கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Saturday, November 10, 2012

நான் ரசித்த சில ஓவியர்களின் ஓவியங்களைத் தொகுத்து ‘பேசும் ஓவியங்கள்’ என்ற தலைப்பில் முன்னர் வெளியிட்டிருந்தேன். நிறையப் பேர் ரசித்துப் பார்வையிட்டுப் பாராட்டினீர்கள். அந்த உற்சாகத்துடன் மேலும் சில ஓவியர்களின் ஓவியங்கள் இங்கு உங்கள் பார்வைக்கு பவனி வந்துள்ளன. பார்த்து விட்டு ரசித்ததை பகிருங்கள் நண்பர்களே...

வியக்க வைக்கும் ‘வினு’வின் தூரிகை விளையாடல்.

ரசிக்க வைக்கும் ‘ராமு’வின் கை வண்ணம்!

கண்களை சுண்டி இழுக்கும் ‘கல்பனா’வின் ஓவியம்,

‘எஸ்.பாலு’ வரைந்த எழிலார்ந்த ஓவியம்.

மனதை மயக்கும் ‘மாருதி’யின் ஓவிய மங்கை.

மதியை விட்டகலாதவை ‘ம.செ’ வரையும் ஓவியங்கள்.

அசத்தலாய் ஓவியங்கள் வரையும் ‘அரஸ்’ கைவண்ணம் இது,

Tuesday, November 6, 2012

                                        3. தமயந்தியின் அழைப்பு

"என் பெயர் சங்கர், நான் எதிர் அறையில்தான் தங்கியிருக்கிறேன்" என்றான் அந்த மனிதன்.

"நீ எப்பொழுதுமே மணல் மூட்டையுடன் தான் உலாவுவாய் போலிருக்கிறது" என்று இடக்காகக் கேட்டார் பரஞ்சோதி.

"இல்லை. நான் குத்துச் சண்டை பழகுவதால் இம்மாதிரி மணல் மூட்டையையும், தோல் உறையிட்ட மூட்டைகளிலும் குத்திப் பழகுகிறேன்" என்று கூறிய சங்கர்," நான் வெளியே புறப்படும்பொழுது, இங்கு ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்து, எட்டிப் பார்த்தேன். நீங்கள் இருவரும் பயங்கரமாகச் சண்டை போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, என் அறைக்குச் சென்று இதை எடுத்து வந்தேன்" என்றான்.

"இந்தப் பெண்ணை இங்கிருந்து நான் அழைத்துச் செல்வதற்காக வந்தேன். என் பெயர் துப்பறியும் பரஞ்சோதி" என்று கூறியவர், "நீ என் உயிரைக் காப்பாற்றி இருக்கிறாய். உனக்கு எப்பொழுதாவது தேவைப்பட்டால், நீ அவசியம் என்னிடம் வந்தால், என்னால் முடிந்த அளவு நான் உனக்கு உதவி செய்வேன்" என்று கூறிவிட்டு தன் விலாசம் அடங்கிய ஒரு சீட்டை சங்கரிடம் கொடுத்தார்.

இருவரும் சேர்ந்து லலிதாவைக் கீழ்த் தளத்திற்குத் தூக்கிச் சென்றனர். பிறகு ஒரு வாடகைக் காரை நிறுத்தி ஏறிக்கொண்டார் பரஞ்சோதி.. அவர் அருகே லலிதாவை அமர வைத்துவிட்டு வாடகைக் காரின் கதவைச் சாத்தினான் சங்கர். அவனிடம் விடை பெற்றுக் கொண்ட பரஞ்சோதி, பிரகாஷ்ராவ் வீட்டிற்குப் போகும்படிக் கூறினார் டிரைவரிடம். அவர் அருகே இன்னும் மயக்க நிலையிலேயே அமர்ந்திருந்தாள் லலிதா.

பிற்பகல் மூன்று மணிக்கு, தன் ஜாகைக்கு வருமாறு டெலிபோன் செய்தாள் ஸ்ரீமதி தமயந்தி சுந்தர். "நான் உங்களிடம் சில விஷயங்களைக் கலந்தாலோசிக்க வேண்டி இருக்கிறது. பரஞ்சோதி, நான்கு மணிக்கெல்லாம் வந்து விடுகிறீர்களா?" என்று கேட்டாள் தமயந்தி.

"அவசியம் வருகிறேன்" என்று பரஞ்சோதி கூறியதும், வேறு ஒன்றும் பேசாமல் டெலிபோனை வைத்து விட்டாள் தமயந்தி.

ரியாக நான்கு மணிக்கெல்லாம் தமயந்தியின் ஜாகையை அடைந்தார் துப்பறியும் பரஞ்சோதி. அவரை, தமயந்தியின் தந்தையான மாணிக்கம்தான் வரவேற்றார். "உட்காருங்கள், பரஞ்சோதி, நான் தமயந்தியின் தந்தை. தமயந்தி சில வினாடிகளில் வந்து விடுவாள்" என்று சொன்னார் மாணிக்கம். அங்கு கிடந்த சோபா ஒன்றில் அமர்ந்து கொண்டார் பரஞ்சோதி. தன்னை எதற்காக தமயந்தி கூப்பிட்டாள் என்று அவருக்குத் தெரியவில்லை.

"வாருங்கள்...." என்று கூறியபடி உள்ளே வந்தாள் தமயந்தி அவளது உடலெங்கும் வைரங்கள் மின்னின. தன் கணவனைக் காணோம் என்ற கலக்கம் அவளிடம் சிறிதுகூடக் காணவில்லை ஓயிலாக நடந்து வந்து ஒரு சோபாவில் அமர்ந்தாள். "உங்கள் திறமையைப் பற்றி நான் ரொம்பக் கேள்விப்பட்டு இருக்கிறேன்" என்று ஆரம்பித்த தமயந்தி, "எனக்காக நீங்க ஒரு வேலையைச் செய்ய வேண்டும்" என்று அர்த்த புஷ்டியோடு நிறுத்தினாள்.

"நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார் பரஞ்சோதி.

சில வினாடிகள் மௌனமாக அமர்ந்திருந்த தமயந்தி, "எனது கணவரைக் கடத்திப் போனவர்களிடமிருந்து எனக்குத் தகவல் வந்திருக்கிறது. நான் மூன்று லட்ச ரூபாய் கொடுத்தால் என் கணவரை என்னிடம் திருப்பி அனுப்பி வைப்பதாக அவர்கள் டெலிபோன் செய்தார்கள்" என்றாள்.

மாணிக்கம் குறுக்கிட்டு, "இந்த விஷயத்தைப் போலீசாரிடம் விட்டு விடுவது நல்லது" என்றார்.

"இல்லை, அப்பா,நான் அப்படிச் செய்தால் என் கணவரை ஈவு இரக்கமில்லாமல் கொன்றுவிடப் போவதாகக் கூறுகிறார்கள். எனவே, மூன்று லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு சுந்தரைத் திரும்பப் பெறுவதென்று நான் தீர்மானித்து விட்டேன்," என்றாள் தீர்க்கமான குரலில் தமயந்தி.

"பணத்தை எங்கே கொண்டு போய்க் கொடுக்க வேண்டுமென்று கூறினார்களா?" என்று கேட்டார் பரஞ்சோதி.

"மூன்று பாலிதீன் பைகளில், ஒவ்வொன்றிலும் ஒரு லட்சம் வீதம் பணத்தைப் போட்டுக் கட்டி, வைத்துக் கொள்ளவேண்டுமென்றும், காரில் வந்து அவர்கள் குறிப்பிடும் இடத்தில் அந்தப் பணக்கட்டுகளை வைத்துவிட்டு நாம் உடனே திரும்பி்ப் பாராமல் கிளம்பி வந்துவிட வேண்டுமென்றும் டெலிபோனில் செய்தி வந்தது. இன்றிரவு சுமார் எட்டு மணிக்கு டெலிபோன் செய்து இடத்தைக் குறிப்பிடுவதாகக் கூறினார்கள். அந்தப் பணத்தை அந்த இடத்தில் வைப்பதற்கு உங்களைத் தவிர வேறு தகுந்த ஆள் இல்லை. எனவே, நீங்கள் எனக்காக இந்தவேலையைச் செய்ய வேண்டும்" என்று நிறுத்தினாள் தமயந்தி.

"சரி, நான் அப்படியே செய்து விடுகிறேன்" என்றார் பரஞ்சோதி.

"நானும் உங்களோடு வரப்போகிறேன்" என்றாள் தமயந்தி.

"நீ போக வேண்டாம், தமயந்தி, அவரே அந்தப் பணத்தை வைத்துவிட்டு வந்து விடுவார்" என்றார் மாணிக்கம்.

"நானே அந்தப் பணம் அங்கு வைக்கப்படுவதைப் பார்க்க வேண்டும். என்முடிவை யாரும் மாற்ற முடியாது. நான் அங்கு போகத்தான் போகிறேன்" என்று பிடிவாதமாகக் கூறினாள் தமயந்தி.

"அப்படியானால் நான் இன்றிரவு எட்டு மணிக்கு இங்கு வந்து சேர்ந்து விடுகிறேன்" என்று கூறியபடி எழுந்தார் பரஞ்சோதி. அவரை வாசல்வரை வழி அனுப்ப வந்தார் மாணிக்கம். "சுந்தரை மீண்டும் நான் பார்ப்பேன் என்று எனக்குத் தோன்றவில்லை. பணத்தை இப்படி வீணாக்குவதற்குப் பதிலாக போலீசாரின் உதவியோடு அந்தக் கும்பலை வளைக்க ஏற்பாடு செய்வதுதான் புத்திசாலித்தனமானது" என்றார்.

"ஒருக்கால் தன் கணவன் மீது அவள் உயிரையே வைத்திருக்ககூடும். அதனால்தான் இப்படிப் பிடிவாதாமாக இருக்கிறாள் போலிருக்கிறது" என்று கூறிய பரஞ்சோதி, அவரிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினார்.

னது ஜாகையை அடைந்ததும், தனக்காத் தன் பெண் காரியதரிசியான சுசீலா காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். ராஜூவும் அங்கே இருந்தான். "ராஜூ, இன்றிரவு சுமார் எட்டு மணிக்கெல்லாம் நீ நமது சிறிய காரை எடுத்துக்கொண்டு, தமயந்தியின் வீட்டினருகே காத்துக் கொண்டிரு, நானும் தமயந்தியும் காரில் கிளம்புவதைப் பார்த்ததும், எங்களைத் தொடர்ந்து வா. ஆனால் நீ தொடர்ந்து வருவது தமயந்திக்குத் தெரியாமல் நீ வரவேண்டும். நாங்கள் பணத்தைக் குறிப்பிட்ட இடத்தில் வைத்ததும், திரும்பி விடுவோம். நீ, யார் வந்து பணத்தை எடுக்கிறார்களெனன்று பார்த்துத் தெரிந்து கொண்டு வா" என்றார் பரஞ்சோதி.

சுமார் எட்டு மணிக்கெல்லாம் தமயந்தியின் ஜாகையை அடைந்தார் பரஞ்சோதி. தமயந்தி அவருக்காதத் தயாராகக் காத்துக் கொண்டிருந்தாள். "செய்தி வந்ததா?" என்று கேட்டார் பரஞ்சோதி.

"வந்து விட்டது, எல்லைப் பக்கம் இருக்கும் ஒரு பாழடைந்த கட்டடத்தின் கூரையில் நாம் அந்தப் பணத்தை வைக்க வேண்டும்" என்று கூறியபடி, மேஜை டிராயரிலிருந்து பாலிதீன் பேப்பர்ளால் சுற்றப்பட்ட மூன்று கட்டுகளை எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டு அவருடன் கிளம்பினாள்.

அவர்கள் கார் கேட்டைத் தாண்டும் பொழுதே, வேறு ஒரு கார் ஸ்டார்ட் ஆகும் சத்தம் கேட்டது. ராஜூதான் தன் காரை கிளப்பிகிறானென்று புரிந்து கொண்டார் பரஞ்சோதி. தமயந்தியின் ஜாகையிலிருந்து சுமார் மூன்று மைல் துாரத்தில இருந்தது அந்தக் கட்டிடம். வழியில் இருவரும் ஒன்றுமே பேசவில்லை. அந்தப பாழடைந்த கட்டிடத்தை அடைந்ததும், அதன் மேல் கூரையின் மீது மூன்று கட்டுகள் பணத்தையும் வைத்து விட்டு காருக்குத் திரும்பினார் பரஞ்சோதி.

அவர் காரில் ஏறி அமர்ந்து கதவைச் சாத்தியபொழுது கூரைமேல் அவர் வைத்த பணக்கட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக ஒரு தூண்டில் கொண்டு எடுக்கப்படுவதைப் பார்த்தார். பிறகு அவர் காரைக் கிளப்பிக் கொண்டு சென்றபோது, அங்கு கிடந்த ஒரு பெரிய பாறையின் மறைவிலிருநத ஒரு மனிதன் மெதுவாகக் கட்டடத்தை நோக்கி நகர்வதைப் பார்த்து ராஜூதான் அது என்று திருப்திப்பட்டுக் கொண்டார்.

ஆனால் ஒரு மணி நேரம் கழித்து ராஜூ கொண்டு வந்தத் தகவல் அவரை ஏமாற்றமடையச் செய்தது.

-தொடரும்...

Friday, October 26, 2012

வள் குரலிலிருந்த ஏதோ ஒன்று, அவள் எதற்கும் தயாரான அபாயகரமானப் பெண்மணி என்று பரஞ்சோதிக்கு உணர்த்தியது. எனவே மறுபேச்சுப் பேசாமல் அறைக்குள் நுழைந்தார்.

அடுத்த வினாடியே கதவை வெளிப்பக்கமாக சாத்தித் தாளிட்ட அகல்யா, மாடிப் படிக்கட்டில் தடதடவேன இறங்கித் தன் கார் இருக்கும் இடத்தை அடைந்து அதை வெகு வேகமாகக் கிளப்பிக் கொண்டு கேட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்த ராஜூ மீது இடித்து விடுவதைப் போல் சென்றாள.

அவசரமாக மாளிகைக்குள் நுழைந்த ராஜூ, பரஞ்சோதியின் அறையைத் திறந்தான். ராஜூவிடம் நடந்தவைகளைக் கூறினார் பரஞ்சோதி.
"அவள் உண்மையிலேயே தமயந்தியின் காரியதரிசியாக இருக்க மாட்டாள் என்று எனக்குத் தோன்றுகிறது." என்று கூறிய பரஞ்சோதி, "அதனால்தான் அவள் போலீசார் வருவதற்குள் சென்று விட்டாள்" என்றார்.

"அப்படியானால் அவள் கொடுத்த விலாசமும் பொய்யாகத் தான் இருக்கும்" என்றான் ராஜூ.

"ஆமாம்" என்று பரஞ்சோதி கூறும் பொழுதே போலீசார் வரும் சத்தம் கேட்டது. சில வினாடிகளில் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், நான்கு கான்ஸ்டபிள்களுடன் அங்கு வந்து சேர்ந்தார்.

"பிணம் அடுத்த அறையில் இருக்கிறது, இன்ஸ்பெக்டர்" என்று கூறியபடி தனது ஆசனத்தை விட்டு எழுந்த பரஞ்சோதி, இன்ஸ்பெக்டருக்கு அந்த அறையைக் காண்பித்தார். வழக்கமான சோதனைகளுக்குப் பிறகு பிணத்தை ஆம்புலன்ஸ் காரில் ஏற்றி அனுப்பிவிட்டு பரஞ்சோதியிடம் வந்தார் இன்ஸ்பெக்டர் கதிர்வேல்.

"நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள், பரஞ்சோதி?" என்று கேட்டார்.

"சுந்தர்தான் எனக்கு டெலிபோன் செய்து தன்னைக் கடத்துவதற்காக முயற்சிகள் நடப்பதாகவும், நான் உடனே புறப்பட்டு வந்தால் அதைப் பற்றிப் பேசி, என்ன செய்வதென்ற முடிவுக்கு வரலாமென்றும் கூறியதனால்தான் நான் இங்கு புறப்பட்டு வந்தேன். ஆனால் நான் வருவதற்குள் காலங் கடந்து விட்டது" என்றார் பரஞ்சோதி. பிறகு அகல்யாவைப் பற்றியும் இன்ஸ்பெக்டரிடம் கூறினார்.

"விசித்திரமாக அல்லவா இருக்கிறது" என்று கூறிய கதிர்வேல், "ஸ்ரீமதி சுந்தர், இந்தப் பெண்ணைப் பற்றி அறிய நேர்ந்தால் அதனால் பல சங்கடங்கள் எழக்கூடும். நாம் முடிந்தவரை இந்தப் பெண்ணைப் பற்றிய தகவல்களை ரகசியமாகத்தான் விசாரிக்க வேண்டும்" என்றார்.
பிறகு ராம் விலாஸீக்கு டெலிபோன் செய்து அகல்யாவைப் பற்றி விசாரித்தார். அங்கு அகல்யா என்ற பெயரில் யாரும் தங்கி இருக்கவில்லை என்று அவருக்குத் தகவல் கிடைத்தது. அவள் இந்த நேரம் மாயமாய் மறைந்திருப்பாள் என்று இன்ஸ்பெக்டர் கதிர்வேலுக்குத் தோன்றியது.

                                    2. பிச்சுவா பாஸ்கர்

றுநாள் காலை பத்து மணிக்கு பரஞ்சோதிக்கு ஒரு டெலிபோன் அழைப்பு வந்தது. அவரது நண்பர் பிரகாஷ்ராவ்தான் பேசினார்.
"என் மகள் லலிதாவைக் காணவில்லை, பரஞ்சோதி, அவள் அந்தப் பரதேசிப் பயலைத் தேடிப் போய் இருப்பாள் என்று எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் எனக்காக் கொஞ்சம் அவளைத் தேடிக் கொடுக்க முடியுமா?"

"நிச்சயமாக நான் உங்களுக்கு லலிதாவைத் தேடிக்கொண்டு வந்து சேர்க்கிறேன்" என்று உறுதி கூறினார் பரஞ்சோதி. சில நிமிடங்களில் மாற்றுடை அணிந்துகொண்டு கிளம்பினார். வெளியே சென்று கொண்டிருந்த ஒரு வாடகைக் காரை நிறுத்தி ஏறிக்கொண்டு பாசுதேவ் வீதிக்கு ஓட்டும்படிக் கூறினார்.

பத்து நிமிஷங்களுக்கெல்லாம் அவர் பாசுதேவ் வீதியை அடைந்து விட்டார். பிரகாஷ்ராவ் கூறிய பரதேசிப் பயல் அங்கு தான் ஜாகை வைத்துக் கொண்டு வசித்து வந்தான். ஒரு பழங்காலக் கட்டிடத்தின் மாடியில் இருந்தது அவனது ஜாகை. கட்டிட வாசலில் நின்று கொண்டிருந்த காவல்காரனான வேணு அவரை சந்தேகத்தோடு பார்த்தான். ஏனென்றால் பலவிதமான மோசடிகளிலும் குற்றங்களிலும் பங்கு பெற்ற பலர்தான் அந்தக் கட்டடித்தில் குடி இருந்தனர். எனவே பரஞ்சோதியைக் கண்டது, யாரோ போலீஸ் அதிகாரியாக இருக்குமென்று அவனுக்குத் தோன்றியது.

"பாஸ்கர் மேலே இருக்கிறானா?" என்று கேட்டாா பரஞ்சோதி.

"இருக்கிறார்" என்றான் வேணு.

"அவனோடு ஒரு பெண் இருக்கிறாள், அல்லவா?" என்று கேட்டார் பரஞ்சோதி.

"எனக்குத் தெரியாது" என்று கூறிய பொழுது அவன் முகம் கல்லைப்போல் இறுகியது. ஏனென்றால் அங்குள்ளவர்களைப் பற்றி எந்தவிதத் தகவலும் அவன் வெளியிலிருந்து வருபவர்களுக்குக் கூறக் கூடாதென்று கடுமையான கட்டளை இட்டிருந்தான் பாஸ்கர். தான் பாஸ்கரைப் பற்றி எந்தத் தகவலையாவது இந்த மனிதரிடம் கூறினால் அவன் தன்னைக் கொலை செய்யவும் தயங்க மாட்டான் என்று வேணுவுக்குத் தெரியும்.

வேணுவிடம் வேறொன்றும் கேட்காமல் மாடிக்குச் சென்றார் பரஞ்சோதி, பாஸ்கரின் ஜாகைக் கதவு தாளிடப்பட்டிருந்தது. சிறிது நேரம் அதன் முன் தயங்கி நின்ற பரஞ்சோதி, பிறகு மெதுவாகத் கதவைத் தட்டினார். சில வினாடிகளில் கதவு திறக்கப்பட்டது. பாஸ்கர் சிறிதும் எதிர்பாராதபொழுது அவனைத் தள்ளியபடி உள்ளே நுழைந்து விட்டார் பரஞ்சோதி.

ஒரே ஒரு அறையைக் கொண்ட அந்த ஜாகையில், அறையின் நடுவே கிடந்த கட்டிலின் விளிம்பில் அரை மயக்க நிலையில் அமர்ந்திருந்தாள் லலிதா. பரஞ்சோதியை அவள் கவனித்ததாகவே தெரியவில்லை. தனக்குதானே ஏதோ பிதற்றியபடி படுக்கையில் சாய்ந்தாள்.

"நீ யார்? எதற்காக இங்கே வந்திருக்கிறாய்?" என்று சீறினான் பாஸ்கர்.

சில வினாடிகள் அவனையே அமைதியோடு பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, "நான் தான் துப்பறியும் பரஞ்சோதி, லலிதாவை அழைத்துச் செல்ல வந்தேன். என்றார்.

"என் விருந்தாளியாக வந்திருக்கும் அவளை நான் அனுப்ப முடியாது. நீ மரியாதையோடு இங்கிருந்து போய் விடு" என்று ஆத்திரத்தோடு கூறினான் பாஸ்கர்.

பரஞ்சோதி அதை கவனிக்காதவர்போல் கட்டிலருகே சென்று லலிதாவைக் குனிந்து பார்த்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கர் வேகமாக பரஞ்சோதியினருகே வந்து அவர் சட்டையைப் பிடித்து இழுத்தான். பரஞ்சோதி நிதானமாகத் திரும்பி அவனைப் பார்த்தார். அதே சமயம், அவன் அவர் முகத்தில் பலங்கொண்ட மட்டும் குத்தினான். சில வினாடிகள் தடுமாறிய பரஞ்சோதி, அடுத்த கணமே பாஸ்கரின் வயிற்றில் ஓங்கிக் குத்தினார். நிலை தடுமாறிக் கீழே விழுந்தான் பாஸ்கர். இருவரும் சிறிது நேரம் கட்டிப் புரண்டார்கள். பிறகு திடீர் என பரஞ்சோதியின் விலாவில் தன் பலங்கொண்ட மட்டும் தாக்கிய பாஸ்கர், சட்டென்று எழுந்து அலமாரியிலிருந்த ஒரு பிச்சுவாவை எடுத்துக் கொண்டு பரஞ்சோதியை நெருங்கினான். அவன் கண்களில் கொலைவேறி தாண்டவமாடியது.

பிச்சுவாவினால் தனக்குக் காயம் வராதபடி எப்படியே சமாளித்துப் பார்த்தார் பரஞ்சோதி. எப்பொழுதும் தன்னுடனேயே அவர் எடுத்துச்செல்லும் கைத் துப்பாக்கியைக்கூட மறந்துவிட்டு வந்திருந்தார். பரஞ்சோதியைக கீழே தள்ளி அவர் நேஞ்சின் மீது முழங்காலை ஊன்றியபடி பிச்சுவாவை ஓங்கினான் பாஸ்கர். பரஞ்சோதியால் திமிற முடியவில்லை. அன்றோடு தன் கதை முடிந்ததென்று நினைத்துக் கொண்டவராய் தன் கண்களை மூடிக் கொண்டார்.

அதே சமயம், "ஆ..." என்ற அலறலுடன் தரையில் விழுந்தான் பாஸ்கர், சட்டென்று தன்னைச் சமாளித்துக் கொண்டு எழுந்த பரஞ்சோதி, கையில் மணல் மூட்டையுடன் ஒரு மனிதன் நிற்பதை பார்த்தார்.

Wednesday, October 17, 2012

ழைய குமுதம் இதழ்களிலிருந்து திரட்டிய சினிமா சம்பந்தப்பட்ட சிரிப்புத் தோரணங்களை இங்கே தந்திருக்கிறேன். அந்நாளைய நகைச்சுவை என்றாலும் இந்நாளிலும் புன்னகை வரவழைக்கத் தவறவில்லை இவை என்னிடம். நீங்களும் படித்து. பார்த்து புன்னகையுங்கள்.
ழைய குமுதம் இதழ்களிலிருந்து திரட்டிய சினிமா சம்பந்தப்பட்ட சிரிப்புத் தோரணங்களை இங்கே தந்திருக்கிறேன். அந்நாளைய நகைச்சுவை என்றாலும் இந்நாளிலும் புன்னகை வரவழைக்கத் தவறவில்லை இவை என்னிடம். நீங்களும் படித்து. பார்த்து புன்னகையுங்கள்.Saturday, October 6, 2012

                                  1. மாயமாய் மறைந்த மர்ம மங் கை

பயங்கரமான இருள் சூழ்ந்திருந்த அந்த நேரத்தில், நள்ளிரவு சுமார் பனிரெண்டு மணிக்கு துப்பறியும் பரஞ்சோதியின் ஜாகை டெலிபோன் அலறியது.

''பரஞ்சோதி பேசுகிறேன்'' என்றார் துப்பறியும் பரஞ்சோதி.

 ''நான் சுந்தர் பேசுகிறேன்'' என்று மூச்சு வாங்கக் கூறிய அந்த மனிதன், ''நீங்கள் துப்பறியும் பரஞ்சோதி தானே?'' என்று கேட்டான்.
 
''ஆமாம். என்ன விஷயம்?''
 
''என்னைக் கடத்துவதற்காக முயற்சி நடைபெறுகிறது. நீங்கள் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்'' என்று தவித்தான் சுந்தர்.
 
''உன்னை எதற்காக ஒருவன் கடத்த வேண்டும்?'' என்று கேட்டார் பரஞ்சோதி.
 
''ஏனென்றால் நான் தான் பெரும்பணக்காரியும், சமூக சேவகியுமான தமயந்தியின் கணவன்'' என்று ஒரே மூச்சில் கூறினான் சுந்தர். அவனுக்கு பயத்தால் மூச்சு வாங்குவது துப்பறியும் பரஞ்சோதிக்குத் தெளிவாகக் கேட்டது.

''உன்னைக் கடத்துவதால் யாருக்கு என்ன லாபம்?'' என்று கேட்டார் பரஞ்சோதி.
 
''என் மனைவியை மிரட்டிப் பணம் பறிப்பதற்காக!'' என்று கூறிய சுந்தர், ''டெலிபோனில் பேசி நேரத்தைக் கழிக்காதீர்கள். நீங்கள் வீணாக்கும் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறதென்பதை மறந்து விடாதீர்கள்'' என்று தவித்தான். பிறகு விலாசத்தைக் கூறினான்.
 
''உன்னைக் கடத்திக் கொண்டு போகப் போகிறார்கள் என்பது உனக்கு எப்படித் தெரியும்?''
 
''எனக்கு டெலிபோன் வந்தது...''என்று கூறிக் கொண்டே வந்த சுந்தர் சட்டென்று நிறுத்தினான். ஏதோ நாற்காலி கீழே விழும் சத்தமும், யாரோ தடதடவென்று ஓடும் சத்தமும் பரஞ்சோதிக்குக் கேட்டன.
 
''சுந்தர்... சுந்தர்...'' என்று பரஞ்சோதி பலமுறை அழைத்தும் பதிலில்லை. டெலிபோனை வைத்து விட்டு அவசர அவசரமாகத் தனது காரியதரிசியான ராஜுவை எழுப்பி அழைத்துக் கொண்டு தனது காரில், சுந்தர் கொடுத்திருந்த விலாசத்திற்கு விரைந்தார். வழியில் ராஜுவிற்கு நடந்தவைகளை விளக்கிக் கூறிக் கொண்டே சென்றார்.

சுந்தரின் ஜாகையை அடைந்த போது ராஜு அந்த மாளிகையைக் கண்டு பிரமித்துப் போய் விட்டான். அது மிகப் பிரம்மாண்டமாகக் காட்சியளித்தது. மாளிகை முழுவதும் இருளில் மூழ்கிக் கிடந்தது. தெரு வாயிற்கதவு விரியத் திறந்து கிடந்தது.

இருவரும் முன்னெச்சரிக்கையோடு மாளிகையில், நுழைந்து ஒவ்வொரு அறையாகச் சென்று விளக்கைப் பொருத்திப் பார்த்தார்கள்.
 
ஒவ்வொரு அறையிலும் பல விலையுயர்ந்த பொருட்களும், கலைப் பொருட்களும் அலங்காரமாக வீற்றிருந்து பணப் பெருமையை பறை சாற்றின.
மாடியிலிருந்த அறையில், அவர்கள் சோதனை போட்ட போது சோபா மறைவில் ஒரு மனிதனின் கால்கள் காட்சியளித்தன. உடனே இருவரும் அருகில் சென்று கவனித்தார்கள்.
 
கீழே விழுந்து கிடந்த மனிதனுக்கு சுமார் நாற்பது வயதிருக்கலாம். அவன் கண்கள் திறந்தபடி எதையோ வெறிக்கப் பார்த்தபடி இருந்தன. அவன் கைகள் முன்னால் நீட்டியபடி இருந்தன. அவனது மார்பில் யாரோ துப்பாக்கியால் சுட்டதினால், ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவன் கிடந்த நிலையே, அவன் இறந்து விட்டான் என்பதைத் தெளிவுபடுத்தியது.
 
அந்த அறையின் நடுவே போடப்பட்டிருந்த மேஜையில் டெலிபோன் வைக்கப்பட்டிருந்தது. டெலிபோன் ரிசீவர் கீழே தொங்கிக் கொண்டிருந்தது. மேஜையருகே போடப்பட்டிருந்த நாற்காலி ஒன்று கீழே சாய்ந்து கிடந்தது. அதிலிருந்துதான் சுந்தர் இழுத்துத் தள்ளப்பட்டிருக்க வேண்டுமென்று தீர்மானித்தார் பரஞ்சோதி.
 
''வெளியே எங்காவது டெலிபோன் இருந்தால் நீ போலீசாருக்குத் தகவல் கொடு, ராஜு'' என்றார் பரஞ்சோதி. உடனே ராஜு அங்கிருந்து கிளம்பினான்.
 
பரஞ்சோதி அந்த அறையை நன்றாகச் சோதனை போட்டார். ஆனால் அதில் எந்தவிதத் தடயங்களும் அவருக்குக் கிடைக்கவில்லை. பிணம் கிடந்த இடத்திற்கு சிறிது தூரத்திற்கப்பால் இருந்த ஒரு அழகிய மரச் சிலையின் கையில் ஒரு துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருந்தது.
 
அந்தச் சமயத்தில் வெளியே ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ஜன்னல் திரைச்சீலையை ஒதுக்கிக் கொண்டு வெளியே பார்த்தார் பரஞ்சோதி. காரிலிருந்து ஒரு அழகிய பெண், சுற்றும் முற்றும் பார்த்தபடி கீழே இறங்கினாள். காரின் கதவைச் சாத்தி விட்டு வீட்டை நிமிர்ந்து பார்த்த அந்தப் பெண், பரஞ்சோதியின் தலையைக் கவனித்தாள்.
 
''சுந்தர்... நீங்க தானே அது...?'' என்று குரல் கொடுத்தாள் அந்தப் பெண்.
 
"ஆமாம்" என்று தாயங்காமல் குரல் கொடுத்த பரஞ்சோதி. "மேலே வா!" என்றார்.

சில நிமிஷங்களில் அந்தப் பெண் மேலே ஏறி வரும் சத்தம் கேட்டது . உடனே பரஞ்சோதி அந¢த அறையின் வாயிலை நோக்கி நடந்தார். பரஞ்சோதியைக் கண்டதும் சங்கட உணர்ச்சியை அடைந்த அந்தப் பெண்,"நான்....நான்.... சுந்தரைப் பார்க்க வேண்டும்" என்றாள்.

அவ்வளவு அழகிய பெண்ணுக்கு, பனிரெண்டு மணிக்கு மேல் அங்கு என்ன வேலை இருக்கக் கூடுமென்று பரஞ்சோதிக்கு வியப்பாக இருந்தது.  அவர் மௌனமாக இருக்கவே அந்தப் பெண், "சுந்தர் என்னை இங்கே வரச் சொன்னார். இப்பொழுது அவர் இங்கே இருக்கிறாரா, இல்லையா?" என்று பொறுமை இழந்த குரலில் கேட்டாள்.

"இங்கு ஒரு மனிதன் இறந்து கிடக்கிறான்'. நானும் சுந்தரைத் தான் தேடுகிறேன்" என்றார் பரஞ்சோதி.

"என்ன,'" என்று அதிர்ச்சியோடு கூவிய அந்தப் பெண், பரஞ்சோதி எவ்வளவோ தடுத்தும் கேளாமல் அந்தச் சவத்தருகே சென்று பார்த்தாள்.

"இவனை உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார் பரஞ்சோதி.

"நல்ல வேளை" என்று நிம்மதிப் பெருமூச்சுடன் கூறிய அந்தப¢ பெண், "நான் சுந்தர்தான் இறந்துவிட்டாரோ என்று பதறிப் போய்விட்டேன்" என்றாள்.

"இந்த மனிதனை உனக்குத் தெரியுமா?" என்று மீண்டும் கேட்டார் பரஞ்சோதி.

"இவன், சுந்தருக்கும், அவர் மனைவி தமயந்திக்கும் மெய்க்காப்பாளனாக உள்ளவன், பெயர் மோகன்."

"நீ எதற்காக சுந்தரைப் பார்க்க வந்தாய்?"

"சென்னையிலிருந்து அவர் நேற்றுதான் சோலைப்£க்கத்திற்கு வந்தார். அவர் மனைவி இன்றிரவு ஏதோ பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாளை காலைதான் இங்கு வந்து சேருவார். இந¢த வீட்டை ஒரு வாரத்திற்கு முன்புதான் விலைக்கு வாங்கினார்கள். இங்கு சில முன்னேற்பாடுகளைச் செய்ய தனக்கு உதவிக்கு வரும்படிக் கூறியதால் நான் இங்கு வந்தேன்."

"இரவு பனிரெண்டு மணிக்கு இங்கு என்ன ஏற்பாடு செய்ய வந்தாய்?"

இந்தக் கேள்வியைக் கேட்டதும் அவள் முகம் சிவந்தது. இருந்த போதிலும் சமாளித்தவளாய், "சுந்தர் மாலை ஆறு மணிக்கே இங்கு வந்து விட்டார். எனக்கு சென்னையில் சில வேலைகள் இருந்ததால் எட்டு மணிக்குத்தான் இங்கு வந்து சேர்ந்தேன். ராம் விலாஸில் நான் அறை எடுத்துக் தங்கி இருக்கிறேன். எனக்கு டெலிபோன் செய்து பத்து மணிக்கெல்லாம் வந்து விடும்படி கூறினார் சுந்தர். எனக்கு சோலைப்பாக்கம் புதிதானதால் வழி தெரியாமால்  அலைந்ததில் நேரமாகி விட்டது" என்றாள்.

"உன் பெய்ரென்ன? நீ யார்?" என்று கேட்டார் பரஞ்சோதி.
 
"என் பெயர் அகல்யா. நான் ஸ்ரீமதி தமயந்தி சுந்தரின் காரியதரிசி" என்று கூறிய அந்தப் பெண், "எனக்கு இனி இங்கே வேலை இல்லை" என்றவள் திடீரென்று, "நீங்கள் யார்? எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்?" என்று கேட்டாள்.

"நான் தான் துப்பறியும் பரஞ்சோதி, சுமார் பனிரெண்டு மணிக்கு சுந்தர் எனக்கு டெலிபோன் செய்து, தன்னைக் கடத்துவதற்கு முயற்சி நடைபெறுவதாகவும், நான் உடனே புறப்பட்டு வரவேண்டுமென்றும் சொல்க் கொணடிருக்கும்போதே இங்கு ஏதோ தகராறு ஏற்பட்டதினால் அதற்குமேல் எனக்கு எதுவும் கேட்கவில்லை. உடனே நான் இங்கு வந்து சேர்ந்தேன்" என்றார் பரஞ்சோதி.

"தன்னைக் கடத்திச் செல்லப் போகிறார்கள் என்றா அவர் கூறினார்?" என்று வியப்போடு கேட்டாள் அகல்யா.
 
"ஆமாம்."
 
சிறிது நேரம் ஏதோ யோசனையோடு நின்று கொண்டிருந்த அகல்யா, "நான் போக வேண்டும்" என்று கூறியவளாய் திரும்பினாள்.
 
"கொஞ்சம் பொறு, இன்னும் சிறிது நேரத்தில் போலீசார் இங்கு வந்து விடுவார்கள். அவர்களிடம் கொஞ்சம் பேசவேண¢டி இருக்கும்" என்றார் பரஞ்சோதி.

"போலீசாருக்கு என் சாட்சியம் தேவையாக இருந்தால் நான் தங்கி இருக்கும் ஜாகைக்கு வரட்டும்" என்று கூறிய அகல்யா தனது டம்பப் வையை ஆட்டியபடி நடக்க ஆரம்பித்தாள்.

அவளது வழியை மறித்தவராய், "சில நிமிஷங்கள் நீ இங்கு இருந்துதானாக வேண்டும்" என்று கட்டளையிடும் பாவனையில் கூறினார் பரஞ்சோதி.

ஒரு கணம் அவரை வெறிக்கப் பார்த¢த அகல்யா, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தனது கைப்பையிலிருந்து ஒரு துப்பாக்கியை உருவி அவர் நெஞ்சுக்கு நேராகப் பிடித்தபடி, "திரும்பி அறைக்குள் நடங்கள், சிறிது அசைந்தாலும் சுடுவதற்குத் தயங்க மாட்டேன்" என்று கடுமையாகக் கூறினாள்.
-தொடரும்
==========================
1977ல் வெளிவந்த ஒரு மர்ம நாவலை இங்கு தொடராக வெளியிடுகிறேன். துப்பறியும் கதைகள் எழுதுவதில் புகழ் பெற்றிருந்த அந்நாளைய எழுத்தாளர் யார் என்பதை கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்.இயலாவிட்டால் தொடரின் இறுதியில் பெயர் வெளியிடப்படும்.

Saturday, September 22, 2012

ங்கே நான் பகிர்ந்திருக்கும் ஒரு டஜன் படங்களைப் பார்த்து முடித்ததும் நீங்களும் என்னைப் போல் பெருமூச்சு விடுவீர்கள் என்பது நிச்சயம். அந்நாட்களில் சென்னை மவுண்ட் ரோடில் மரங்கள் இருந்திருக்கின்றன. திருச்சி மலைக்கோட்டை உச்சியிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பசுமை கொஞ்சுகிறது. (இப்போது போய் எடுத்துப் பார்த்தால் வித்தியாசம் தெரியும்.) மக்கள் தொகையைப் பெருக்கியும். விஞ்ஞான வளர்ச்சியினால் வசதிகளை அதிகரித்தும் நாம் இழந்தது இயற்கையின் பசுமையை. ஹும்ம்ம்!

                             இது மதுரை மாநகரின் தோற்றம் - 1798ல்

மதுரையின் மற்றொரு தோற்றம் 1860ல்

சென்னை மவுண்ட் ரோடுதான் இது 1905ல்

சென்னையில் மன்றோ சிலையின் தோற்றம் 1905ல்

திருச்சி மாநகரம் 1895ல்

 திருச்சி வேறொரு கோணத்தில் 1895ல்திருச்சியின் மற்றொரு கோணம் 1890ல்தஞ்சாவூர் 1858ல்

தஞ்சாவூர் 1869ல்

இதுவும் தஞ்சைதான் 1869ல்

திருக்கழுகுன்றம் 1869ல்

இராமநாதபுரம் 1784ல

பழைய படங்களைப் பார்த்தீங்களா. ரசிச்சீங்களா... என்ன தோணுதுன்னு கீழ சொல்லிட்டுப் போங்க. ஆர்வமா காத்திருக்கேன் நான்

Friday, September 14, 2012

ம்முறை ஜோக்குகளைவிட சில துணுக்குகளைப் பதிவிடலாம் என்ற எண்ணத்தில் இங்கே தந்திருக்கிறேன். இவை சுவாரஸ்யமா இல்லையா என்பதை நீஙகள் தான் சொல்லணும்...

Friday, August 24, 2012

சிரிப்பிலே பல ரகம் உண்டு. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ‘சிரிப்பு. இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு‘ என்கிற பாடலில் விதவிதமான சிரிப்புக்களைப் பட்டியலிட்டு சிரித்துக் காட்டி வியக்க வைத்திருப்பார். கீழே இருக்கும் துணுக்குகளைப் படித்துவிட்டு நீங்கள் சிரித்தால் அது சங்கீதச் சிரிப்பு!

Saturday, August 18, 2012

கரைந்த நிழல்கள்
- அசோகமித்திரன் -

திகாலை மூன்று மணிக்கு வேன் வர, புரொடக்ஷன் மேனேஜர் நடராஜன் ஸ்டுடியோவுக்கு வருகிறான். அன்றைய தினம் அதிகாலையில் நடக்கவிருக்கும் அவுட்டோர் ஷுட்டிங்கிற்கான ஏற்பாடுகளை பரபரப்பாக கவனிக்கிறான். தன் உதவியாள் சம்பத்திடம் கேமராமேன் கோஷையும், டைரக்டர் ஜகந்நாத ராவையும் பிக்கப் செய்து கொண்டு வரச் சொல்கிறான். ஜகந்நாத ராவின் உதவியாளர் ராஜ்கோபால் சம்பத்துடன் சேர்ந்து கொள்ள, அவுட்டோர் ஷுட்டிங் நடக்கிறது. மதியம் ஸ்டுடியோவில் ஷுட் பண்ண வேண்டிய பகுதிக்காக ஸ்டுடியோ திரும்புகிறார்கள்.

சம்பத் ஊரிலிருந்து வந்திருக்கும் தன் உறவினர்களை ஷுட்டிங் பார்க்க அழைத்திருக்க, அவர்கள் வந்து ஒருபுறம் காத்திருக்கின்றனர். கதாநாயகி ஜயசந்திரிகா வராததால் ஷுட்டிங் தடைபடுகிறது. ஸ்டுடியோவுக்கு வந்த தயாரிப்பாளர் ரெட்டியாரிடம் விஷயம் சொல்லப்பட, அவர் சம்பத்தை உடனழைத்துக் கொண்டு காரை ஜயசந்திரிகாவின் வீட்டுக்கு விடச் சொல்கிறார்.

ரெட்டியார் பழம்பெரும் தயாரிப்பாளர். தற்சமயம் அவரது பொருளாதார நிலை கடும் நெருக்கடியில் இருந்தது. அன்றாட ஷுட்டிங்கிற்கே மிகுந்த சிரமத்தின் பேரில் பணம் திரட்டிக் கொண்டிருந்தார் அவர். எனவே கோபத்துடன் ஜயசந்திரிகா வீட்டிற்கு வந்து அவளிடம் கடுமையாக (சற்றே அநாகரிகமாகவும்) பேசி, ஷுட்டிங்கிற்கு வரச் சொல்லி மிரட்டுகிறார். அவள் அவருடன் ஷுட்டிங்கிற்குப் புறப்பட்டு வர, வீட்டு வாசலில் மயக்கமடைந்து விழுகிறாள்.

நிலையான வேலை பார்க்காமல் சினிமாத் தொழிலில் இருப்பதால் உதவி இயக்குனர் ராஜ்கோபாலுக்குத் திருமணம் தள்ளிப் போகிறது. உறவினர் ஒருவர் அவன் அம்மாவையும் அவனையும் சந்தித்து திருமணப் பேச்செடுத்து விட்டுச் செல்கிறார். ராஜ்கோபால், ஜெகந்நாத ரெட்டியை சந்திக்க, அவன் ரெட்டியார் தலைமறைவாகி விட்டதால் படம் நின்று விட்டதாகவும், தான் ஃபாரின் போகப் போவதாகவும் சொல்கிறான். எடிட்டிங் அசிஸ்டெண்ட் சிட்டி, ராஜ்கோபாலை ராம்சிங் என்ற இயக்குனரிடம் சேர்த்துவிட அழைத்துச் செல்கிறான். ஷுட்டிங் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க, சம்பத் அங்கே புரொடக்ஷன் மேனேஜராக இருப்பதை ராஜ்கோபால் பார்க்கிறான். முன்னொரு சமயம் ராம்சிங்கின் படத்தை வெளிநாட்டுக்காரர் ஒருவர் கேலி செய்தபோது ராஜ்கோபால் உரத்துச் சிரித்தது இப்போது அவனைப் பார்க்கையில் ராம்சிங்குக்கு நினைவு வந்து விடுகிறது. ஆனால் ஷுட்டிங்கிலிருந்த கதாநாயகி ஜயசந்திரிகா, அவனை அடையாளம் கண்டு கொண்டு நெருங்கிப் பழகுகிறாள்.

ராம ஐயங்கார் ஒரு முன்னணித் தயாரிப்பாளர். அவரது ஸ்டுடியோவில்தான் ரெட்டியாரின் ஷுட்டிங் முன்பு நடந்திருந்தது. ஸ்டுடியோவை தற்போது அவர் விரிவுபடுத்திக் கட்டிக் கொண்டிருக்க, நடேச மேஸ்திரி என்பவன் அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கிறான். ராம ஐயங்கார் முன்பு ரெட்டியார் எடுத்திருந்த முக்கால்வாசிப் படத்தை தன் ஆட்களுடன் பார்க்கிறார். அந்தக் கதையில் சில மாற்றங்கள் செய்து தற்போது ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யும்படி தன் குழுவைச் சேர்ந்த பண்டிட்ஜி என்பவரிடம் உத்தரவிடுகிறார். அவர் எடுத்திருக்கும் இந்திப் படம் மும்பையில் வெளியாவதில் சிவசேனாக் காரர்களால் சிக்கல் ஏற்பட்டிருப்பது அவருக்குத் தெரியப்படுத்தப்படுகிறது. அவரது பிரம்மாண்டமான விளம்பர ஏற்பாடுகள் யாவும் வீணாகி விடுகின்றன.

ராம ஐயங்காரின் மகன் பாச்சா இரவு எஸ்டேட் வீட்டில் குடித்துக் கொண்டிருக்கிறான். அவனை ராம ஐயங்கார் சந்தித்து தன் சாம்ராஜ்யத்தை அவன் நிர்வகிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ள, அவன் மறுத்து விடுகிறான். பணத்தின் சபலத்திற்கு ஆட்படாமல் வாழ விரும்புவதாக அவன் சொல்ல, தான் பூஜ்யத்திலிருந்து ஆரம்பித்து வளர்த்த சாம்ராஜ்யத்தை அவன் வளர்க்கா விட்டாலும் அப்படியே பார்த்துக் கொண்டால் போதும் என்னும் ராம ஐயங்கார், அவனை பொறுப்பற்ற தன்மைக்காக கடிந்து கொண்டு சென்று விடுகிறார்.

ஃபிலிம் பிஸினஸ், ரியல் எஸ்டேட் எல்லாம் கலந்துகட்டி செய்பவன் நான். சோமநாதன் என்கிற கதாசிரியர் என்னிடம் வர சம்பத் எடுக்கப் போகும் புதிய படத்திற்கு கதை கேட்டிருந்ததால் புரொட்யூசர்களைப் பார்த்து கதை சொல்லும்படி சொல்கிறேன். அவர் என் தெருவில் காலியாக இருந்த வக்கீல் வீட்டு மாடிக்கு மல்லிகா என்ற பெண்ணை யாரோ குடி வைத்திருப்பதாக தகவல் சொல்லிச் செல்கிறார். நான் பனகல் பார்க் வர என் நபர் சேட் என்னிடம் ராம ஐயங்கார் எடுத்த `கதிர் விளக்கு' (ரெட்டியார் பாதியில் விட்ட படம்) தோல்வி என்றும், ஆனால் ராம ஐயங்கார் எடுத்து இந்திப் படம் வட நாட்டில் எதிர்பாராத அளவுக்கு நன்றாக ஓடுவதாகவும் சொல்கிறான்.

சம்பத் வர, அவனுடன் காரில செல்லும் போது நடிகை ஜயசந்திரிகா, ராஜ்கோபாலைத் திருமணம் செய்து கொண்டுவிட்ட விஷயத்தைச் சொல்கிறான். புரொட்யூசர்கள் கதைக்கு அவசரமில்லை. உடனே ஒரு ஆபீசும் அதைப் பார்த்துக் கொள்ள ஆளும் வேண்டும் என்கிறார்கள். நான் சம்பத்திடம் நடராஜன் சரிப்படுவானா என்று கேட்க, அவர் மிகவும் வறுமையில் வாடுவதாகவும், கால்கள் இரண்டும் வீங்கிப் போய் ஆஸ்பத்திரிக்குச் செல்லவும் பணம் இல்லாமல் தவிக்க, தான் உதவியதாகவும் சம்பத் சொல்கிறான். வேறு நபர் பார்க்கும்படி நான் சம்பத்திடம் சொல்ல, அவன் தான் புது ஆபீஸ் பார்த்திருப்பதாகச் சொல்லி ஸ்டேஷன் பார்டர் ரோடில் 68ம் நம்பர் வீடு என்கிறான்.

சோமநாதன் சொன்னது நினைவுவர, வக்கீல் வீட்டு மாடியா என்று நான் கேட்க, ஆமாம் என்றுவிட்டுச் செல்கிறான். நான் என் அறைக்கு வர, அசிஸ்டெண்டுகள் யாருமில்லை. என் பீடிக் கட்டிலிருந்து நான்கைந்தை உருவிக் கொண்டு சென்று விட்டிருக்கின்றனர்.

-அசோகமித்திரனின் `கரைந்த நிழல்கள்' கதையின் இந்தச் சுருக்கத்தைப் படித்ததுமே இது வழக்கமான கதை இல்லை  என்பதைப் புரிந்திருப்பீர்கள். சில கதாபாத்திரங்கள், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், முடிவு என்கிற வழக்கமான கதையின் இலக்கணங்களுக்குள் வராமல், சினிமா உலகத்தை, அதன் சிறப்புகளை, அழுக்குகளை அனைத்தையும் பரந்துபட்ட பார்வையில் பிரித்து மேய்ந்திருக்கிறார் அசோகமித்திரன்.

இது தொடர்கதையாக வெளிவந்த போது `கதை புரியவில்லை' என்று திட்டியவர்கள் சிலர்; படைப்பின் சிறப்பைப் புரிந்து கொண்டு பாராட்டியவர்கள் பலர் என்கிறார் அசோகமித்திரன் இதன் முன்னுரையில். அவரது குறிப்பிடத்தக்க நாவல்களுள் ஒன்றான இந்த `கரைந்த நிழல்கள்' நாவலை முழுமையாக ரசித்துப் படித்தால் பாராட்டுபவர்களின் பட்டியலில் நிச்சயம் நீங்களும் இருப்பீர்கள்.

Tuesday, August 14, 2012

ன் முகநூல் நண்பர்கள் பகிர்ந்தவற்றில் என்னைக் கவர்ந்த அரியவற்றை உங்களுக்காக இங்கே கத்தரித்து, சித்தரித்துள்ளேன்.

இந்தியா சுதந்திரம் பெற்ற தினத்தின் நாளிதழ்ன் முகநூல் நண்பர்கள் பகிர்ந்தவற்றில் என்னைக் கவர்ந்த அரியவற்றை உங்களுக்காக இங்கே கத்தரித்து, சித்தரித்துள்ளேன்.

இந்தியா சுதந்திரம் பெற்ற தினத்தின் நாளிதழ்Wednesday, August 8, 2012

ரு மாறுதலுக்காக இந்த முறை கொஞ்சம் சினிமா மேட்டர்களைக் கத்தரித்துப் போட்டிருக்கிறேன். இவையும் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

பழைய காலத்து சினிமாப் பத்திரிகையின் அட்டைப்படம் இது1

ஹொன்னப்ப பாகவதர் என்று ஒரு நடிகரைக் கேள்விப்பட்டதுண்டா? அவர் நடித்த படத்துக்கான இந்த விளம்பரத்தைக் கொஞ்சம் பாருங்களேன்...

ரைட்டு... இப்ப இந்த சினிமா விளம்பரம் வெளியான ஆண்டு என்னன்னு கவனிச்சுப் பாருங்களேன்... சர்ப்ரைஸா இருக்கும்!

செருகளத்தூர் சாமா என்கிற நடிகர் நடித்த இந்தப் படத்துக்கான விளம்பரம் வித்தியாசமா இருந்தது எனக்கு. உங்களுக்கு என்ன தோணுது?

மாடர்ன் தியேட்டர்ஸ் ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ படம் வெளியாகப் போற தியேட்டர்லாம் சொல்லிக்கூட விளம்பரம் பண்ணி அசத்தியிருக்காங்க அக்காலத்துலயே...

ரைட்... இப்ப நம்க்குப் பிடிச்ச மக்கள் திலகம் நடிச்ச. தமிழ்ல வந்த முதல் கலர்ப்படமான அலிபாபா படத்தோட விளம்பரம்

மக்கள் திலகமும் நடிகர் திலகமும் சேர்ந்து நடிச்ச கூண்டுக்கிளி படத்தோட விளம்பரம் இங்க....