கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Friday, July 17, 2015

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த (எதிர்பார்த்தீர்கள்தானே..) சித்திரக் கதையின் இரண்டாவது மற்றும் முடிவுப் பகுதி இதோ...

ஹவ் இஸ் திஸ்...?

Saturday, July 4, 2015

னதை நெகிழச் செய்யும் தன் சிறுகதைகள் பலவற்றால் என்னைக் கட்டிப் போட்ட நண்பர்கள் சுபா, பின்னாட்களில் பரபர விறுவிறு துப்பறியும் நாவல்கள் நிறையப் படித்து அவற்றையும் ரசிக்க வைத்தார்கள். துப்பறியும் ஜோடிகளில் இவர்களின் நரேந்திரன் -வைஜயந்திக்குத் தனியிடம் உண்டு. இந்த சித்திரக் கதையிலும் அவர்களின் அமர்க்களத்திற்குக் குறைவில்லை... பாருங்களேன்..!

தேடி வந்த ஸ்டெல்லாவை நரேந்திரன் கண்டுபிடித்தானா..? கண்டுபிடித்ததும் நிகழ்ந்தது என்ன..? கற்பனையைச் சற்று ஓடவிட்டு யூகியுங்கள்.. சுபா தந்திருக்கும் எதிர்பாராத அந்த முடிவை நான் தரும் அடுத்த பதிவில் கண்டு ரசியுங்கள்.

Saturday, June 27, 2015

சாவியை மாத்திட்டதால அவகிட்டருந்து தப்பிச்சுட்டம்னு நெனச்சான் அவன். ஆனா... (இப்பதான் இந்தப் பகிர்வைப் பாக்கறவங்க வேகமாப் போய் முதல் பாதியைப் பாத்துட்டு வந்துருங்க, க்விக்...)

புடிச்சிருக்கா இது...? இன்னொரு சுவாரஸ்யத்தோட திரும்ப வர்றேன்.

Monday, June 22, 2015

ஆனந்த விகடன் தீபாவளி மலரில் முன்பு வெளியான சித்திரக் கதை இங்கே உங்களுக்காக... நன்றி ஆ.வி.!

சாவியை மாற்றிய அவன், அவளிடமிருந்து தப்பினானா... இல்லை, அவள் அதையும் சமாளித்தாளா... என்பதை அறிய அடுத்த பகிர்வு வரை.. வெய்ட்டீஸ் ப்ளீஸ்...!!

Monday, March 2, 2015

ழைய புத்தகங்களிலருந்து கத்தரிச்சு எடுத்து உங்களுக்கு வழங்கி நாளாச்சில்ல...? கொஞ்சம் பழைய சினிமா உலகத்துப் பக்கம் ஒதுங்கிட்டு வரலாம் இன்னிக்கு.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆரம்பிச்சு வெச்ச பல பெரிய, நல்ல ப்ராஜக்ட்டுகள் ஆரம்ப நிலையிலேயே நின்னு போகும்படி ஆனது தமிழ் சினிமாவோட துரதிர்ஷ்டங்கள்ல ஒண்ணு. கல்கியின் பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் ஆகிய சிறந்த நாவல்களை அவர் படமாக்கி நடிக்க விரும்பியிருக்கார். ஒருகோடி ரூபாய் பட்ஜெட்ல (அன்றைய மதிப்பில் யாரும் நினைச்சே பார்க்க முடியாத தொகை) அகன்ற திரையில் ‘சிவகாமியின் சபதம்’ எடுக்க திட்டமிட்டு பேப்பர்கள்ல செய்தியும் வெளியாகியிருக்குது. அந்த கட்டிங் இங்க...

இந்த ப்ராஜக்ட் வந்திருந்தா வாத்யாரோட முதல் அகன்ற திரை திரைப்படம் இதுவாத்தான் இருந்திருக்கும். ஹும்...! மகேந்திர பல்லவனாகவும், நரசிம்ம பல்லவனாகவும் வாத்யாரே நடித்து, அவரே இயக்கறதா திட்டம். (கதையில நரசிம்ம பல்லவனுக்கு இணையா அப்பா மகேந்திரவர்மர் இருக்கறப்ப, வேற ஒருத்தரை பண்ண விட்ருவாரா என்ன வாத்யாரு?) புலிகேசியாவும், நாகநந்தியாவும் இரட்டை வேஷத்துல வில்லனும்... ஆஸ்தான வில்லன் நம்பியார விட்டா வேற யாரு? நரசிம்மவர்மரோட உயிர்த்தோழன் பரஞ்சோதியா முத்துராமனும், சிவகாமியா சரோஜாதேவியும் வெச்சு பண்ணலாம்னு திட்டம் போட்ருக்காரு வாத்யாரு. (சிவகாமியின் நடனத்த கல்கி கதைல சொல்றதுக்கும், அந்தம்மா அரசகட்டளைல ஆடுற பரதத்தையும்(?) பாத்தா சிப்பு சிப்பா வரும்.)

சங்கர் லீங்கற ஓவியரை வெச்சு அந்த கேரக்டர்கள்ல தங்களை வரைஞ்சு நல்லா இருக்கான்னு டெஸ்ட்லாம் பண்ணிப் பாத்திருக்காரு வாத்யாரு. அந்த ஓவியங்களை ஆனந்தவிகடன் தீபாவளி மலர் வெளியிட்டிருந்துச்சு. அந்தப் படங்கள் இங்க...

எப்பூடி...? நரசிம்ம வர்மரா வாத்யாரப் பாக்க ஷோக்காத்தான் கீறாரு இல்ல...? ரைட்டு வாத்யாருக்கு கொஞ்சம் பின்னோக்கிப் போய்ப் பாத்தா... தமிழ்ல வந்த முதல் சினிமாவான காளிதாஸ்தான் கண்ணுக்குத் தெரியுது. அதயும் பாருங்களேன்...

காளிதாஸ்லருந்து கொஞ்சம் தள்ளி இங்கிட்டு வந்து பாத்தா... எம்.எஸ். அம்மா நடிச்சுப் பாடி அசத்தின சகுந்தலை படத்தோட பாட்டுக்களும் கதைச்சுருக்கமும் அடங்கின ரெக்கார்டோட கவரு கண்ல படுது. அதையும் பாத்து ரசியுங்களேன் கொஞ்சம்...

அதையும் தாண்டி இன்னும் கொஞ்சம் பாக்கலாம்னா... அஸ்கு புஸ்கு... எல்லாத்தையும் இப்பமே காட்டிட்டன்னா அடுத்த பதிவுக்கு என்ன பண்றதாம்? அதனால பொறவு பாக்கலாம். இப்போ விடு ஜுட்...!

Monday, February 23, 2015

மிக நீண்ட இடைவெளி ஆகி விட்டதால் இந்த சித்திரக் கதையின் எஞ்சியுள்ள பகுதிகளையும் சேர்த்தே வலையேற்றி இருக்கிறேன். இவற்றையும் இனி வரவிருக்கும் பொக்கிஷப் பகிர்வுகளையும் ரசித்து கருத்துக்கூற தங்களை அன்புடன் வேண்டுகிறேன். நன்றி.