அடாடா... மைதானம் முழுக்க புற்கள் வளர்ந்து அடர்ந்து கிடக்கின்றனவே! இந்தக் குதிரை சிலகாலம் மேய வராததன் விளைவு.... போகட்டும், இனி நிறைய மேயலாம். மேய்வதற்காக இதனை இங்கு இழுத்து வந்த ‘திடங்கொண்டு போராடு’ சீனுவுக்கும், ‘நதிக்கரையில்’ சமீராவுக்கும் நன்றிகளுடன் துவங்கலாம் இப்போது.
தமிழில் நாம் புதுமைப்பித்தனின் சிறுகதைகளை எப்படிக் கொண்டாடி ரசிக்கிறோமோ, அப்படி ஆங்கிலத்தில் ‘ஓஹென்றி’ எழுதிய சிறுகதைகள். எதிர்பாராத முடிவுடன் சிறுகதைகளைப் படைப்பது அவரின் தனித்துவம். அவரின் சிறுகதை ஒன்றை இங்கே படியுங்கள்... அல்லது பாருங்கள்...!
அப்புறம்... அவள் நினைத்தபடி அவன் இப்போதும் அவள் அழகாக இருப்பதாக நினைத்தானா, என்ன செய்தான், க்ளைமாக்ஸ் என்ன என்பதை திங்களன்று மைதானத்தி்ல் கண்டு ரசியுங்கள் நீங்கள்!
காலத்தை வெல்லும் கதையாயிற்றே,,,
ReplyDeleteஆம் ரிஷபன் ஸார்! எவர்க்ரீன் என்று சொல்லுகிற லிஸ்டில் ஓஹென்றியின் சில சிறுகதைகளுக்கு இடமுண்டு. இது ரசிக்கப்பட்டால் இன்னொரு அற்புத சிறுகதையையும் இப்படி வழங்க எண்ணமுண்டு எனக்கு. பார்க்கலாம். உங்களுக்கு மனம் நிறைய மகிழ்வுடன் என் நன்றி!
Deleteவணக்கம் நண்பரே...
ReplyDeleteவாங்கும் சம்பளம் குறைந்துவிட்டால்..
பெயர்ப்பலகை எழுத்துகூட மங்கிவிடும்...
சரிதான்... உண்மை...
அருமையான கதை நண்பரே.
ஜிம் சந்தோசப்பாட்டாரா....
அடடா...
மண்டையக் குடையுதே...
மேய்ச்சல் நிலம் இன்று
மேயப்பட்டாலும் பசுமையாக...
இந்தக் கதை உலகப் புகழ் பெற்றதுங்கறதால இதோட முடிவு பெரும்பாலானவர்களுக்கு தெரிஞ்சதா இருக்கும்னுதான் ரெண்டாப் பிரிச்சுக்கிட்டேன் மகேன்! நீங்க படிச்சதில்லன்னா... மண்டையக் குடைய வேணாம். மண்டே வந்துருங்க. உற்சாகம் தந்த உங்களுக்கு என் .உளம் நிறை நன்றி!
Deleteகதை சுவாரசியம். சஸ்பென்சை சீக்கிரம் உடையுங்க
ReplyDeleteசீக்கிரமே உடைச்சிரலாம் முரளி. ரசித்தப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteபடித்திருக்கிறேன் இந்த கதையை.. அருமையான முடிவு..ஆனா, உங்க சஸ்பென்சை உடைக்க போறதில்ல.. :-)
ReplyDeleteஉங்க முயற்சிக்கு பாராட்டுக்கள் சார்.
ஆமாங்க யமுனா. ஓஹென்றியின் இந்தக் கதையின் முடிவு மனசைத் தொடும் விதமா இருக்கும். நீங்க ரசிச்சதுல மகிழ்ச்சியும், இங்க முடிவைச் சொல்லாததுல சந்தோஷமும்! உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteசிறு வயதில் படித்த நினைவு வந்து விட்டது.அருமையான கதை, சோகமான முடிவு.அன்பின் ஆழம் அத்தகையது
ReplyDeleteமனசைத் தொடும் இந்தக் கதையும் இதன் உள்ளீடான அன்பும் மறக்க முடியாதவை நண்பரே. மிக்க நன்றி!
Deleteஆஹா அசத்தல் முயற்ச்சி அண்ணே வாழ்த்துக்கள்...!
ReplyDeleteபடித்து ரசித்து என்னை வாழ்த்திய நண்பன் மனோவுக்கு மனம் நிறைய நன்றி!
Deleteபடித்திருக்கிறேன் இந்த உருக்கக் கதையை....!
ReplyDeleteஇப்போது பார்த்தும் ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteஓ ஹென்றி கதைகளா... மிகவும் நன்றாக இருக்கும் அவர் கதைகள்.....
ReplyDeleteதொடரட்டும்....
ரொம்ப சந்தோசம் சார் ....இப்போவாச்சும் வந்தீங்களே!!
ReplyDeleteஇந்த கதை நான் படித்து இருக்கிறேன்... முடிவு தெரியுமே!!! ரொம்ப அழகான காதலை சொல்லும் கதை.. படங்களுடன் படிக்கும் பொது சுவாரஸ்யமாக உள்ளது!!
தொடர்ந்து எழுதுங்கள் சார்....