கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Monday, June 24, 2013

ஓ ஹென்றி எழுதிய இரண்டு சிறுகதைகளை படக் கதைகளாக முன்னர் கொடுத்த போது மிக ரசிக்கப்பட்டன. அதனால் இப்ப இன்னொரு மனம் நெகிழச் செய்யும் கதையைத் துவக்குகிறேன். இது நாலு பாகங்களாக வரும். சித்திர மேகலையும் இதுவும் இனி மாறி மாறித் தொடரும். ஆனா... அதிக இடைவெளியின்றி இரண்டு தினங்களுக்கொரு பதிவாக இனி தொடரும். தயாராக இருங்கள் நண்பர்களே...!
சூவினால் ஜான்ஸியின் மனதில் வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்த முடிந்ததா? இல்லையா என்பதனை அறிய... வெய்ட்டீஸ் ப்ளீஸ்!

12 comments:

 1. உங்களின் மின்னல்வரிகள் தளம்தான் எனது பேவரிட்தளம் ஆனால் இங்கு இன்று வந்த போது மிக ஆச்சிரியப்பட்டுப் போனேன்.படங்களுடன் பதிவு மிக அருமை.. வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. மின்னலின் ஒளியை ரசிப்பதுடன், இந்த மைதானத்திலும் மேய வந்திருக்கும் உங்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறேன். பழமையை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 2. புதிய கதைய நாங்களும் பாலோ பண்ணி வர்றோம்.. ( சில இடங்களில் தமிழ் மொழிபெயர்ப்பு பெயர்ந்து கிடக்கிறது.. மற்றபடி அருமையான துவக்கம்..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஆனந்து! ஆங்கிலத்துலருந்து தமிழில மொழிபெயர்க்கறப்ப இப்படி சின்னச் சின்ன நெருடல்கள் இடறத்தான் செய்யுது. கதையின் முடிவு வியப்பைத் தந்து மனதை உருக வைக்கும். தொடர்ந்து வாங்க. மிக்க நன்றி!

   Delete
 3. ஆரம்பமே அருமை. தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அருமை என்று சொல்லி ஊக்கம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 4. புதிய கதை அருமை...

  தொடர்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. மகிழ்வு தந்த கருத்துக்கு மனம் நிறைய நன்றி நண்பா!

   Delete
 5. கடைசி இலைக் கதையைக் கேள்விப்பட்டிருக்கிறேன். முழுவதும் படக்கதையாக இங்கே வாசிக்க ஆவலாக உள்ளேன். தொடரட்டும் இதுபோன்ற அற்புதமான படைப்புகளின் பகிர்வுகள். நன்றி கணேஷ்.

  ReplyDelete
  Replies
  1. இந்தக் கதையின் மனம் நெகிழ வைக்கும் முடிவை நீங்கள் அறிவீர்களா? எனினும் படங்களுடன் நான்கு பகுதிகளையும் படித்துக் கருத்திட்டு எனக்கு உற்சாகம் தாங்க கீதா! மிக்க நன்றி!

   Delete
 6. நல்ல பகிர்வு கணேஷ். தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தொடரும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete