கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Wednesday, June 26, 2013

                                       2. மாதவி துறவு

ர் முழுவதும் திருவிழா ஆரவாரம். எங்கும் ஆடல் பாடல். எல்லோரும் இன்பக் கடலில் மிதக்கின்றனர். இவர்களில் சித்திராபதி ஒருத்திக்குத் தான் தணியாத வருத்தம் போலிருக்கிறது. அவள் மகள் மாதவி தன் ஆடலின் திறத்தையும், பாடலின் இனிமையையும், அழகின் வளத்தையும் வீணாக்கித் துறவுக் கோலத்தை மேற்கொண்டு விட்டாள். கோவலன் இறந்த செய்தியைக் கேட்ட அன்றே அவளுக்கு உலக இன்பத்தில் வெறுப்பு உண்டாகி விட்டது.

சித்திராபதிக்குச் சிறிதே ஆசை எழுகிறது. எல்லோரும் களித்திருக்கும் இந்த விழாக் காட்சியைக் கண்டாவது திருந்த மாட்டாளா என்ற ஆவல் அவளுக்குத் தோன்றுகிறது. மாதவியின் தோழி வசந்தமாலையை அழைத்தாள். ‘‘ஊரெல்லாம் மாதவி தான் செய்ய வேண்டிய கடமையை விட்டு வாளா இருப்பதைப் பற்றிக் குறை கூறுகிறது. நீ இதை அவளிடம் போய்ச் சொல்லி அவள் மனத்தை மாற்று’’ என்று கூறி விடுத்தாள்.

வசந்தமாலை, மாதவி தன் மகளாகிய மணிமேகலையுடன் பூத்தொடுக்கும் மண்டபத்தில் இருக்கிறாள் என்பதை அறிந்து அங்கே போனாள். மாதவியைக் கண்டாள். எப்படி மாறிவிட்டாள் அவள்? மேனி பொலிவிழந்து உடல் வாடி அலங்காரமின்றி இருந்தாள். அவளைக் கண்டவுடன் வசந்தமாலைக்குக் கண்ணில் நீர் முட்டியது.


‘‘என்ன காரியம் செய்தாய்? ஊரெல்லாம் ஒரே ஆரவாரம். உன்னைப் பற்றியே யாவரும் பேசுகிறார்கள். உன் காதில் விழவில்லையா?’’ என்று கேட்டாள்.

‘‘என்ன பேசுகிறார்கள்?’’

‘‘உன்னுடைய எழிலையும் கலையாற்றலையும் பற்றிப் பேசுகிறார்கள். பல வகையான நடனங்களில் வல்லவள் நீ. யாழ் வாசிப்பதில் பேராற்றல் உடையவள். எத்தனை மொழிகளில் உனக்குப் புலமை உண்டு! வாத்தியங்களை வாசிப்பாயே! பந்தாடுவாய்; சமையற்கலையில் தேர்ச்சி பெற்றவள்; சுண்ணம் அமைப்பாய்; பேச்சில் வல்லவள்; சித்திரம் எழுதுதல், மலர் தொடுத்தல் முதலிய கலைகளில் வல்லவள். இவ்வளவு இருந்தும் நீ தவக்கோலம் மேற்கொண்டது தகாது. நாணுவதற்குரியது என்று ஊரே பேசுகிறது’’ என்றாள்.

மாதவி புன்முறுவல் பூத்தாள். ‘‘அப்படியா? என்னுடைய காதலருக்கு வந்த கதியை உணர்ந்து நான் அன்றே உயிர் நீத்திருக்க வேண்டும். அல்லது ஏரியில் மூழ்கியிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் தவம் மேற்கொண்டேன். பத்தினித் தெய்வமாகிய கண்ணகியின் மகள் மணிமேகலை. இவள் தீய தொழிலிலேயே புக மாட்டாள். இவளும் நோன்பு நோற்பாள். நான் மாதவர் உறையும் இடம் புகுந்தேன். அறவணவடிகளாகிய ஆசானுடைய திருவடிகளில் வீழ்ந்தேன். என் காதலர் உற்ற கடுந்துயர் கூறி நைந்தேன். அப்பெருமான் எனக்கு உபதேசம் அளித்தார்.

‘பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும்பே ரின்பம்
பற்றின் வருவது முன்னது; பின்னது
அற்றோர் உறுவது: அறிக’

என்று அருளினார். யான் உய்யும் வகை இது என்று காட்டினார். அவர் வகுத்த நெறியிலே என் வாழ்நாளைப் போக்க முடிவு செய்து விட்டேன்’’ அவள் பேச்சில் அசையா உறுதி புலனாகியது.

வசந்த மாலை கண்ணீருடன் நின்றாள்.

‘‘ஆம்; இதைப் போய் என்னைப் பெற்றவளுக்குச் சொல். மற்றப் பெண்களுக்கும் சொல்...’’

வசந்தமாலை மயங்கினாள். கிடைத்த மாணிக்கத்தைக் கடலிலே கை தவற விட்டவரைப் போல வாட்டத்தோடு திரும்பினாள். ஆம்! மாதவி இப்போது ஞானப் பெருங்கடலில் புகுந்து விட்டாள்!

அப்புறம்...?

20 comments:

  1. //‘பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
    பிறவார் உறுவது பெரும்பே ரின்பம்//
    அற்புத வரிகள்!

    ReplyDelete
    Replies
    1. தமிழை ரசித்த உங்களுக்கு தலைதாழ்த்திய என் நன்றி!

      Delete
  2. இத்தனை திறமைகள் இருந்தும்... வீணோ...?

    அப்புறம் தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. தொடரும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  3. நல்ல தொடர்.... சிறப்பாக இருக்கிறது கணேஷ். படம் மனதை கொள்ளை கொண்டது!

    ReplyDelete
    Replies
    1. படத்தையும் தமிழையும் ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  4. அருமையான, நல்லதொரு தொடர்..

    ReplyDelete
    Replies
    1. தொடரை ஸ்லாகித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  5. எளிய தமிழில் மாபெரும் காவியம்.., தொடரட்டும் அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித் தங்கைக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  6. உங்கள் மூலம் ஒரு நல்ல காவியத்தை படிக்கும் வாய்ப்பு... தொடருங்கள் சார்.. நாங்களும் தொடர்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்த தோழிக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  7. I read this(2nd also) today and I will continue.. Congratz.
    Vetha. Elangathilakm

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்து தொடரும் உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  8. நல்ல காவியத் தொடர் .... .. வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  9. மாதவியின் கற்புநெறியும் வாழ்க்கையும் கண்ணகிக்குச் சற்றும் சளைத்ததில்லை. கோவலன் பால் அவளுக்கிருக்கும் அன்பினைத் தெளிவுற எடுத்துரைக்கும் அற்புத வரிகள். பகிர்வுக்கு நன்றி கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் போகப் போக ரசனைக்கு நல் விருந்து காத்திருக்கு கீதா. படித்து ரசித்து மகிழ்ந்த உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  10. மாதவி இப்போது ஞானப் பெருங்கடலில் புகுந்து விட்டாள்!

    அருமையான தொடர்.!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete