- ‘வாகீச கலாநிதி’ திரு.கி.வா.ஜெகந்நாதன் எழுதியது -
6. சுதமதியின் கதை
உதயகுமாரனை நோக்கி சுதமதி சொல்லலானாள் : ‘‘நீதி திறம்பாத சோழ குலத்தில் உதிதத நினக்குப் பெண்ணாகிய நானா நல்லுரை நவில்வது? ஆயினும் நான் ஒன்று சொல்கிறேன்; கேட்டருள வேண்டும். இந்த உடம்பைப் பற்றிச் சற்றே நினைத்துப் பார். இது வினையினால் வந்தது. வினையை விளைக்கக் கருவியாக இருப்பது. ஆடை அணி இல்லாவிட்டால் வெறும் புலால் பிண்டமாக இருப்பது கிழப்பருவம் எய்தி இறந்து போவது. இதைப் பெரிதாகக் கருதலாமா?" -இவ்வாறு அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பளிங்கு அறைக்குள் இருந்த மணிமேகலையின் உருவம் அவனுக்குத் தோன்றியது.
முதலில் அந்த உருவத்தை ஓவியம் என்று மயங்கினான். அந்தக் கண்ணாடி மண்டபச் சுவரைத் தடவிப் பார்த்தான். அந்த அறைக்குள் புகலாம் என்று எண்ணினான். ‘‘உன் தோழி எங்கே இருக்கிறாள்? எப்படி இருக்கிறாள்?" என்று சுதமதியைக் கேட்டான்.
அவனுடைய உள்ளத்தே எழுந்த ஆசைக் கனலை அவள் உணர்ந்தாள். ‘‘அவள் உன் அழகைக் கண்ணால் பார்க்க மாட்டாள். தவக்கோலம் கொண்டு விட்டாள். அவளுக்குத் தீங்கு இழைத்தால் அவள் விடும் சாபம் அம்பைப் போலத் துன்புறுத்தும். காமனை வென்று விட்டாள் அவள்" என்றாள்.
‘‘வெள்ளம் மிகுதியானால் அதை அடக்க முடியுமோ? அவளை எப்படியும் என் வசப்படுத்துகிறேன், பார்’’ என்று திரும்பினவன், மறுபடியும் சுதமதியைப் பார்த்து, ‘‘அதுசரி... நீ யயாரோ வித்தியாதரனால் அருகன் கோயிலில் விடப்பட்டவள் என்றல்லவா சொன்னார்கள்? இவளோடு வந்த காரணம் என்ன?’’ என்று கேட்டான்.
‘‘அரசிளங்குமர, நான் என் அன்னையை இழந்தேன். மாருதவேகனிடம் சில காலம் இருந்தேன். அவன் என்னை இங்குள்ள அருகன் கோயிலில் கொண்டு வந்து விட்டான். என் தந்தை என்னைக் காணாமல் நெடுகச் சுற்றிக் கடைசியில் இங்கே என்னைக் கண்டார்& பலர் வீடுகளில் இரந்து உண்டு வாழ்ந்தபோது. ஒரு நாள் ஒரு பசு அவனை முட்ட, குடல் வெளியே வந்து விட்டது. அதைப் பிடித்துக் கொண்டு நான் இருந்த இடத்திற்கு வந்து அங்குள்ள முனிவர்களிடம், ‘‘என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்று கதறினான். அவர்கள் சினந்து என்னையும் அவனோடு சேர்த்துத் துரத்தி விட்டார்கள். அப்போது வழியில் சங்கதருமன் என்னும் பௌத்த முனிவன் என் தந்தையைத் தாங்கி ஆதரவு செய்து பௌத்த பிட்சுக்கள் உறையும் இடத்திற் சேர்த்தான். அம்முனிவன், புத்தபிரானுடைய பெருமையை எனக்கு உபதேசித்தான். அதுமுதல் நான் பௌத்த பிட்சுணியாகிய மாதவியுடன் இருந்து வருகிறேன்" என்றாள்.
‘‘சரி, சரி... நான் சித்திராபதியைக் கொண்டு என் காரியத்தைச் சாதித்துக் கொள்கிறேன்" என்று அங்கிருந்து உதயகுமாரன் போய்விட்டான்.
பிறகு மணிமேகலை மெல்ல வெளியே வந்தாள். ‘‘என்னை விலைமகள் என்று அலட்சியமாக அரசிளங்குமரன் எண்ணுகிறான் என்று அறிந்தும் என் மனம் அவன் பின்னே செல்கிறதே! இதுதான் காமத்தியற்கையோ?" என்று தனக்கு உண்டான உணர்ச்சியைச் சொன்னாள். அப்போது இந்திர விழாவைக் காணும் பொருட்டு மணிமேகலா தெய்வம் பூம்புகாரிலுள்ள ஒரு பெண்மணியைப் போலக் கோலம் பூண்டு அங்கே வந்தாள். அவ்விடத்தில் இருந்த புத்தனுடைய பாத பீடத்தை வணங்கிப் புத்தனைத் துதிக்கலானாள்.
‘‘புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்
உலக நோன்பின் உயர்ந்தோய்! என்கோ
குற்றங் கெடுத்தோய் செற்றஞ் செறுத்தோய்!
முற்ற உணர்ந்த முதல்வா என்கோ!"
என்று பலவகையாகத் துதி பாடிக் கொண்டிருந்தாள். அப்போது அந்திமாலை வந்தடைந்தது.
-தொடரும்...

சுவாரஸ்யம்...
ReplyDelete'காமனை வென்று விட்ட' தோழியின் நம்பிக்கையை உடைத்து "இதுதான் காமத்தியற்கையோ...? என்று மயங்கலாமோ...?
மயஙகுதல் தகாதுதான் டி.டி. ஆனால் பல சமயங்களில் கட்டுப்பாட்டை மீறி காதலுணர்ச்சி பொங்கிவிடத்தானே செய்கிறது! அதை அடக்கி மணிமேகலை ஜெயித்தாளா என்பதல்லவா சுவாரஸ்யம்...! தொடர்ந்து படித்து ரசிக்கும் உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteசுவாரஸ்யமாக செல்கிறது கதை. நானும் தொடர்கிறேன்.
ReplyDelete