண்டு வருகிறான் ஏமாற்றத் தகவல்.
இனி...
4. படுகொலையுண்ட பாவை
"என் கார் வழியில் சிறிது மக்கர் செய்ததினால் என்னால் உடனே அங்கு போக முடியவில்லை. ஐந்து நிமிஷம் கழித்து நான் அங்கே போனபோது, அங¢கு யாரையும் நான் பார்க்கவில்லை" என்றான் ராஜூ. "பரவாயில்லை" என்று கூறிய பரஞ்சோதி, "நாம் வேறு ஏதாவது வழியில்தான் முயற்சி செய்ய வேண்டும்" என்றார்.
"என் கார் வழியில் சிறிது மக்கர் செய்ததினால் என்னால் உடனே அங்கு போக முடியவில்லை. ஐந்து நிமிஷம் கழித்து நான் அங்கே போனபோது, அங¢கு யாரையும் நான் பார்க்கவில்லை" என்றான் ராஜூ. "பரவாயில்லை" என்று கூறிய பரஞ்சோதி, "நாம் வேறு ஏதாவது வழியில்தான் முயற்சி செய்ய வேண்டும்" என்றார்.
"அகல்யாவின் அடையளத்தை வைத்துக் கொண்டு அவள் எங்கே காரை வாடகைக்குப் பிடித்தாள் என்று கண்டுபிடித்தால் நமக்கு ஏதாவது உபயோகமான தகவல் கிடைக்கக் கூடும்" என்றாள் சுசிலா. "ஆமாம்" என்று ஒப்புக்கொண்ட பரஞ்சோதி, ராஜூவின் பக்கம் திரும்பி, "நீ கார் வாடகைக்குத் தரும் கம்பெனிகளின் பெயர்களையும், அவற்றின் டெலிபோன் நம்பர்களையும் குறித்துக் கொண்டு வா" என்றார்.
அங்கிருந்து கிளம்பிய ராஜூவின் மனதில் வேறொரு திட்டம் உருவாகி இருந்தது. அதன்படி ஒவ்வொரு ஓட்டலாகச் சென்று அகல்யாவைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான். ஆனால் பல ஒட்டல்களில் விசாரித்தும் அவனுக்கு எந்தவிதத் தகவலும் கிடைக்கவில்லை. மிகவும் சோர்ந்து போன ராஜூ, ஒரு ஒட்டலில் நுழைந்து ஒரு கோப்பை காபி அருந்தி விட்டு, சிறிதும் நம்பிக்கையில்லாமல் அந்த ஒட்டல் முதலாளியையும் விசாரித்தான்.
"நீங்கள் கூறும் அடையாளமுள்ள பெண் இரண்டு நாட்களுக்கு முன் இங்கு வந்து தங்கினாள். தன் பெயர் அகல்யா என்று கூறினாள். அவளுக்கு 'மனோகர் அன்ட் கோ' விலிருந்து டெலிபோன் வந்தது. அவர்கள்தான் அவளுக்கு சிகப்பு நிற அம்பாசிடர் கார் ஒன்றை வாடகைக்குக் கொடுத்திருந்தனர்" என்றார் ஓட்டல் முதலாளி.
"அவளோடு வேறு யாரும் டெலிபோன் பேசவில்லையா?" என்று கேட்டான் ராஜூ. சிறிது நேரம் யோசனையோடு அமர்ந்திருந்த அந்த ஓட்டல் முதலாளி, "வேறு டெலிபோன்கள் எதுவும் அவளுக்கு வரவில¢லை. ஒரு வாரம் இங்கே தங்குவதாகக் கூறிய அகல்யா, திடீரென வந்த அன்று மாலையே அறையைக் காலி செய்துவிட்டு சென்று விட்டாள்" என்றார். சில நிமிஷங்களில் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு அங்கு இருந்து கிளம்பிய ராஜூ, நேராக பரஞ்சோதியின் ஜாகைக்குச் சென்றான்.
அந்தச் சமயத்தில் பரஞ்சோதி, அன்றையத் தபால்களுக்குப் பதில்களை சுசீலாவிடம் கூறிக்கொண்டிருந்தார். "அகல்யா தங்கியிருந்த விலாசத்தைக் கண்டு பிடித்து விட்டேன் சார்" என்று கூறியபடி உள்ளே நுழைந்த ராஜூ தான் ஓட்டல் முதலாளியிடம் கேட்டறிந்தவைகளை அவரிடம் கூறினான்.
"நீங்கள் உடனே 'மனோகர் அன் கோ' விற்குச் சென்றால் ஏதாவது பயனுள்ள தகவல்கள் கிடைக்கும். சார்" என்றாள் சுசீலா. சில வினாடிகளில் ராஜூவும் துப்பறியும் பரஞ்சோதியும் தங¢கள் காரில் கிளம்பினார்கள். ஆனால் அவர்கள் அந்தச் கம்பெனியை அடைந்தபொழுது மனோகர் அங்கே இல்லை. அங்கே ஒரு சிறுவன் தான் இருந்தான். அவனை விசாரித்தபோது, மனோகரின் மனைவி பவானி மட்டும் வீட்டில் இருப்பதாகச் கூறினான். பவானியைப் பார்பபது நல்லதென்று பரஞ்சோதிக்குத் தோன்றியதால் ராஜூவுடன், மனோகரின் வீட்டை நோக்கி நடந்தார். அந்தச் சிறுவன் அவர்கள் இருவரையும் சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
பரஞ்சோதி கதவைத் தட்டிய சில வினாடிகளுக்கெல்லாம் பவானி கதவைத் திறந்தாள். அவர்கள் இருவரையும் சந்தேகத்தோடு பார்த்தவளாய்,"நீங்கள் யார்?" என்று கேட்டாள்.
‘‘நாங்கள் இருவரும் உன்னுடன் சில நிமிஷங்கள் பேச வேண்டி இருக்கிறது, பவானி’’ என்று கூறியபடி உள்ளே நுழைந்தார் பரஞ்சோதி. அவரோடு ராஜுவும் தொடர்ந்து உள்ளே நுழைந்தான். ‘‘மனோகர் வீட்டில் இல்லை?’’ என்றாள் பவானி.
‘‘நாங்கள் உன்னைப் பார்ப்பதற்க்குத்தான் வந்தோம்’’ என்று கூறிய பரஞ்சோதி, ‘‘உன் கணவர் பல விதத்திலும் உன்னை துன்புறுத்துவதாகக் கேள்விப்பட்டோமே’’ என்று அவள் முகத்தைப் பார்த்தபடி கூறினார். அவர் திட்டம் நன்றாகவே வேலை செய்தது. சில வினாடிகள் மௌனமாக அமர்ந்திருந்த பவானி, ‘‘எனக்கு அவர் பணம் கூட கொடுப்பதில்லை’’ என்று குமுறினாள்.
‘‘நீ எங்களுக்கு சில விஷயங்களைப் பற்றி தகவல் கொடுத்தால் உனக்கு நாங்கள் பணம் கொடுக்கிறோம்’’ என்றார் பரஞ்சோதி. ‘‘சுந்தர் கடத்தல் பற்றித்தானே?’’ என்று கேட்ட பவானி, ‘‘எனக்கு அந்த விஷயத்தைப் பற்றி பல விவரங்கள் தெரியும். எனக்கு ஒன்றும் தெரியாதென்று என் கணவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பலரைத் தூக்கு மேடைக்கு அனுப்பும் அளவுக்கு எனக்கு விஷயங்கள் தெரியும்’’என்று நிறுத்தினாள்.
‘‘நீ எங்களுக்கு அந்த விஷயங்களைக் கூறு’’ என்றான் ராஜு.
‘‘உங்களுக்கு அந்த விஷயங்களைக் கூறிய அடுத்த வினாடியே என் கணவர் என்னைக் கொன்று விடுவார். அதனால்தான் இந்த ஊரை விட்டே ஓடி விட வேண்டும். அதற்கு எனக்கு ஒரு ஆயிரம் ரூபாய் நீங்கள் தருவதாக இருந்தால் நான் அந்தச் செய்திகளைக் கூறுகிறேன்.’’
‘‘நீ அந்த விஷயங்களை எங்களுக்குக் கூறு. நான் உனக்கு பணம் கொண்டு வந்து தருகிறேன்’’ என்றார் பரஞ்சோதி.
‘‘முடியாது! நீங்கள் முதலில் என்னிடம் பணத்தைக் கொடுத்தால்தான் நான் பேச ஆரம்பிப்பேன்’’ என்று பவானி தீர்க்கமாகக் கூறினாள்.
அதற்கு மேல் அவளிடம் பேசிப் பயனில்லை என்று தீர்மானித்தார் பரஞ்சோதி. ராஜுவோடு கிளம்பினார். கடைச் சிறுவர் அவர்கள் இருவரையும் முறைத்துப் பார்த்தான். அவனைக் கவனித்ததாகவே காட்டிக் கொள்ளாமல் இருவரும் காரில் ஏறிக் கொண்டு விரைந்தார்கள்.
அவ்கள் கார் கண் பார்வையை விட்டு மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவன், வேகமாக டெலிபோன் அருகே சென்று ஏதோ ஒரு நம்பருக்கு டெலிபோன் செய்தான்.
பரஞ்சோதி தனது பாங்க் கணக்கிலிருந்து அவசர அவசரமாக ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு ராஜுவையும் அழைத்துக் கொண்டு மனோகரின் ஜாகையை நோக்கி விரைந்தார். ‘‘எனக்கென்னவோ அவளை உயிருடன் பார்ப்போமோ என்று சந்தேகமாக இருக்கிறது’’ என்றார் பரஞ்சோதி.
‘‘ஏன்?’’ என்று கேட்டான் ராஜு.
‘‘நாம் அவளைப் பார்த்து விட்டுச் சென்றதை எப்படியும் மனோகர் அறிந்திருப்பான். உடனே தன் ரகசியங்களை அவன் வெட்ட வெளிச்சமாக்கி விடுவானென்று பயந்து போய் அவனைக் கொலை செய்து விடலாம்’’ என்றார் பரஞ்சோதி.
அதன் பிறகு மனோகரின் ஜாகையை அடையும் வரை இருவரும் பேசவில்லை. பவானி உயிரோடு இருக்க வேண்டுமென்று தவித்தான் ராஜு. அவர்கள் மனோகரின் ஜாகையை அடைந்திருந்த போது அந்தச் சிறுவனைக் காணவில்லை. ஜாகைக் கதவு விரியத் திறந்திருந்தது.
‘‘பவானி... பாவனி...’’ என்று அழைத்தபடி இருவரும் ஒவ்வொரு அறையாக நுழைந்து தேடினார்கள். ஆனால் அவளைக் காணவில்லை. இருவரும் வாசலில் நின்று கொண்டு யோசனையோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். எதேச்சையாக ஜன்னல் வழியாக வெளியே பார்த்த ராஜு, ‘‘வெளியே ஒரு கார் ஷெட் திறந்திருக்கிறது. அதற்குள் அவள் இருக்கலாம்’’ என்றான்.
உடனே இருவரும் கார் ஷெட்டுக்கு ஓடினர். அங்கு ஒரே நிசப்தமாக இருந்தது. ‘‘பவானி’’ என்று பரஞ்சோதி அழைத்த குரலுக்கும் பதிலில்லை. ஒரு பழைய காரின் பின்னே ரத்த வெள்ளத்தில் கிடந்தாள் பவானி. அவள் மார்பில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருந்தது.
-அப்புறம்..?
அடடா... இப்படி ஆயிற்றே...
ReplyDeleteமுன்கதை சுருக்கத்திற்கு நன்றி சார்...
ரசித்துப் படிக்கும் உங்களுக்கு என் மனம் நிறை நன்றி நண்பரே!
Deleteஇந்த ஐடியா சூப்பரா இருக்கே!!!! இனிய பாராட்டுகள்!
ReplyDeleteமகிழ்வு தந்த உங்களின் பாராட்டுக்கு மனம் நிறைய நன்றி டீச்சர்!
Deleteநிஜமாவே எனக்கு கதை முழுவதும் மறந்து போச்சி..பிளாஷ்பாக் படிச்சிட்டு வரேன்.. உங்கள் டெவலொபிங்க் ஹிண்ட்ஸ் மாதிரி கதை சுருக்கம் நல்ல இருக்கு!!
ReplyDeleteபாவம் பவானி! இந்த பரஞ்சோதி கைல காலணா கூடவ இல்லாம வெளியவருவான்!
சில சமயம் துப்பறியும் நிபுணர்கள் கூட அசட்டுத்தனமா நடந்துப்பாங்க... (அப்படி இல்லாட்டா எப்படி சுவாரஸ்யமா கதை நகருமாம்?) முன்கதை சொன்ன ஸ்டைலை ரசித்த சமீராவுக்கு என் இதயம் நிறைந்த நன்றி!
Deleteமுன்கதை சுருக்கம் தந்ததால் தப்பித்தோம்! :)
ReplyDeleteநீண்ட இடைவெளி ஆகிவிட்டதல்லவா....
இப்படி அநியாயமாய் ஒரு கொலை! :(
இனி இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து விடுகிறேன் வெங்கட்! அநியாயமாய் ஒரு கொலைன்னு இதுக்கே வருத்தப்பட்டா எப்படி...? கதையில இன்னும் கொலைகள் பாக்கி இருக்கே! அதுக்குப் பின்னால ஒரு எதிர்பாராத க்ளைமாக்ஸும் வருதே! அதனாலதான் இந்தக் கதைய செலக்ட் பண்ணினேன் உங்களுக்குத் தர... தவறாம தொடர்ந்து படிச்சிடுங்க நண்பா! மிக்க நன்றி!
Deleteமேதாவி மாதிரி எழுதுவீங்களா என்று ஒரு பிரபல எழுத்தாளரை பதிப்பாளர் கேட்டாராம். மாதிரி என்ன அப்படியே எழுதறேன் என்றாராம் அந்த எழுத்தாளர்! சமீபத்தில் படித்தது!
ReplyDeleteசபாஷ் ஸ்ரீராம்! இந்தக் கதையை வெளியிடறதுக்கு ஒரு காரணம் உண்டு. இதே கதையை உல்டா பண்ணி தமிழில் ஒரு பிரபல மர்ம நாவலாசிரியர் புதிய கதை மாதிரி நாவல் எழுதியிருந்தாங்க. க்ளைமாக்ஸ் படிச்சதும் உங்களுக்கே புரிஞ்சிடும். புரியாட்டி... எனக்கு தொலைபேசுங்க. அந்த ரகசியத்தை சொல்றேன். மேதாவியை ஜெராக்ஸ் பண்ணின மேதாவியைத் தெரிஞ்சுக்கலாம். மிக்க நன்றி!
Deleteஉங்களது தொடர் அருமை அத்துடன் சமுதாய நலனுக்கான ஒரு பயனுள்ள விழிப்புணர்வு தகவலை பயன்படுத்தி எழுதினால் படித்தவருக்கும் பயனுள்ளதாக இருக்குமே! தவறு செய்தால் தான் கீரோ கீரோக்களுக்கு போக்குவரத்து விதி இல்லை கீரோக்கள் அனைத்து சட்டங்களையும் கையில் எடுத்துக்கொள்ளலாம் என்று அப்பாவியும் கீரோகனக்காய் ஆசைப்பட்டு கம்பிஎன்னிகொண்டு இருக்கின்றார்கள் தவறு என்று தெரியாமலே அப்பாவிகள் சிலர் தவறு செய்கின்றார்கள் . நம் பிள்ளை கீரோவாக இருக்கின்றான் என்று நம்பி ஜீரோவகிக் கிடக்கும் பிள்ளைகளால் மன ஊளைச்சலுக்கு ஆளாகும் பெற்றோர்களின் நிலையை எண்ணிப்பார்க்காமல் இளைஞர்கள் திசை மாறிப் போவதற்கு ஊடகங்களும் ஒரு காரணமாகின்றது அந்த மனித வளம் அழியாமல் காக்க வேண்டியது நாம் தான் தோழரே முடிந்தால் முயற்சி செய்யுங்கள் தோழரே
ReplyDeleteஇப்பொழுதான் பழைய (மறந்துபோன) தொடர்களை படித்துவிட்டு வருகிறேன். மேதாவி சிரஞ்சீவி போன்றோர்களின் கதைகளை பள்ளியில் படிக்கும்போது விரும்பி படித்தவன் நான். தொடர்கிறேன்.
ReplyDelete