கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Tuesday, April 30, 2013

ஜோக்குகளை வெளியிட்டு உங்களைச் சிரிச்சு ரசிக்க வெச்சு ரொம்ப நாளாச்சு! இந்த முறை ‘கல்கி’ இதழ்களில் 1960களில் ‘சாமா’ என்பவர் வரைந்த பழைய ஜோக்குகள் உங்களுக்காக அணிவகுக்கின்றன இங்கே...!

கீழே நான் கொடுத்திருக்கும் படத்தை இதய பலவீனம் உள்ளவர்களும் பெண்களும் பார்க்காதிருக்கக் கடவது என்று எச்சரிக்கிறேன்.
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
1961ம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதியன்று தமிழின் புகழ்பெற்ற ‘தினததந்தி’ நாளிதழின் முதல் பக்கத்தி்ல் வெளியான தலைப்புச் செய்தி  இது!
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))


ஹி... ஹி...!

21 comments:

 1. இருபது பவுன் காசு மாலை "எண்பதுகளில்" பெண்களின் மனநிலையை படம் பிடித்து காட்டியது. ( பொதுவா பெண்கள்னு மட்டும்னு சொன்னா சண்டைக்கு வந்திடுவாங்களே.. நமக்கேன் பொல்லாப்பு..)

  ReplyDelete
  Replies
  1. என்னா முன்ஜாக்கிரதை ஆவி! பெண்களின் மனநிலை எந்த நூற்றாண்டிலும் ஒண்ணு தான்ப்பா!

   Delete
 2. தங்கம் 94 ருபாய் ஆயிடுச்சான்னு வாயப் பொளந்தவங்க எல்லாம் இப்போ சிரிப்பாங்க இல்லே??

  ReplyDelete
  Replies
  1. அன்றைய சிறு பையன்கள் இன்று மீண்டும் இந்தப் பேப்பரைப் பாத்தா சிரிக்க மாட்டாங்க ஆனந்த்! ‌பெரியதொரு பெருமூச்சுதான் புறப்படும் அவர்களிடமிருந்து. உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

   Delete
 3. கத்தரித்தவை எல்லாமே வாய்விட்டு சிரிக்க வைத்தாலும், தங்கத்தின் விலை பற்றிய ‘தந்தி’யின் செய்தி மட்டும் அந்த காலத்தை நினைத்து ஏங்கவைத்தது.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு ஏற்பட்ட அதே உணர்வுகள் உங்களிடமும் பிரதிபலிக்கிறது. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஸார்!

   Delete
 4. அன்பின் பால கணேஷ் - அததனையும் அருமை - அந்தக் காலத்திலேயே தங்கம் வாங்கி வைக்காமப் போய்ட்டாங்களே நம்ம முன்னோர் ......... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. எங்கம்மா 1953ல கல்யாணமாகி வந்தப்ப 80 பவுன் நகை போட்டாங்களாம். அப்பா சின்ன வயசுலயே தவறிட்டதால நாங்க வளர வளர நகைகள் மறைஞ்சு போயிடுச்சு. இப்ப இருநதிருந்தா....ன்னு எனக்கும் பெருமூஊஊஊச்சு வந்ததாலதான் இதை வெளியிட்டேன் சீனா ஸார்! ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்தநன்றி!

   Delete
 5. அப்போது 94 ரூபாய் ஆக இருந்தாலும், சம்பளமும் அதே அளவில் தானே இருந்தது! அம்மா கல்யாணத்தின் போது [1965] ஒரு பவுன் 130 ரூபாய் எனச் சொல்லி இருக்கிறார்.... :)

  நல்ல துணுக்குகள். அனைத்தையும் ரசித்தேன்..... தொடரட்டும் துணுக்குகள்....

  ReplyDelete
  Replies
  1. ஆமா வெங்கட்... ஜெமினி ஒரு படத்துல தன் மச்சான்கிட்ட, ‘‘உனக்கு வேலைக்கு சொல்லிட்டன்டா. நல்ல வேளை நல்ல சம்பளம். மாசம் 125 ரூபா தருவான்டா...’’ அப்படின்னு சொல்றாரு. ஒரு குடும்பமே முக்கி முக்கி ஓட்டல்ல சாப்ட்டாலும் 6 ரூபா பில் வந்த அந்த நாளையும், 800 ரூபா பில் வர்ற இந்த நாளையும் நினைச்சு பெருமூச்சு விட்டதோட விளைவுதான் அது! துணுக்குகளை ரசிதத உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

   Delete
 6. அருமையான பதிப்பு. இதை ஏன் நீங்கள் தமிழன் பொது மன்றம் (http://www.tamilanforum.com) இணையத்தில் பதித்து பரிசுகளை வெல்லும் வாய்ப்பை மிகைப்படுத்தி கொள்ளகூடாது? வாருங்கள்.. இணையுங்கள்.. பதியுங்கள்.. பரிசுகளை வெல்லுங்கள்...மேலும் விவரங்களுக்கு தமிழன் பொது மன்றத்தின் அறிவிப்பு பலகையை பாருங்கள்.

  - தமிழன் பொது மன்றம்.

  ReplyDelete

 7. நல்ல நகைச்சுவை துணுக்குகள். அனைத்தையும் படித்து ரசித்தேன்.....

  ReplyDelete
 8. அனைத்தும் கலக்கல்...

  ஏங்க வைக்கும் தலைப்புச் செய்தி சூப்பர்...!

  ReplyDelete
 9. ஐந்தில் ஐம்பதில் செம செம செம
  நிச்சயமா அது இதயம் பலகீனமானவர்களுக்கு என்ன பலமானவர்களுக்குக் கூட அதிர்ச்சி தரும் செய்தி

  ReplyDelete
 10. எல்லாமே அருமை. இந்த மாதத்து தினத் தந்தி தங்க விலை கூட இன்னும் 50 வருஷம் கழிச்சு ஆச்சர்யமாயிருக்கலாம்!!!!

  ReplyDelete
 11. அந்தக் காலத்தில் அறுபது ரூபாய் சம்பளத்தில் கூட இருபது ரூபாய் சேமிக்க முடிந்தது..ஆனால் இன்று 30000 சம்பளம் வாங்கினால் கூட இரண்டாயிரம் கூட சேமிக்க முடிவதில்லை..வாழ்க்கை முறையும் செலவு செய்வதற்கான வாய்ப்புகளும் மாறிவிட்டன..

  ReplyDelete
 12. ரசிக்க வைத்த துணுக்குகள்! நன்றி!

  ReplyDelete
 13. கத்தரித்த சித்தரிப்புகள் அத்தனையும்
  சுத்திகரிப்பு செய்யப்பட சுத்த தங்கங்கள்....

  ReplyDelete
 14. ரசிக்க வைத்த துணுக்குகள்

  ReplyDelete
 15. ஓவியர் சாமாவின் படங்களுக்கு வசனமே தேவையில்லை.. அத்தனை அற்புதம்!

  தங்கத்தின் விலை - வியப்பு!

  காலயந்திரத்தில் பயணித்து சில நிமிடங்களுக்கு 1960 இல் வாழ்ந்தாற்போன்ற பிரமை...

  பகிர்வுக்கு நன்றி கணேஷ்.

  ReplyDelete