கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Saturday, September 22, 2012

ங்கே நான் பகிர்ந்திருக்கும் ஒரு டஜன் படங்களைப் பார்த்து முடித்ததும் நீங்களும் என்னைப் போல் பெருமூச்சு விடுவீர்கள் என்பது நிச்சயம். அந்நாட்களில் சென்னை மவுண்ட் ரோடில் மரங்கள் இருந்திருக்கின்றன. திருச்சி மலைக்கோட்டை உச்சியிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பசுமை கொஞ்சுகிறது. (இப்போது போய் எடுத்துப் பார்த்தால் வித்தியாசம் தெரியும்.) மக்கள் தொகையைப் பெருக்கியும். விஞ்ஞான வளர்ச்சியினால் வசதிகளை அதிகரித்தும் நாம் இழந்தது இயற்கையின் பசுமையை. ஹும்ம்ம்!

                             இது மதுரை மாநகரின் தோற்றம் - 1798ல்


மதுரையின் மற்றொரு தோற்றம் 1860ல்

சென்னை மவுண்ட் ரோடுதான் இது 1905ல்

சென்னையில் மன்றோ சிலையின் தோற்றம் 1905ல்


திருச்சி மாநகரம் 1895ல்


 திருச்சி வேறொரு கோணத்தில் 1895ல்திருச்சியின் மற்றொரு கோணம் 1890ல்தஞ்சாவூர் 1858ல்


தஞ்சாவூர் 1869ல்

 
இதுவும் தஞ்சைதான் 1869ல்


திருக்கழுகுன்றம் 1869ல்


இராமநாதபுரம் 1784ல


பழைய படங்களைப் பார்த்தீங்களா. ரசிச்சீங்களா... என்ன தோணுதுன்னு கீழ சொல்லிட்டுப் போங்க. ஆர்வமா காத்திருக்கேன் நான்

   

36 comments:

 1. பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள்

  அற்புதமான படங்கள்

  ReplyDelete
  Replies
  1. பொக்கிசங்களை ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

   Delete
 2. அந்த நாளும் வந்திடாதோ....!

  ReplyDelete
  Replies
  1. வந்திட்டால் நன்றாக இருக்கும் ஸ்ரீராம். நாம கொடுத்து வெச்சது... மிக்க நன்றி.

   Delete
 3. இன்றைய புதுமையை விட பழமை மிகவும் அழகு!

  ReplyDelete
  Replies
  1. பழமையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

   Delete
 4. படங்கள் கொள்ளை அழகு. ரொம்ப ரொம்ப ரசிச்சேன். இப்படி எல்லாம் நிஜமாவே இருந்துதுன்னு பெருமை பட்டுக்கொள்ள இந்த படங்களாவது மிஞ்சி இருக்கேன்னு சந்தோஷ பட்டுக்க வேண்டியதுதான்.

  ReplyDelete
  Replies
  1. காலவெள்ளத்தால் நாம் இழந்த பசுமையை படங்களில் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 5. அந்தக் காலத்திற்குப் போக வழி ஏதாவது இருகிறதா?

  ReplyDelete
  Replies
  1. அதுதா்ன ஐயா என் ஏக்கமும். தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 6. எளிமையாக இருந்த நகரங்கள் இப்போது ஆடம்பரமாகி அலங்கோலமாகி காட்சி அளிக்கின்றன என்பதை நீங்கள் வெளியிட்ட .படங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது...அருமை... தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. பழைய படங்களை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

   Delete
 7. படங்களைப் பார்த்து பெருமூச்சுவிடத்தான் தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. நானும் இதே நிலையில் தான் உள்ளேன் ஐயா. மிக்க நன்றி.

   Delete
 8. அந்தக்காலத்துலே இப்படி எல்லாம் இருந்துச்சே அப்படின்ன
  இந்தக்காலத்துலே ஆதங்கப்பட்டு,
  நொந்துபோன
  ஜந்துக்களே !!

  அவை யாவும்
  அவையாகவே இருந்திருந்தால் ??? !!!


  ..

  பழையன கழிதலும்
  புதியன புகுதலும் வழுவல.
  கால வகையினாலே ....

  ஒரு வேளை...இப்படியே
  ஓராயிரம் வருடத்திற்கு பின்னே
  ஏதோ ஒரு கோளில் அமர்ந்துகொண்டு
  க்ளௌட் கம்ப்யூடிங்கில்
  உங்களது எங்களது கொள்ளுப்பேரன் இல்லை அவரது கொள்ளுப்பேரன்
  இதாண்டி நம்ம பூர்வீகங்கள்
  இருந்த இடம் என்று
  தம் லவ்வுக்கு
  இருண்ட எர்த்தில்
  ஒரு பாலையைக் காட்டும்
  வாய்ப்பும் இருக்கிறது.

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.... அருமையாகச் சொன்னீர்கள் பிற்கால நிலை அப்படியும் நேரலாம். உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 9. வாத்தியாரே இவற்றை பார்க்கும் பொழுதே ரம்மியமாய் உள்ளது... இந்தக் கால கிராமங்களில் சில இப்படித் தான் இன்றளவும் உள்ளது... இங்கு இருக்கும் அமைதி வேறு எங்கு கிடைக்கும்...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் சீனு. நகர நாகரிகங்களின் பாதிப்பால் இன்றும் மாசுபடாமல் இருக்கும் கிராமங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ரசித்துக் கருத்திட்டதற்கு என் மனம் நிறைந்த நன்றி.

   Delete
 10. அரிய படங்கள்... நன்றி சார்...

  மேய்ச்சல் மைதானமும் (தள Template) அழகாக இருக்கு...

  ReplyDelete
  Replies
  1. படங்களையும், தள வடிவமைப்பையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பரே.

   Delete
 11. வாவ்!!! எவ்ளோ அழகான ஊர் நம்மோடது... அருமையான புகைப்பட தொகுப்பு.. இவை எல்லாம் பழைய நாணய கண்காட்சி மாதிரி பார்க்கவேண்டிய நிலை ஆகிவிட்டது...
  நன்றி சார் பகிர்ந்தமைக்கு!!!

  ReplyDelete
  Replies
  1. பழமையை ரசித்த இன்றைய மங்கைக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 12. template கண்களுக்கு குளிச்சியா இதமா.. இருக்கு சார்.. முன்பு விட சூப்பர்...

  ReplyDelete
  Replies
  1. மைதானத்தின் அழகை ரசித்தது எனக்கு மேலும் மகிழ்வு தருகிறது. மிக்க நன்றிம்மா.

   Delete
 13. PASUMAI NIRAINTHA NINAIVUGALE PADI THIRINTHA PARAVAIGALE ENRU PADA THONRUGIRATHU

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்... எனக்கும் கூட நீஙகள் சொன்ன பாடலைப் பாடத்தான் தோன்றுகிறது. மிக்க நன்றி நண்பரே..

   Delete
 14. காணக் கிடைக்காத அற்ப்புத படங்கள்...

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. இரவின் புன்னகை ரசிப்புத் தன்மை மிகுந்து சொன்ன வார்த்தைகள் எனக்கு உற்சாகம் தருகின்றன. மிக்க நன்றி.

   Delete
 15. பழமையைப் போற்றிப் பாதுகாக்கும் ஒரு அரிய வலைத்தளப்பணியைச் செய்வதற்குப் பாராட்டுகள் கணேஷ். படங்கள் அனைத்தும் கண்ணுக்கு நிறைவு. மனத்துக்கு இதம்.

  புதிய வலைப்பூ வடிவமைப்பு அசத்துகிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. பழமையையும் மைதானத்தின் புதிய வடிவையும் ரசித்துக் கருத்திட்டு எனக்கு எனர்ஜி தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி தோழி.

   Delete
 16. அது திருகழுகுன்றமா' இந்த கோவில் மலை மீது அல்லவா இருக்கும்!

  திருவண்ணாமலை மாதிரியும் இருக்கு. அதாவது திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் [மலையில்] இடத்தில் இருந்து எடுத்த படம் மாதிரி இருக்கு.

  can you please clarify?

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் எழுப்பியிருக்கும சந்தேகம் மிகச் சரிதான். அந்தப் படம் இணையத் தேடலில் சிக்கியது. முன்பின் திருக்கழுகுன்றம் சென்றிராததால் என்னால் சரியாக ஒப்பிட்டு சரிபார்க்க இயலவில்லை. மன்னியுங்கள் நண்பரே. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் மனம் நிறைந்த நன்றி.

   Delete
 17. மிகவும் அரிய அழகிய படங்கள்! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! மிகவும் ரசித்தேன்! அந்த காலம் அழகிய காலம்தான்!

  ReplyDelete
  Replies
  1. அந்தக் காலத்தின் அழகை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 18. மாற்றத்தை ரசிக்க கற்றுக்கொண்டால் உலக வாழ்க்கை இனிக்கும்.

  மக்கள்தொகை பெருக்கத்திற்கு காரணம் சினிமாக்காரர்களின் காதல் வியாபாரம்தான். திரைபடங்களில் காட்டியதை வீட்டிற்குள் கொண்டுவந்ததுதான். அதை தற்ப்போது கைபேசியிலும் கொண்டு வந்தாச்சு. இனிமேல் உலக மக்கள்தொகை பத்து மடங்கு பெருகிவிடும்.
  இன்னும் பத்து வருடங்களில் வெறும் கட்டிடங்களை மட்டும் பார்க்கலாம். இப்போது இருக்கும் மரம் செடி கொடிகள் ஒன்றும் அப்போது இருக்காது.

  ReplyDelete
 19. Miha miha arumai!

  Namakkal Venkatachalam

  ReplyDelete