கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Wednesday, May 23, 2012

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

குதிரை, வாகனங்களில் சக்தி மிக்கது. சக்தியின் அளவைக் குறிக்க குதிரைத்தான் குறியீடாகச் சொல்வார்கள். அதன் போக்கில் சுதந்திரமாகத் திரிவதை நாம் வளர்ப்புப் பிராணியாக்கி விட்டோம். என் மனக்குதிரை பல சமயங்களில் இப்படித்தான்... குதிரை போலக் கண்டபடி அலையும். ஒரு இலக்கில்லாமல் பல திசைகளிலும் சுற்றித் திரியும். 

இந்தக் குதிரை மேய்ந்த மைதானங்களிலிருந்து கிடைத்த புற்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறது. நான் படித்த புத்தகங்களில் எனக்குப் பிடித்த புத்தகங்களை உங்களுக்குச் சிபாரிசு செய்வது, தமிழின் நல்ல படைப்புகளின் கதைச் சுருக்கங்களைத் தருவது இவையெல்லாம் இந்தத் தளத்தி்ல் செய்யப் போகிறேன்.

வாழ்க்கைக்கான தேடலில் அனைவரும் ஓடிக் கொண்டு இருக்கிறோம். எல்லாருக்கும் எல்லாப் பத்திரிகையையும் படிக்க நேரம் இருப்பதில்லை. குறிப்பாக, நாம் பிறப்பதற்கு முன்பும், சிறு வயதிலும் வெளிவந்திருக்கும் பழைய பத்திரிகைகள். அப்படி அரிய புத்தகங்களிலிருந்து ரசனைக்குரியவை என்று நான் கருதும் விஷயங்களை ‘கத்தரித்தவை’ என்ற தலைப்பில் தொடர்ந்து பகிர விருப்பம்.

இந்த இரண்டு விஷயங்களுக்காகத்தான் இந்த வலை. இவை மட்டுமே இங்கு இடம்பெறும். விருப்பமுள்ள நண்பர்கள் என்னோடு கை கோர்த்து வாருங்கள். உங்களின் கருத்துக்கள் தானே எனக்கு என்றும் உரைகல்! அதைத் தவறாது வழங்கிடுங்கள். நன்றி!

17 comments:

  1. மேய்ச்சல் மைதானத்தைத் தயார்ப்படுத்தியதோடு, மேய்ச்சலுக்குத் திறந்துவிட்டமைக்கு நன்றி கணேஷ். வரவிருக்கும் புத்தகங்களின் அறிமுகங்களுக்கு ஆவலான வரவேற்புகள். நாம் போற்றிப் பாதுகாக்கவேண்டிய பொக்கிஷங்களுக்கு உரிய மரியாதையை வழங்கமுன்வந்துள்ள உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இனி இனிதாய் மேயட்டும் நம் மனக்குதிரைகள்.

    ReplyDelete
  2. வார்த்தை சரிபார்ப்பை நீக்கிவிட்டால் பதிவிட எளிதாய் இருக்குமே கணேஷ்.

    ReplyDelete
  3. கீதமஞ்சரி said...
    என் இந்தத் தளத்திற்கு முதல் வாசகியாய் வந்து எனக்கு உற்சாகம் தந்த உங்களின் நட்புக்கு மகிழ்வுடன் கூடிய என் மனம் நிறைந்த நன்றி கீதா! எனக்கு இந்த வார்த்தை சரிபார்ப்பு இருக்கும் தளங்கள் பிடிக்காது. நல்லவேளை சொன்னீங்க... இப்ப சரி பண்ணிட்டேன். அதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!

    ReplyDelete
  4. நல்ல முயற்சி .வாழ்த்துக்கள் நீங்கள் பகிர்பவைகளை படிக்க நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  5. இந்தக் குதிரை மேய்ந்த மைதானங்களிலிருந்து கிடைத்த புற்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.

    மேய்ச்சல் மைதானத்தில் நானும்.

    ReplyDelete
  6. @ விமலன்...
    முதல் பின்தொடர்பவராக வந்து என்னை ஆதரித்து ஊக்குவிக்கும் உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி. தொடர்ந்து சுவாரஸ்யமான விஷயங்களையே தர முயல்கிறேன்.

    @ ரிஷபன்...
    மேய்ச்சல் மைதானம் உங்களை மகிழ்வுடன் வரவேற்கிறது. எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான நீங்கள் உடன் வருவது எனக்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் பொறுப்புணர்வை அளிக்கிறது. மிக்க நன்றி!

    ReplyDelete
  7. hello sir/madam
    i read your post interesting and informative. i am doing research on bloggers who use effectively blog for disseminate information.i glad if u wish to participate in my research. if you are interested please contact me through mail. thank u

    ReplyDelete
  8. அன்புள்ள கணேஷ்,

    இனி உங்கள் கேப்ஸ்யூல் நாவல்களை இந்தத் தளத்தில் எதிர்பார்க்கலாமா?

    ReplyDelete
  9. @ balhanuman...

    நிச்சயம் எதிர்பார்க்கலாம் நண்பரே. அதுவும், நூல் அறிமுகங்களும், கத்தரி்த்தவையும் தொடர்ந்து மேய்வதற்குத் தரப்படும்.

    ReplyDelete
  10. ஹா ஹா..
    சாரே..சலிச்சுக்க மட்டும் தான் ப்ளாக் பக்கம் வருவீங்களா?

    ReplyDelete
  11. @ Vigna...

    அப்புடியா...? இனிமே சலிச்சுக்கறதை குறைச்சுக்கறேன் நண்பரே... நன்றி.

    ReplyDelete
  12. தங்கள் மனக்குதிரை மேய்ந்த மைதானத்தில் என் மனக்குதிரையும் மேயத்தயார். வாழ்க்துக்களுடன்

    ReplyDelete
  13. @ வே.நடனசபாபதி...
    வாருங்க நண்பரே... குதிரையின் மேய்ச்சலில் பங்குபெறத் தயார் என்று சொல்லி வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  14. பசுமையான மேய்ச்சல் மைதானம் .. வாழ்த்துகள்..

    ReplyDelete
  15. @ இராஜராஜேஸ்வரி said...

    ‌மேய்ச்சல் மைதானத்தை ரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  16. நல்ல முயற்சி நண்பர் கணேஷ். மைதானத்தில் மேய இந்த குதிரையும் தயார்... இணைந்துவிட்டேன்... தொடர்ந்து வருவேன்....

    ReplyDelete
  17. @ வெங்கட் நாகராஜ்...
    ஆஹா... என்னை ஒத்த ரசனையுடைய இன்னொரு புரவி மைதானத்தில் உலா வருவதில் இணையற்ற மகிழ்ச்சி எனக்கு. வருக, நண்பா... வருக!

    ReplyDelete