கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Friday, October 26, 2012

வள் குரலிலிருந்த ஏதோ ஒன்று, அவள் எதற்கும் தயாரான அபாயகரமானப் பெண்மணி என்று பரஞ்சோதிக்கு உணர்த்தியது. எனவே மறுபேச்சுப் பேசாமல் அறைக்குள் நுழைந்தார்.

அடுத்த வினாடியே கதவை வெளிப்பக்கமாக சாத்தித் தாளிட்ட அகல்யா, மாடிப் படிக்கட்டில் தடதடவேன இறங்கித் தன் கார் இருக்கும் இடத்தை அடைந்து அதை வெகு வேகமாகக் கிளப்பிக் கொண்டு கேட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்த ராஜூ மீது இடித்து விடுவதைப் போல் சென்றாள.

அவசரமாக மாளிகைக்குள் நுழைந்த ராஜூ, பரஞ்சோதியின் அறையைத் திறந்தான். ராஜூவிடம் நடந்தவைகளைக் கூறினார் பரஞ்சோதி.
"அவள் உண்மையிலேயே தமயந்தியின் காரியதரிசியாக இருக்க மாட்டாள் என்று எனக்குத் தோன்றுகிறது." என்று கூறிய பரஞ்சோதி, "அதனால்தான் அவள் போலீசார் வருவதற்குள் சென்று விட்டாள்" என்றார்.

"அப்படியானால் அவள் கொடுத்த விலாசமும் பொய்யாகத் தான் இருக்கும்" என்றான் ராஜூ.

"ஆமாம்" என்று பரஞ்சோதி கூறும் பொழுதே போலீசார் வரும் சத்தம் கேட்டது. சில வினாடிகளில் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், நான்கு கான்ஸ்டபிள்களுடன் அங்கு வந்து சேர்ந்தார்.

"பிணம் அடுத்த அறையில் இருக்கிறது, இன்ஸ்பெக்டர்" என்று கூறியபடி தனது ஆசனத்தை விட்டு எழுந்த பரஞ்சோதி, இன்ஸ்பெக்டருக்கு அந்த அறையைக் காண்பித்தார். வழக்கமான சோதனைகளுக்குப் பிறகு பிணத்தை ஆம்புலன்ஸ் காரில் ஏற்றி அனுப்பிவிட்டு பரஞ்சோதியிடம் வந்தார் இன்ஸ்பெக்டர் கதிர்வேல்.

"நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள், பரஞ்சோதி?" என்று கேட்டார்.

"சுந்தர்தான் எனக்கு டெலிபோன் செய்து தன்னைக் கடத்துவதற்காக முயற்சிகள் நடப்பதாகவும், நான் உடனே புறப்பட்டு வந்தால் அதைப் பற்றிப் பேசி, என்ன செய்வதென்ற முடிவுக்கு வரலாமென்றும் கூறியதனால்தான் நான் இங்கு புறப்பட்டு வந்தேன். ஆனால் நான் வருவதற்குள் காலங் கடந்து விட்டது" என்றார் பரஞ்சோதி. பிறகு அகல்யாவைப் பற்றியும் இன்ஸ்பெக்டரிடம் கூறினார்.

"விசித்திரமாக அல்லவா இருக்கிறது" என்று கூறிய கதிர்வேல், "ஸ்ரீமதி சுந்தர், இந்தப் பெண்ணைப் பற்றி அறிய நேர்ந்தால் அதனால் பல சங்கடங்கள் எழக்கூடும். நாம் முடிந்தவரை இந்தப் பெண்ணைப் பற்றிய தகவல்களை ரகசியமாகத்தான் விசாரிக்க வேண்டும்" என்றார்.
பிறகு ராம் விலாஸீக்கு டெலிபோன் செய்து அகல்யாவைப் பற்றி விசாரித்தார். அங்கு அகல்யா என்ற பெயரில் யாரும் தங்கி இருக்கவில்லை என்று அவருக்குத் தகவல் கிடைத்தது. அவள் இந்த நேரம் மாயமாய் மறைந்திருப்பாள் என்று இன்ஸ்பெக்டர் கதிர்வேலுக்குத் தோன்றியது.

                                    2. பிச்சுவா பாஸ்கர்

றுநாள் காலை பத்து மணிக்கு பரஞ்சோதிக்கு ஒரு டெலிபோன் அழைப்பு வந்தது. அவரது நண்பர் பிரகாஷ்ராவ்தான் பேசினார்.
"என் மகள் லலிதாவைக் காணவில்லை, பரஞ்சோதி, அவள் அந்தப் பரதேசிப் பயலைத் தேடிப் போய் இருப்பாள் என்று எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் எனக்காக் கொஞ்சம் அவளைத் தேடிக் கொடுக்க முடியுமா?"

"நிச்சயமாக நான் உங்களுக்கு லலிதாவைத் தேடிக்கொண்டு வந்து சேர்க்கிறேன்" என்று உறுதி கூறினார் பரஞ்சோதி. சில நிமிடங்களில் மாற்றுடை அணிந்துகொண்டு கிளம்பினார். வெளியே சென்று கொண்டிருந்த ஒரு வாடகைக் காரை நிறுத்தி ஏறிக்கொண்டு பாசுதேவ் வீதிக்கு ஓட்டும்படிக் கூறினார்.

பத்து நிமிஷங்களுக்கெல்லாம் அவர் பாசுதேவ் வீதியை அடைந்து விட்டார். பிரகாஷ்ராவ் கூறிய பரதேசிப் பயல் அங்கு தான் ஜாகை வைத்துக் கொண்டு வசித்து வந்தான். ஒரு பழங்காலக் கட்டிடத்தின் மாடியில் இருந்தது அவனது ஜாகை. கட்டிட வாசலில் நின்று கொண்டிருந்த காவல்காரனான வேணு அவரை சந்தேகத்தோடு பார்த்தான். ஏனென்றால் பலவிதமான மோசடிகளிலும் குற்றங்களிலும் பங்கு பெற்ற பலர்தான் அந்தக் கட்டடித்தில் குடி இருந்தனர். எனவே பரஞ்சோதியைக் கண்டது, யாரோ போலீஸ் அதிகாரியாக இருக்குமென்று அவனுக்குத் தோன்றியது.

"பாஸ்கர் மேலே இருக்கிறானா?" என்று கேட்டாா பரஞ்சோதி.

"இருக்கிறார்" என்றான் வேணு.

"அவனோடு ஒரு பெண் இருக்கிறாள், அல்லவா?" என்று கேட்டார் பரஞ்சோதி.

"எனக்குத் தெரியாது" என்று கூறிய பொழுது அவன் முகம் கல்லைப்போல் இறுகியது. ஏனென்றால் அங்குள்ளவர்களைப் பற்றி எந்தவிதத் தகவலும் அவன் வெளியிலிருந்து வருபவர்களுக்குக் கூறக் கூடாதென்று கடுமையான கட்டளை இட்டிருந்தான் பாஸ்கர். தான் பாஸ்கரைப் பற்றி எந்தத் தகவலையாவது இந்த மனிதரிடம் கூறினால் அவன் தன்னைக் கொலை செய்யவும் தயங்க மாட்டான் என்று வேணுவுக்குத் தெரியும்.

வேணுவிடம் வேறொன்றும் கேட்காமல் மாடிக்குச் சென்றார் பரஞ்சோதி, பாஸ்கரின் ஜாகைக் கதவு தாளிடப்பட்டிருந்தது. சிறிது நேரம் அதன் முன் தயங்கி நின்ற பரஞ்சோதி, பிறகு மெதுவாகத் கதவைத் தட்டினார். சில வினாடிகளில் கதவு திறக்கப்பட்டது. பாஸ்கர் சிறிதும் எதிர்பாராதபொழுது அவனைத் தள்ளியபடி உள்ளே நுழைந்து விட்டார் பரஞ்சோதி.

ஒரே ஒரு அறையைக் கொண்ட அந்த ஜாகையில், அறையின் நடுவே கிடந்த கட்டிலின் விளிம்பில் அரை மயக்க நிலையில் அமர்ந்திருந்தாள் லலிதா. பரஞ்சோதியை அவள் கவனித்ததாகவே தெரியவில்லை. தனக்குதானே ஏதோ பிதற்றியபடி படுக்கையில் சாய்ந்தாள்.

"நீ யார்? எதற்காக இங்கே வந்திருக்கிறாய்?" என்று சீறினான் பாஸ்கர்.

சில வினாடிகள் அவனையே அமைதியோடு பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, "நான் தான் துப்பறியும் பரஞ்சோதி, லலிதாவை அழைத்துச் செல்ல வந்தேன். என்றார்.

"என் விருந்தாளியாக வந்திருக்கும் அவளை நான் அனுப்ப முடியாது. நீ மரியாதையோடு இங்கிருந்து போய் விடு" என்று ஆத்திரத்தோடு கூறினான் பாஸ்கர்.

பரஞ்சோதி அதை கவனிக்காதவர்போல் கட்டிலருகே சென்று லலிதாவைக் குனிந்து பார்த்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கர் வேகமாக பரஞ்சோதியினருகே வந்து அவர் சட்டையைப் பிடித்து இழுத்தான். பரஞ்சோதி நிதானமாகத் திரும்பி அவனைப் பார்த்தார். அதே சமயம், அவன் அவர் முகத்தில் பலங்கொண்ட மட்டும் குத்தினான். சில வினாடிகள் தடுமாறிய பரஞ்சோதி, அடுத்த கணமே பாஸ்கரின் வயிற்றில் ஓங்கிக் குத்தினார். நிலை தடுமாறிக் கீழே விழுந்தான் பாஸ்கர். இருவரும் சிறிது நேரம் கட்டிப் புரண்டார்கள். பிறகு திடீர் என பரஞ்சோதியின் விலாவில் தன் பலங்கொண்ட மட்டும் தாக்கிய பாஸ்கர், சட்டென்று எழுந்து அலமாரியிலிருந்த ஒரு பிச்சுவாவை எடுத்துக் கொண்டு பரஞ்சோதியை நெருங்கினான். அவன் கண்களில் கொலைவேறி தாண்டவமாடியது.

பிச்சுவாவினால் தனக்குக் காயம் வராதபடி எப்படியே சமாளித்துப் பார்த்தார் பரஞ்சோதி. எப்பொழுதும் தன்னுடனேயே அவர் எடுத்துச்செல்லும் கைத் துப்பாக்கியைக்கூட மறந்துவிட்டு வந்திருந்தார். பரஞ்சோதியைக கீழே தள்ளி அவர் நேஞ்சின் மீது முழங்காலை ஊன்றியபடி பிச்சுவாவை ஓங்கினான் பாஸ்கர். பரஞ்சோதியால் திமிற முடியவில்லை. அன்றோடு தன் கதை முடிந்ததென்று நினைத்துக் கொண்டவராய் தன் கண்களை மூடிக் கொண்டார்.

அதே சமயம், "ஆ..." என்ற அலறலுடன் தரையில் விழுந்தான் பாஸ்கர், சட்டென்று தன்னைச் சமாளித்துக் கொண்டு எழுந்த பரஞ்சோதி, கையில் மணல் மூட்டையுடன் ஒரு மனிதன் நிற்பதை பார்த்தார்.

                                                                                                  -தொடரும்...

15 comments:

  1. மர்மக்கதை! ஆரம்பமே அமர்களம்! அடுத்த பகுதி!!!?

    ReplyDelete
    Replies
    1. விரைவில் வெளியிட்டு விடுகிறேன் ஐயா. மிக்க நன்றி.

      Delete
  2. சுவாரஸ்யம் + ஆவல் ... தொடர்கிறேன்...

    நன்றி...
    tm3

    ReplyDelete
    Replies
    1. தொடரும் உங்களுக்கு மனமகிழ்வுடன் என நன்றி.

      Delete
  3. தொடர் சுவாரஸ்யமாய் இருக்கிறது. தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து ரசித்துப் படிக்கும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  4. சுவாரஸ்யமான தொடர்கதை! தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சுவாரஸயம் என்ற உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  5. ஆஹா!! திரும்பவும் சஸ்பென்ஸ்... விறுவிறுப்பா இருக்கு..
    சார் அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்க... இல்லன்ன எனக்கு கதை மறந்திடும்...

    ReplyDelete
    Replies
    1. மறக்கறதுக்குள்ள தொடர்ந்திடறேன் சமீரா. உனக்கு என் இதயம் நிறை நன்றிம்மா.

      Delete
  6. தூள் கெளப்புறீங்க கணேஷ்! ப்ளீஸ் கன்டின்யூ! :-)

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து நீங்கள் தரும் உற்சாகத்துக்கு என் உளம் கனிந்த நன்றிண்ணா.

      Delete
  7. ஆஹா... சுவாரசியம் அதிகமாகி விட்டது... தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் நிறைய சுவாரஸ்ய திருப்பங்கள் காத்திருக்கு வெங்கட். தொடர்ந்து படிக்கும் உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  8. விறுவிறுப்பான தொடர் அடுத்து....

    ReplyDelete