அவள் குரலிலிருந்த ஏதோ ஒன்று, அவள் எதற்கும் தயாரான அபாயகரமானப் பெண்மணி என்று பரஞ்சோதிக்கு உணர்த்தியது. எனவே மறுபேச்சுப் பேசாமல் அறைக்குள் நுழைந்தார்.அடுத்த வினாடியே கதவை வெளிப்பக்கமாக சாத்தித் தாளிட்ட அகல்யா, மாடிப் படிக்கட்டில் தடதடவேன இறங்கித் தன் கார் இருக்கும் இடத்தை அடைந்து அதை வெகு வேகமாகக் கிளப்பிக் கொண்டு...