கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Sunday, May 27, 2012

குமுதம் இதழில் நல்ல நகைச்‌சுவைத் துணுக்குகள் வருவதுண்டு. பழைய குமுதம் இதழில் வெளியான இந்த ஒரு பக்க நகைச்சுவைகள் இப்போது படித்தாலும் புன்னகைக்க வைத்தன என்னை. உங்களுக்கும் சிரிப்பு வருகிறதா என்பதைத் தெரிவிக்கவும். எந்த ஆண்டு வெளியான ஜோக்குகள் இவை என்ற தகவல் ஜோக் பக்கத்திலேயே இருப்பது சிறப்பு.

Wednesday, May 23, 2012

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

குதிரை, வாகனங்களில் சக்தி மிக்கது. சக்தியின் அளவைக் குறிக்க குதிரைத்தான் குறியீடாகச் சொல்வார்கள். அதன் போக்கில் சுதந்திரமாகத் திரிவதை நாம் வளர்ப்புப் பிராணியாக்கி விட்டோம். என் மனக்குதிரை பல சமயங்களில் இப்படித்தான்... குதிரை போலக் கண்டபடி அலையும். ஒரு இலக்கில்லாமல் பல திசைகளிலும் சுற்றித் திரியும். 

இந்தக் குதிரை மேய்ந்த மைதானங்களிலிருந்து கிடைத்த புற்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறது. நான் படித்த புத்தகங்களில் எனக்குப் பிடித்த புத்தகங்களை உங்களுக்குச் சிபாரிசு செய்வது, தமிழின் நல்ல படைப்புகளின் கதைச் சுருக்கங்களைத் தருவது இவையெல்லாம் இந்தத் தளத்தி்ல் செய்யப் போகிறேன்.

வாழ்க்கைக்கான தேடலில் அனைவரும் ஓடிக் கொண்டு இருக்கிறோம். எல்லாருக்கும் எல்லாப் பத்திரிகையையும் படிக்க நேரம் இருப்பதில்லை. குறிப்பாக, நாம் பிறப்பதற்கு முன்பும், சிறு வயதிலும் வெளிவந்திருக்கும் பழைய பத்திரிகைகள். அப்படி அரிய புத்தகங்களிலிருந்து ரசனைக்குரியவை என்று நான் கருதும் விஷயங்களை ‘கத்தரித்தவை’ என்ற தலைப்பில் தொடர்ந்து பகிர விருப்பம்.

இந்த இரண்டு விஷயங்களுக்காகத்தான் இந்த வலை. இவை மட்டுமே இங்கு இடம்பெறும். விருப்பமுள்ள நண்பர்கள் என்னோடு கை கோர்த்து வாருங்கள். உங்களின் கருத்துக்கள் தானே எனக்கு என்றும் உரைகல்! அதைத் தவறாது வழங்கிடுங்கள். நன்றி!