நகைச்சுவைக் கதைகள், க்ரைம் கதைகள், பேய்க் கதைகள் என்று எந்தத் துறையைத் தொட்டு எழுதினாலும் தனித்தன்மையுடன் எழுதிக் கலக்கிய ஒரு எழுத்தாளர் மறைந்த ராஜேந்திரகுமார் அவர்கள். ‘ஙே’ என்ற ஓரெழுத்தைச் சொன்னாலே அவர் நினைவு வரும் அளவு அதைப் பிரபலமாக்கியவர். குமுதத்தில் அவர் எழுதிய ‘வால்கள்’ என்கிற தொடர் சிறுகதைகள்தான்...